தத்வமெருக3 தரமா பர (தத்வ)
அனுபல்லவி
தத்-த்வம்-அஸியனு 1வாக்யார்த2மு
ராம நீவனு பர (தத்வ)
சரணம்
2தாமஸ ராஜஸ கு3ணமுல 3தன்னுகோள்ளு போத3யா
ராம ப4க்துடை3ன த்யாக3ராஜ வினுத வேத3 ஸா1ஸ்த்ர (தத்வ)
பொருள் - சுருக்கம்
இராமனின் தொண்டனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனே, இராமா!
- 'தத்-த்வம்-அஸி' யெனும் வாக்கியத்தின் கருத்து, நீயெனும் பர தத்துவத்தினை அறியத் தரமா?
- தாமத, இராசத குணங்களின் தொல்லைகள் போகாதய்யா;
- மறைகள், சாத்திரங்களின் தத்துவத்தினை அறியத் தரமா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தத்வமு/-எருக3/ தரமா/ பர/ (தத்வ)
தத்துவத்தினை/ அறிய/ தரமா/ பர/ தத்துவத்தினை...
அனுபல்லவி
தத்-த்வம்-அஸி/-அனு/ வாக்ய/-அர்த2மு/
'தத்-த்வம்-அஸி'/ யெனும்/ வாக்கியத்தின்/ கருத்து/
ராம/ நீவு/-அனு/ பர/ (தத்வ)
இராமா/ நீ/ யெனும்/ பர/ தத்துவத்தினை...
சரணம்
தாமஸ/ ராஜஸ/ கு3ணமுல/ தன்னுகோள்ளு/ போத3யா/
தாமத/ இராசத/ குணங்களின்/ தொல்லைகள்/ போகாதய்யா/
ராம/ ப4க்துடை3ன/ த்யாக3ராஜ/ வினுத/ வேத3/ ஸா1ஸ்த்ர/ (தத்வ)
இராமனின்/ தொண்டனாகிய/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ மறைகள்/ சாத்திரங்களின்/ தத்துவத்தினை..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - வாக்யார்த2மு நீவனு - வாக்கியத்தின் கருத்து நீயென - 'தத்-த்வம்-அஸி' என்ற மகாவாக்கியத்தில் 'தத்' என்ற சொல் பரம்பொருளினைச் சுட்டும். தியாகராஜர், ராமனை பரம்பொருளென்கின்றார்.
Top
2 - தாமஸ ராஜஸ - 'தத்-த்வம்-அஸி' என்ற மகாவாக்கியத்தின் கருத்தினை, ஞான மார்க்த்தினால்தான் உணரமுடியுமென பொதுவாக நம்பப்படுகின்றது. தியாகராஜர், பக்தி மார்க்கத்தினாலும் அதனை உணரமுடியும்; அதுவும், தாமத, இராசத குணங்களிற்குட்பட்டிருப்போருக்கும், அது கைகூடும் என்கின்றார். கீதையில் கண்ணன் (18-வது அத்தியாயம், செய்யுட்கள் 65, 66) கூறுவது -
"எனது நினைவாயிருப்பாய்; எனக்குத் தொண்டு செய்வாய்; எனக்கென வேள்வி இயற்றுவாய்; என்னை வணங்குவாய்;
என்னையே நீ அடைவாய்; உனக்கு உண்மையாக வாக்களிக்கின்றேன்; எனக்குப் பிரியமானவன் நீ.
அனைத்து தருமங்களையும் துறந்து, என் ஒருவனையே சரணடைவாய்;
நான், உன்னை, அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; துயருறாதே."
தாமத மற்றும் இராசத குணங்களைக் குறிப்பிட்ட தியாகராஜர், சத்துவ குணத்தினைக் குறிப்பிடவில்லை. ஏனெனில், சத்துவ குணம், மெய்யறிவினை அடையும் சாதனமாக அமைகின்றது. கீதையில் (14-வது அத்தியாயம், 6-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -
"இந்த முக்குணங்களில், சத்துவம், களங்கமற்றது, ஒளிர்வது, தீமையற்றது;
பாவமற்றோனே! அது (சத்துவம்), மனிதனை, சுகத்துடனும், ஞானத்துடனும் பிணைக்கின்றது."
Top
3 - தன்னுகோள்ளு போத3யா - தொல்லைகள் போகாதய்யா - இதுகுறித்து, கீதையில் (18-வது அத்தியாயம், 11-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -
"உடலெடுத்தவனால், கருமங்களை முழுவதுமாகத் துறக்கவியலாது;
ஆனால், கருமங்களின் பயனைத் துறப்பவன், தியாகி எனப்படுவான்."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் அனைத்து ஆங்கில மொழிபெயர்ப்புகளின் தமிழாக்கம்)
Top
தியாகராஜர், தனது 'ராமா நீபை தனகு' என்ற 'கேதார' ராக கீர்த்தனையில், 'உலக இன்பங்களைத் துயக்கையிலும், எனதுள்ளம் உன்னில் நிலைத்துள்ளது' என்கின்றார்.
தத்துவமசி - விளக்கத்திற்கு திருமூலர் திருமந்திரம் எட்டாவது தந்திரம் (36) - 2568 முதல் 2586 காண்க
பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையில்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே (2576)
தாமதம், இராசதம், (சத்துவம்) - முக்குணங்கள்
Top
Updated on 06 Dec 2009
No comments:
Post a Comment