1சூதாமு ராரே ஸு-த3துலார ரங்க3 பதினி
அனுபல்லவி
2ஸீதா பதி பூஜ்யுட3ட ஸ்1ரு2ங்கா3ர ஸே1க2ருட3ட (சூ)
சரணம்
சரணம் 1
ஸரிக3ஞ்சு ஸா1லுவட 3சௌகட்ல போகு3லட
4பருவம்பு ப்ராயமட பரமாத்முட3ட ரங்க3னி (சூ)
சரணம் 2
முக2 நிர்ஜித சந்த்3ருட3ட முத்3து3 மாடலாடு3னட
ஸுக2மொஸங்கி3 ப்3ரோசுனட ஸுந்த3ராங்கு3ட3ட ரங்க3னி (சூ)
சரணம் 3
ஆக3ம ஸஞ்சாருட3ட அகி2ல ஜக3த்பாலுட3ட
த்யாக3ராஜ ஸன்னுதுட3ட தருணுலார ரங்க3 பதினி (சூ)
பொருள் - சுருக்கம்
அழகிய பற்களுடைய மடந்தையரே!
- காண்போம் வாரீர், அரங்க நாதனை!
- சீதாபதியினால் தொழப்பெற்றவனாம்;
- எழிலின் சிகரமாம்;
- சரிகைக்கரை சால்வையாம்;
- முத்துக் கடுக்கன்களாம்;
- பருவ வயதாம்;
- பரம்பொருளாம்;
- முகம் வெல்லுமாம் மதியினையும்;
- முத்தாகப் பேசுவானாம்;
- சுகமளித்துக் காப்பானாம்;
- சுந்தர அங்கங்களோனாம்;
- ஆகமத்துள்ளுறைவோனாம்;
- அனைத்துலகைக் காப்போனாம்;
- தியாகராசனால் சிறக்கப் போற்றப்பெற்றவனாம்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சூதாமு/ ராரே/ ஸு-த3துலார/ ரங்க3/ பதினி/
காண்போம்/ வாரீர்/ அழகிய பற்களுடையோரே/ அரங்க/ நாதனை/
அனுபல்லவி
ஸீதா/ பதி/ பூஜ்யுட3ட/ ஸ்1ரு2ங்கா3ர/ ஸே1க2ருட3ட/ (சூ)
சீதா/ பதியினால்/ தொழப்பெற்றவனாம்/ எழிலின்/ சிகரமாம்/
சரணம்
சரணம் 1
ஸரிக3/-அஞ்சு/ ஸா1லுவட/ சௌகட்ல/ போகு3லட/
சரிகை/ கரை/ சால்வையாம்/ முத்து/ கடுக்கன்களாம்/
பருவம்பு/ ப்ராயமட/ பரமாத்முட3ட/ ரங்க3னி/ (சூ)
பருவ/ வயதாம்/ பரம்பொருளாம்/ அரங்கனை/ காண்போம்...
சரணம் 2
முக2/ நிர்ஜித/ சந்த்3ருட3ட/ முத்3து3/ மாடலு-ஆடு3னட/
முகம்/ வெல்லுமாம்/ மதியினையும்/ முத்தாக/ பேசுவானாம்/
ஸுக2மு/-ஒஸங்கி3/ ப்3ரோசுனட/ ஸுந்த3ர/-அங்கு3ட3ட/ ரங்க3னி/ (சூ)
சுகம்/ அளித்து/ காப்பானாம்/ சுந்தர/ அங்கங்களோனாம்/ அரங்கனை/ காண்போம்...
சரணம் 3
ஆக3ம/ ஸஞ்சாருட3ட/ அகி2ல/ ஜக3த்/-பாலுட3ட/
ஆகமத்து/ உள்ளுறைவோனாம்/ அனைத்துலகை/ காப்போனாம்/
த்யாக3ராஜ/ ஸன்னுதுட3ட/ தருணுலார/ ரங்க3/ பதினி/ (சூ)
தியாகராசனால்/ சிறக்கப் போற்றப்பெற்றவனாம்/ மடந்தையரே/ அரங்க/ நாதனை/ காண்போம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சூதாமு - ஜூதாமு.
Top
மேற்கோள்கள்
2 - ஸீதா பதி பூஜ்யுட3ட - சீதா பதியினால் தொழப்பெற்றவனாம் - திருவரங்கத் தல புராணம் நோக்கவும்.
4 - பருவம்பு ப்ராயமட - பருவ வயதாம் - லலிதா ஸஹஸ்ர நாமம் 430 - நித்ய யௌவனா - என்றும் இளமையானவளே!
Top
விளக்கம்
3 - சௌகட்ல போகு3லட - நான்கு முத்துக்கள் பதித்த கடுக்கன் - சௌ - நான்கு
அழகிய பற்களுடையோர் - பெண்டிர்
சால்வை - போர்வை
Top
Updated on 16 Oct 2009
No comments:
Post a Comment