Wednesday, July 15, 2009

தியாகராஜ கிருதி - வேத3 வாக்யமனி - ராகம் மோஹனம் - Veda Vaakyamani - Raga Mohanam - Nauka Charitram

பல்லவி
1வேத3 வாக்யமனியெஞ்சிரியீ
2வெலது3லெல்ல ஸம்மதிஞ்சிரி

சரணம்
சரணம் 1
சீரலன்னியு வத3லிஞ்சிரியெந்தோ
ஸிக்3கு3 சேதனந்து3னுஞ்சிரி (வேத3)


சரணம் 2
அந்து3ன நிலுவக போயெனு மேனு-
லந்த3ரிகி 3தடு3வனாயெனு (வேத3)


சரணம் 3
4கனுகொந்து3ரோயனி ஸரகு3ன பாலிண்ட்3
கரமுல 5மூய மருகு3னா (வேத3)


சரணம் 4
மானமுலனு மூஸுகொந்து3ரோ தம
ப்ராணமுலனு 6காசுகொந்து3ரோ (வேத3)


சரணம் 5
செலுல 7நோரெண்ட33னாயெனு நீரு
8சிலு சிலுமனியெக்குவாயெனு (வேத3)


சரணம் 6
வல்வலு கானக போயெனு ஸதுல
வத3னமுலடு ஸ்ருக்கனாயெனு (வேத3)


சரணம் 7
கரகி3 கரகி3யங்க3லார்சிரி 9செலுலு
கமலாக்ஷுனுரமுன ஜேர்சிரி (வேத3)


சரணம் 8
கனுல காடுக நீரு காரகா3 ஜூசி
காந்துடெ3ந்தோ முத்3து3 காரக3 (வேத3)


சரணம் 9
ரமணுல மத3மெல்ல ஜரிகெ3னு த்யாக3-
ராஜ நுதுனி மதி3 கரகெ3னு (வேத3)


பொருள் - சுருக்கம்
  • மறைச் சொல்லென எண்ணினர்; இப்பெண்டிர் யாவரும் சம்மதித்தனர்;

  • சேலைகள் யாவற்றினையும் அவிழ்த்தனர், மிக்கு வெட்கத்துடன்; அங்கு (படகின் ஓட்டையில்) இட்டனர்;

  • அங்கு (அவை) நிலைக்காமற் போயின; யாவரின் உடல்களும் நனையலாயின;

  • (பிறர்) காண்பரோயென விரைவாக மார்பகங்களைக் கரங்களினால் மூட, மறையுமோ?

  • மானத்தினை மறைத்துக் கொள்வரோயன்றி தமது உயிரினைக் காத்துக்கொள்வரோ?

  • பெண்களின் நாக்கு வறளலாயிற்று; நீர் சிலு சிலுவென மிகலாயிற்று;

  • ஆடைகள் காணாமற்போயின; பெண்களின் வதனங்களப்படி சுருங்கலாயின;

  • உருகியுருகிக் கதறலாயினர்; மகளிர் கமலக்கண்ணனை மார்போடணைத்தனர்;

  • (பெண்கள்) கண்களின் அஞ்சனம் நீராகப் பெருகக் கண்டு கண்ணாளன் (முகம்) மிக்கு எழில் சொரிய;

  • பெண்களின் செருக்கெல்லாம் கரைந்தது; தியாகராசனால் போற்றப் பெற்றோனின் மனதுருகியது.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வேத3/ வாக்யமு/-அனி/-எஞ்சிரி/-ஈ/
மறை/ சொல்/ என/ எண்ணினர்/ இந்த/

வெலது3லு/-எல்ல/ ஸம்மதிஞ்சிரி/
பெண்டிர்/ யாவரும்/ சம்மதித்தனர்/


சரணம்
சரணம் 1
சீரலு/-அன்னியு/ வத3லிஞ்சிரி/-எந்தோ/
சேலைகள்/ யாவற்றினையும்/ அவிழ்த்தனர்/ மிக்கு/

ஸிக்3கு3 சேதனு/-அந்து3ன/-உஞ்சிரி/ (வேத3)
வெட்கத்துடன்/ அங்கு (படகின் ஓட்டையில்)/ இட்டனர்/


சரணம் 2
அந்து3ன/ நிலுவக/ போயெனு/ மேனுலு/-
அங்கு/ (அவை) நிலைக்காமற்/ போயின/ உடல்கள்/

அந்த3ரிகி/ தடு3வனு-ஆயெனு/ (வேத3)
யாவருக்கும்/ நனையலாயின/


சரணம் 3
கனுகொந்து3ரோ/-அனி/ ஸரகு3ன/ பாலிண்ட்3ல/
(பிறர்) காண்பரோ/ என/ விரைவாக/ மார்பகங்களை/

கரமுல/ மூய/ மருகு3னா/ (வேத3)
கரங்களினால்/ மூட/ மறையுமோ/


சரணம் 4
மானமுலனு/ மூஸுகொந்து3ரோ/ தம/
மானத்தினை/ மறைத்துக் கொள்வரோ/ (அன்றி) தமது/

ப்ராணமுலனு/ காசுகொந்து3ரோ/ (வேத3)
உயிரினை/ காத்துக்கொள்வரோ/


சரணம் 5
செலுல/ நோரு/-எண்ட33னு-ஆயெனு/ நீரு/
பெண்களின்/ நாக்கு/ வறளலாயிற்று/ நீர்/

சிலு/ சிலு/-அனி/-எக்குவ-ஆயெனு/ (வேத3)
சிலு/ சிலு/ வென/ மிகலாயிற்று/


சரணம் 6
வல்வலு/ கானக/ போயெனு/ ஸதுல/
ஆடைகள்/ காணாமற்/ போயின/ பெண்களின்/

வத3னமுலு/-அடு/ ஸ்ருக்கனு-ஆயெனு/ (வேத3)
வதனங்கள்/ அப்படி/ சுருங்கலாயின/


சரணம் 7
கரகி3/ கரகி3/-அங்க3லார்சிரி/ செலுலு/
உருகி/ உருகி/ கதறலாயினர்/ மகளிர்/

கமல/-அக்ஷுனி/-உரமுன/ ஜேர்சிரி/ (வேத3)
கமல/ கண்ணனை/ மார்போடு/ அணைத்தனர்/


சரணம் 8
கனுல/ காடுக/ நீரு/ காரகா3/ ஜூசி/
(பெண்கள்) கண்களின்/ அஞ்சனம்/ நீராக/ பெருக/ கண்டு/

காந்துடு3/-எந்தோ/ முத்3து3/ காரக3/ (வேத3)
கண்ணாளன்/ (முகம்) மிக்கு/ எழில்/ சொரிய/


சரணம் 9
ரமணுல/ மத3மு/-எல்ல/ ஜரிகெ3னு/
பெண்களின்/ செருக்கு/ எல்லாம்/ கரைந்தது/

த்யாக3ராஜ/ நுதுனி/ மதி3/ கரகெ3னு/ (வேத3)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ மனது/ உருகியது/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வெலது3லெல்ல - பொலதுலெல்ல - 'வெலதி3', 'பொலதி' இரண்டுமே பெண்களைக் குறிக்கும். எதுகை மோனையின்படி, 'வெலது3லெல்ல' சரியெனப் படுகின்றது.

3 - தடு3வனாயெனு - எல்லா புத்தகங்களிலும், 'தட3வனாயெனு' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில், 'தட3வு' (தமிழ் சொல்லுக்கு ஈடானது), மற்றும் 'தடு3வு' (தடி3யு) (நனைதல்) என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விடத்தில், 'நனைதல்' என்ற பொருளுடைய சொல்லே பொருந்தும். எனவே 'தட3வனாயெனு' பொருந்தாது. 'தடு3வனாயெனு' அல்லது 'தடி3யனாயெனு' என்றிருக்கவேண்டும்.

4 - கனுகொந்து3ரோயனி - கனுகொந்து3னோயனி : 'கனுகொந்து3னோயனி' இவ்விடத்தில் பொருந்தாது.

5 - மூய - மூஸிதே

6 - காசுகொந்து3ரோ - ப்3ரோசுகொந்து3ரோ

7 - எண்ட33னாயெனு - எண்டனாயெனு

9 - செலுலு - செலுனி : 'செலுனி' பொருந்தாது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வேத3 வாக்ய - மறைச் சொல்லென - தட்டமுடியாதது

8 - சிலு சிலுமனி - சிலு சிலுவென - நீர் ஓட்டையினில் புகும் ஒலி

'நௌக சரித்திரம்' (ஓடக்கதை) எனும் நாட்டிய நாடகத்தினில் வரும் பாடல் இது.

பாடலின் பின்னணி - ஆய்ச்சியர்கள் கண்ணனை யமுனை நதிக்கரையில் சந்தித்து, எல்லோருமாக ஓடத்தில் பயணம் செய்கின்றனர். கண்ணனை சந்தித்த களிப்பில், ஆய்ச்சியர் கண்ணனை தமது சொத்தாக நினைத்து செருக்கடைகின்றனர். அவர்களுடைய செருக்கினை யடக்க, கண்ணன் புயலை உண்டாக்குகின்றான். புயலில் படகு தத்தளிக்கின்றது. படகினில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுகின்றது. கண்ணன் தனக்கு உடல் நலம் குன்றியதாகப் பாசாங்கு செய்கின்றான். அதனால் தாங்கள் எப்படி கரை சேர்வது, கண்ணனை எங்ஙனம் உயிர்காப்பது என பெருங்கவலை கொள்கின்றனர். அதற்கு, கண்ணன் படகின் ஓட்டையை அடைக்க அவர்கள் யாவருடைய ரவிக்கைகளையும் அவிழ்த்து ஓட்டையில் திணிக்கச்சொல்கின்றான். ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தும் ரவிக்கைகளெல்லாம் நீரில் அடித்துக்கொண்டு போய்விடுகின்றன. கண்ணன் அவர்களை தங்களுடைய சேலைகளையும் அவிழ்த்து ஓட்டையை அடைக்கும்படி கூறுகின்றான். இதற்குமேல் இந்தப் பாடல்.

கமலக்கண்ணன் - கண்ணன்

தியாகராசனால் போற்றப் பெற்றோன் - கண்ணன்

Top


Updated on 15 Jul 2009

No comments: