இலலோ 1ப்ரணதார்தி ஹருட3னுசு
பேரெவரிடி3ரே ஸ1ங்கருட3னி நீ(கிலலோ)
அனுபல்லவி
தலசி கரகி3 சிர காலமு பத3முன
த3ண்ட3மிடி3ன நாயெட3 த3ய லேதா3யெ (இலலோ)
சரணம்
2கர 3சரணயுரமு நொஸலு பு4ஜமுலு
த4ரணி ஸோக ம்ரொக்கக3 லேதா3
ஸ1ரணனுசுனு மொரலிட3 லேதா3
பஞ்ச நதீ3ஸ1 த்யாக3ராஜ நுத நீ(கிலலோ)
பொருள் - சுருக்கம்
திருவையாற்றப்பா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- புவியில், பணிந்தோர் துயர் களைவோனென, களிப்பருள்வோனென பெயர் யாரிட்டனரோ உனக்கு?
- நினைந்து, உருகி, பலகாலம் திருவடிகளில் தெண்டனிட்ட என்னிடம் கருணை இலதாயிற்றே;
- கைகள், கால்கள், மார்பு, நெற்றி மற்றும் தோள்கள் நிலத்தினில் பட வணங்கவில்லையா?
- புகலளிப்பாயென முறையிடவில்லையா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இலலோ/ ப்ரணத/-ஆர்தி/ ஹருடு3/-அனுசு/
புவியில்/ பணிந்தோர்/ துயர்/ களைவோன்/ என/
பேரு/-எவரு/-இடி3ரே/ ஸ1ங்கருடு3/-அனி/ நீகு/-(இலலோ)
பெயர்/ யார்/ இட்டனரோ/ களிப்பருள்வோன்/ என/ உனக்கு/?
அனுபல்லவி
தலசி/ கரகி3/ சிர/ காலமு/ பத3முன/
நினைந்து/ உருகி/ பல/ காலம்/ திருவடிகளில்/
த3ண்ட3மு/-இடி3ன/ நாயெட3/ த3ய/ லேதா3யெ/ (இலலோ)
தெண்டன்/ இட்ட/ என்னிடம்/ கருணை/ இலதாயிற்றே/
சரணம்
கர/ சரண/-உரமு/ நொஸலு/ பு4ஜமுலு/
கைகள்/ கால்கள்/ மார்பு/ நெற்றி/ (மற்றும்) தோள்கள்/
த4ரணி/ ஸோக/ ம்ரொக்கக3 லேதா3/
நிலத்தினில்/ பட/ வணங்கவில்லையா/
ஸ1ரணு/-அனுசுனு/ மொரலு/-இட3 லேதா3/
புகலளிப்பாய்/ என/ முறை/ இடவில்லையா/
பஞ்ச நதி3/-ஈஸ1/ த்யாக3ராஜ/ நுத/ நீகு/-(இலலோ)
(திரு) ஐயாறு/ அப்பா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ உனக்கு/...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - சரணயுரமு - சரணயுக3மு.
மேற்கோள்கள்
2 - கர சரணயுரமு நொஸலு பு4ஜமுலு - ஸாஷ்டாங்க நமஸ்காரம் - உடலின் எட்டு அங்கங்கள் நிலத்தினில் பட வணங்குதல். ஸம்ஸ்கிருதம் மற்றும் தெலுங்கு அகராதியின்படி எட்டு அங்கங்களாவன - கைகள், நெற்றி, மார்பு, முழங்கால்கள், கால்கள். தமிழ் அகராதியின்படி முழங்கால்களுக்குப் பதிலாக தோள்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Top
விளக்கம்
1 - ப்ரணதார்தி ஹர - பணிந்தோர் துயர் களைவோன் - திருவையாற்றில் சிவனின் பெயர்.
களிப்பருள்வோன் - சங்கரன்
Top
Updated on 10 Nov 2009
No comments:
Post a Comment