Monday, July 20, 2009

தியாகராஜ கிருதி - எந்தனுசு ஸைரிந்துனு - ராகம் யது3குல காம்போ4ஜி - Entanucu Sairintunu - Raga Yadukula Kambhoji

பல்லவி
எந்தனுசு ஸைரிந்துனு ஸீதா காந்து த3ய ராது3

அனுபல்லவி
1(முனி) சிந்தனீய ஸ்ரீ ராம சந்த்3ர நா
செந்த ரானிங்க மனஸு ராதா3 (எந்த)

சரணம்
சரணம் 1
2ஸம ரஹிதாஸமான நே தா3ஸு-
டா3ஸமான பாலன நா மொரலு
வேஸமாயெனா ஸுஜனாவன ஸு14
கரமாப்த பரிவாராமர வினுத
ரமா ரமணயிதரமா நீகு நே(னெந்த)


சரணம் 2
4-ராஜ முக2 3வ்ரு2ஷப4 ராஜ-ப நுத
இப4 ராஜ வரத3 ஸதா34க்த
ஸுலப4 ராஜன்ய ஸு143 ஸதத
மௌனி ராஜ நுதயவனி ராஜ பரிசர
நிராதங்க நிராமய நே(னெந்த)


சரணம் 3
விராஜ வாஹன 4விராஜமான
கவி ராஜ
ரக்ஷக நா தபமு-
லன்னிவி ராஜஸமுலேனா ஞான-
மொஸக3ராஜ ஜனக நக3 ராஜ த4
த்யாக3ராஜ நுத நாக3 ராஜ ஸ1யன (எந்த)


பொருள் - சுருக்கம்
  • முனிவரால் சிந்திக்கப்படுவோனே, இராம சந்திரா!

  • நிகரற்றோனே! தனிப்பட்டோனே! பேணுவதில் நிகரற்றோனே! நல்லோரைக் காப்போனே! மங்களம் அருள்வோனே! இனியோர் சுற்றத்தோனே! அமரரால் போற்றப் பெற்றோனே! இலக்குமி மணாளா!

  • மதி முகத்தோனே! விடையேறுவோனால் போற்றப் பெற்றோனே! கரிக்கருள்வோனே! எவ்வமயமும் தொண்டருக்கு எளியனே! அரசே! மங்களமருள்வோனே! எவ்வமயமும் உயர் முனிவரால் போற்றப் பெற்றோனே! புவியாள்வோரின் சேவகமுடைத்தோனே! அச்சமற்றோனே! நோயற்றோனே!

  • கருட வாகனனே! ஒளிரும் கவியரசனைக் காப்போனே! பிரமனையீன்றோனே! மலையரசனைச் சுமந்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! அரவரசன் மேற்றுயில்வோனே!


    • எவ்வளவென்று தாளுவேன்? சீதைக் கேள்வனின் தயை வாராது.

    • எனதருகில் வர இன்னமும் மனது வாராதோ?

    • நான் (உனது) தொண்டன்; எனது முறையீடுகள் வேடமானதோ? வேற்றோனா உனக்கு நான்?

    • எனது தவம் யாவும் இராசதத் தன்மையதோ? மெய்யறிவு அருள்வாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/-அனுசு/ ஸைரிந்துனு/ ஸீதா/ காந்து/ த3ய/ ராது3/
எவ்வளவு/ என்று/ தாளுவேன்/ சீதை/ கேள்வனின்/ தயை/ வாராது/


அனுபல்லவி
(முனி)/ சிந்தனீய/ ஸ்ரீ ராம சந்த்3ர/ நா/
முனிவரால்/ சிந்திக்கப்படுவோனே/ ஸ்ரீ ராம சந்திரா/ எனது/

செந்த/ ரானு/-இங்க/ மனஸு/ ராதா3/ (எந்த)
அருகில்/ வர/ இன்னமும்/ மனது/ வாராதோ/


சரணம்
சரணம் 1
ஸம/ ரஹித/-அஸமான/ நே/ தா3ஸுட3/-
நிகர்/ அற்றோனே/ தனிப்பட்டோனே/ நான்/ (உனது) தொண்டன்/

அஸமான/ பாலன/ நா/ மொரலு/
நிகரற்றோனே/ பேணுவதில்/ எனது/ முறையீடுகள்/

வேஸமு/-ஆயெனா/ ஸுஜன/-அவன/ ஸு14/
வேடம்/ ஆனதோ/ நல்லோரை/ காப்போனே/ மங்களம்/

கரமா/-ஆப்த/ பரிவார/-அமர/ வினுத/
அருள்வோனே/ இனியோர்/ சுற்றத்தோனே/ அமரரால்/ போற்றப் பெற்றோனே/

ரமா/ ரமண/-இதரமா/ நீகு/ நேனு/-(எந்த)
இலக்குமி/ மணாளா/ வேற்றோனா/ உனக்கு/ நான்/


சரணம் 2
4-ராஜ/ முக2/ வ்ரு2ஷப4/ ராஜ/-ப/ நுத/
மதி/ முகத்தோனே/ விடை/ அரசன்/ ஏறுவோனால்/ போற்றப் பெற்றோனே/

இப4/ ராஜ/ வரத3/ ஸதா3/ ப4க்த/
கரி/ அரசனுக்கு/ அருள்வோனே/ எவ்வமயமும்/ தொண்டருக்கு/

ஸுலப4/ ராஜன்ய/ ஸு143/ ஸதத/
எளியனே/ அரசே/ மங்களம்/ அருள்வோனே/ எவ்வமயமும்/

மௌனி/ ராஜ/ நுத/-அவனி/ ராஜ/ பரிசர/
முனிவரில்/ உயர்ந்தோரால்/ போற்றப் பெற்றோனே/ புவி/ ஆள்வோரின்/ சேவகமுடைத்தோனே/

நிராதங்க/ நிராமய/ நேனு/-(எந்த)
அச்சமற்றோனே/ நோயற்றோனே/ நான்/ எவ்வளவென்று...


சரணம் 3
விராஜ/ வாஹன/ விராஜமான/
பறவை/ அரசன் (கருட)/ வாகனனே/ ஒளிரும்/

கவி/ ராஜ/ ரக்ஷக/ நா/ தபமுலு/-
கவி/ அரசனை/ காப்போனே/ எனது/ தவம்/

அன்னிவி/ ராஜஸமுலேனா/ ஞானமு/-
யாவும்/ இராசதத் தன்மையதோ/ மெய்யறிவு/

ஒஸக3ரா/-அஜ/ ஜனக/ நக3/ ராஜ/ த4ர/
அருள்வாயய்யா/ பிரமனை/ ஈன்றோனே/ மலை/ அரசனை/ சுமந்தோனே/

த்யாக3ராஜ/ நுத/ நாக3/ ராஜ/ ஸ1யன/ (எந்த)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ அரவு/ அரசன்/ மேற்றுயில்வோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - (முனி) - இச்சொல் எல்லா புத்தகங்களிலும் bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது.

2 - ஸம ரஹிதாஸமான - 'ஸம ரஹித' + 'அஸமான' - இவ்விரண்டு சொற்களுக்குமே 'நிகரற்ற' என்று பொருளாகும். ஒரே பொருளுடைய இவ்விரு சொற்கள் அடுத்தடுத்து வந்தாலும், வேறுவிதமாகப் பிரிக்க இயலாமையினால், முதற்சொல்லுக்கு 'நிகரற்ற' என்றும், அடுத்த சொல்லுக்கு, 'தனிப்பட்ட' என்றும் பொருள் கொள்ளப்பட்டது.

3 - வ்ரு2ஷப4 ராஜ-ப - சில புத்தகங்களில் இச்சொல்லுக்கு, 'நந்தி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'வ்ரு2ஷப4 ராஜ' என்று மட்டுமிருந்தால் 'நந்தி' என்று பொருள் கொள்ளலாம். ஆனால், அடுத்து வரும் 'ப' என்ற சொல் 'தலைவன்' என பொருள்படுவதனால், 'நந்திக்குத் தலைவன்' (விடையேறும்) 'சிவன்' எனப் பொருள் கொள்ளப்பட்டது.

Top

4 - விராஜமான கவி ராஜ - சில புத்தகங்களில், இச்சொல்லுக்கு 'ஜடாயு' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'விராஜமான' என்ற சொல்லில் 'விராஜ' என்பது 'பறவையரசன்' என்ற பொருளில் 'ஜடாயு'வைக் குறிக்கலாம். ஆனால், 'விராஜமான' என்பது ஓரு சொல்லாகும். அதனிலிருந்து 'மான' என்பதனைத் தனியாகப் பிரிக்கமுடியாது. அடுத்து வரும் 'கவி ராஜ' என்ற சொல்லிலிருந்தும் 'விராஜ' என்று பிரித்து, 'ஜடாயு' என்று பொருள் கொள்ளலாம். ஆனால், அதற்குமுன் வரும் 'க' என்பதற்குப் பொருளேதுமில்லை. எனவே, 'விராஜமான கவி ராஜ' என்பது 'ஜடாயு'வைக் குறிக்காது.

தியாகராஜர், தனது 'நாராயண ஹரி' என்ற 'யமுனாகல்யாணி' ராக கீர்த்தனையில், 'கவீன' - 'கவி'+'இன' - 'கவிகளில் சிறந்தோன்' என 'வால்மீகி' முனிவரைக் குறிப்பிடுகின்றார். அங்ஙனமே, இங்கும், 'கவி ராஜ' என்ற சொல்லுக்கு 'வால்மீகி முனிவர்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

விடையேறுவோன் - சிவன்

ஒளிரும் கவியரசன் - வால்மீகி முனிவர்

இராசதத் தன்மை - இச்சைகளினால் உந்தப்பட்டவை

மலையரசன் - மந்தர மலை

அரவரசன் - சேடன்

Top


Updated on 20 Jul 2009

4 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
எந்தனுசு ஸைரிந்துனு என்பதற்கு எவ்வளவென்று தாளுவேன் என்று பொருள் கூறியுள்ளீர்.—பொறுப்பேன் என்பது தமிழில் தாளுவேன் எனப்படுமா. அல்லது ‘தாளுதுனு’ எனும் தெலுங்குச் சொல்லை நீங்கள் இவ்வாறு ‘தற்பவமாக’ மாற்றிவிட்டீரா?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'தாளு' என்பது தெலுங்கு தற்பவச் சொல் என்பதை நான் இன்றே உணர்ந்தேன். அச்சொல் தமிழில் பரவலாக வழக்கில் உள்ளதால் அதனை மாற்றவேண்டியதில்லை என்று கருதுகின்றேன்.

தமிழ் அகராதியில் 'தாளு' நோக்கவும்.

வணக்கம்,
கோவிந்தன்.

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

பொருள் சுருக்கத்திலும் சரணம் 1 பதவுரையிலும் உள்ள உனுக்கு என்ற எழுத்துப்பிழையைத் திருத்தவும்.

சரணம் 1 ல் நே தா3ஸு-டா3ஸமான என்பதை தா3ஸுடு3 அஸமான என்று பிரிக்கலாமா? தாஸூட3 என்பது சரியா?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

பிழைத் திருத்தம் செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

'தா3ஸுட3ஸமான' என்பதனை 'தா3ஸுடு3+அஸமான' என்று பிரிக்கலாம். ஆனால், கொடுக்கப்பட்டிருப்பதோ 'தா3ஸுடா3ஸமான' (டா3). எனவே அதனை 'தா3ஸுட3'+'அஸமான' என்றுதான் பிரிக்க இயலும்.

வணக்கம்
கோவிந்தன்