Friday, August 28, 2009

தியாகராஜ கிருதி - ஈவரகு ஜூசினதி3 - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Ivaraku Juchinadi - Raga Sankarabharanam

பல்லவி
ஈவரகு ஜூசினதி3 சாலதா3 இங்கனா ரீதியா

அனுபல்லவி
பாவனமு ஸேயு ஸ1க்திகணக3னி
பாபமு கலதா3 கரி வரத3 நன்னீ(வரகு)

சரணம்
சரணம் 1
ஸ்ரீ ஸ1ரணாஸு1கா31ன ஸ1யன
பரேஸ1 நீ பத3 குஸே11யார்சனமு
நே ஜேயக து3ராஸசே ப4வ பாஸ1
3த்3து4டை3 கா3ஸி தாளனி நன்னீ(வரகு)


சரணம் 2
பர லோக ப4ய விரஹிதுலைன
நருலு நாது3பை மரியஸூயல
பரசின பா34லு தரமு கா3க நீ
சரண யுக3முலனு ஸ1ரணொந்தி3ன நன்னீ(வரகு)


சரணம் 3
நாகா31ன ஸதா33மன க்4ரு2ணா
ஸாக3ர நினு வினாயெவரு
நீவே க3தியனி வே-வேக3 மொரலனிடு3
த்யாக3ராஜுனி 1ராக3 ரஹித (ஈவரகு)


பொருள் - சுருக்கம்
கரிக்கருள்வோனே! இலக்குமி உறைவிடமே! காற்றை உண்போன் மேற்றுயில்வோனே! மேலான தெய்வமே! அரவுண்போன் மீது எப்போழ்தும் வருவோனே! கருணைக் கடலே! பற்றற்றோனே!

  • என்னை இதுவரை நோக்கியது போதாதா? இன்னமும் அவ்வாறேயா?

  • புனிதப்படுத்தும் (உனது) வல்லமைக்கடங்காத பாவமுண்டா?


    • உனது திருவடித் தாமரையின் வழிபாடு நான் செய்யாது, தீய இச்சைகளினால், பிறவியெனும் பாசத்தில் கட்டுண்டு, துயரம் தாளாத என்னை இதுவரை நோக்கியது போதாதா?

    • மறுமையின் அச்சமற்ற மனிதர்கள், என் மீது, மறுபடியும், பொறாமையினால், விளைவித்த துன்பங்கள் தாள வியலாது, உனது திருவடி இணையினைச் சரணடைந்த என்னை இதுவரை நோக்கியது போதாதா?

  • உன்னையன்றி எவருளர்; நீயே கதியென்று வெகு வேகமாக முறையிடும் தியாகராசனை, இதுவரை நோக்கியது போதாதா?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஈவரகு/ ஜூசினதி3/ சாலதா3/ இங்கனு/-ஆ ரீதியா/
இதுவரை/ நோக்கியது/ போதாதா/ இன்னமும்/ அவ்வாறேயா/


அனுபல்லவி
பாவனமு ஸேயு/ ஸ1க்திகி/-அணக3னி/
புனிதப்படுத்தும்/ (உனது) வல்லமைக்கு/ அடங்காத/

பாபமு/ கலதா3/ கரி/ வரத3/ நன்னு/-(ஈவரகு)
பாவம்/ உண்டா/ கரிக்கு/ அருள்வோனே/ என்னை/ இதுவரை...


சரணம்
சரணம் 1
ஸ்ரீ/ ஸ1ரண/-ஆஸு13/-அஸ1ன/ ஸ1யன/
இலக்குமி/ உறைவிடமே/ காற்றை/ உண்போன்/ (மேல்) துயில்வோனே/

பர/-ஈஸ1/ நீ/ பத3/ குஸே11ய/-அர்சனமு/
மேலான/ தெய்வமே/ உனது/ திருவடி/ தாமரையின்/ வழிபாடு/

நே/ ஜேயக/ து3ராஸசே/ ப4வ/ பாஸ1/
நான்/ செய்யாது/ தீய/ இச்சைகளினால்/ பிறவியெனும்/ பாசத்தில்/

3த்3து4டை3/ கா3ஸி/ தாளனி/ நன்னு/-(ஈவரகு)
கட்டுண்டு/ துயரம்/ தாளாத/ என்னை/ இதுவரை...


சரணம் 2
பர லோக/ ப4ய/ விரஹிதுலைன/
மறுமையின்/ அச்சம்/ அற்ற/

நருலு/ நாது3பை/ மரி/-அஸூயல/
மனிதர்கள்/ என் மீது/ மறுபடியும்/ பொறாமையினால்/

பரசின/ பா34லு/ தரமு/ கா3க/ நீ/
விளைவித்த/ துன்பங்கள்/ தாள/ இயலாது/ உனது/

சரண/ யுக3முலனு/ ஸ1ரணு/-ஒந்தி3ன/ நன்னு/-(ஈவரகு)
திருவடி/ இணையினை/ சரண்/ அடைந்த/ என்னை/ இதுவரை...


சரணம் 3
நாக3/-அஸ1ன/ ஸதா3/ க3மன/ க்4ரு2ணா/
அரவு/ உண்போன்/ மீது/ எப்போழ்தும்/ வருவோனே/ கருணை/

ஸாக3ர/ நினு/ வினா/-எவரு/
கடலே/ உன்னை/ அன்றி/ எவருளர்/

நீவே/ க3தி/-அனி/ வே-வேக3/ மொரலனு/-இடு3/
நீயே/ கதி/ என்று/ வெகு வேகமாக/ முறை/ இடும்/

த்யாக3ராஜுனி/ ராக3/ ரஹித/ (ஈவரகு)
தியாகராசனை/ பற்று/ அற்றோனே/ இதுவரை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராக3 ரஹித (ஈவரகு) - எல்லா புத்தகங்களிலும் 'ராக3 ரஹித நன்னு-(ஈவரகு)' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சரணத்தினில், 'தியாகராஜுனி' என்ற சொல்லைத்தான் பல்லவியுடன் இணைக்கவேண்டும். எனவே, இவ்விடத்தில் 'நன்னு' என்ற சொல் இருக்கக்கூடாது. அதன்படியே இங்கு ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்

காற்றை உண்போன் - அரவு - சேடன்

அரவுண்போன் - கருடன்

Top


Updated on 28 Aug 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
ஈவரகு ஜூசினதி3 சாலதா3- என்பதற்கு என்னை இதுவரை நோக்கியது போதாதா என்றும் Is watching me so far not enough? என்றும் பொருள் கொடுத்துள்ளீர்.
தியாகராஜர் ‘இதுவரை (நான் படும் பாட்டினைக் கருணையின்றிப்) பார்த்தது போதாதோ’ என்று தானே கூறுகிறார். ஜூசினதி என்பது கேலியாகத்தானே கூறப்பட்டுள்ளது. நான் எண்ணுவது சரியெனில் நீங்கள் இதனை விளக்கமாகக் கூறலாம்.
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தியாகராஜரின் கிருதிகள் பல உண்மையில் கிருதிகளே அல்ல. அவர், ராமனுடன் தன்னுடைய உரையாடலையே, பாட்டாகப் பாடுகின்றார். அதனால் பெரும்பாலான கிருதிகளின் சூழ்நிலை புரிவதேயில்லை. அவருடைய கிருதிகளிலிருந்து அவருடைய மனோபாவத்தினைப் புரிந்துகொள்வதும் மிகவும் கடினமாக உள்ளது. நீங்கள் கூறியபடி 'ஜூசினதி3' என்ற சொல் கேலியாகவும் இருக்கலாம். ஆனால், எதுவரை அந்தப் பாடலின் சொற்களே அந்த பா4வத்தினை விளக்கவில்லையோ, அதுவரை அத்தகைய சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்வதே சரியாகும். வலைத் தளத்தில் இந்த கிருதிகளைப் படிப்பவர்கள் தங்களுடைய மனோபா4வத்திற்கு ஏற்ற வகையில் அதன் பொருள் கொள்ளட்டும்.

வணக்கம்
கோவிந்தன்