ப்3ரோவ பா4ரமா ரகு4 ராம பு4வனமெல்ல நீவை நன்னொகனி (ப்3ரோவ)
அனுபல்லவி
ஸ்ரீ 1வாஸு தே3வ அண்ட3 கோட்ல 2குக்ஷினியுஞ்சுகோ லேதா3 நன்னு (ப்3ரோவ)
சரணம்
கலஸா1ம்பு3தி4லோ த3யதோ3னமருலகையதி3 கா3க
4கோ3பிகலகை கொண்ட3லெத்த லேதா3 கருணாகர த்யாக3ராஜுனி (ப்3ரோவ)
பொருள் - சுருக்கம்
இரகு ராமா! வாசு தேவா! கருணாகரா!
- புவனங்கள் யாவும் நீயாகவிருக்க, என்னொருவனைக் காத்தலுனக்கு பளுவா?
- கோடிக்கணக்கான அண்டங்களை (உனது) வயிற்றினில் (நீ) கொள்ளவில்லையா?
- பாற்கடலில், தயையுடன் அமரருக்காகவும், மேலும் கோபியருக்காகவும், மலைகளைச் சுமக்கவில்லையா?
- புவனங்கள் யாவும் நீயாகவிருக்க, தியாகராசனைக் காத்தலுனக்கு பளுவா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோவ/ பா4ரமா/ ரகு4/ ராம/ பு4வனமு/-எல்ல/ நீவை/ நன்னு/-ஒகனி/ (ப்3ரோவ)
காத்தல்/ (உனக்கு) பளுவா/ இரகு/ ராமா/ புவனங்கள்/ யாவும்/ நீயாகவிருக்க/ என்/ ஒருவனை/
அனுபல்லவி
ஸ்ரீ வாஸு/ தே3வ/ அண்ட3/ கோட்ல/ குக்ஷினி/-உஞ்சுகோ லேதா3/ நன்னு/ (ப்3ரோவ)
ஸ்ரீ/ வாசு/ தேவா/ அண்டங்கள்/ கோடிகளை/ (உனது) வயிற்றினில்/ (நீ) கொள்ளவில்லையா/ என்னை/ காத்தல்...
சரணம்
கலஸ1/-அம்பு3தி4லோ/ த3யதோனு/-அமருலகை/-அதி3 கா3க/
கலச (பால்)/ கடலில்/ தயையுடன்/ அமரருக்காகவும்/ மேலும்/
கோ3பிகலகை/ கொண்ட3லு/-எத்த லேதா3/ கருணாகர/ த்யாக3ராஜுனி/ (ப்3ரோவ)
கோபியருக்காகவும்/ மலைகளை/ சுமக்கவில்லையா/ கருணாகரா/ தியாகராசனை/ காத்தல்....
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - வாஸு தே3வ - வாசு தேவன் - யாவற்றிலும் உள்ளுறைவோன் - விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (332) நோக்கவும்.
2 - குக்ஷினியுஞ்சுகோ லேதா3 - உனது வயிற்றினில் நீ கொள்ளவில்லையா : இதுகுறித்து பாகவத புராணம், 3-வது புத்தகம், 33-வது அத்தியாயம், (செய்யுள் 4) (தேவஹூதியின் தோத்திரத்தினை) நோக்கவும்.
பாகவத புராணம், 10-வது புத்தகம், 8-வதுஅத்தியாயத்தில், கண்ணன், தன் தாய், யசோதைக்கு தன் வாயினில் அண்டங்களைக் காட்டுதலையும், கீதையில், (அத்தியாயம் 11) கண்ணன், அர்ஜுனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டுவதனையும் நோக்கவும்.
இது குறித்து வைணவப் பெருந்தகைகளின் விவரங்களையும் நோக்கவும்.
3 - அமருலகை - அமரருக்காக - ஆமையாக, மந்தர மலையைச் சுமந்தது
4 - கோ3பிகலகை - கோபியருக்காக - கண்ணனாக, கோவர்த்தன மலையைச் சுமந்தது
Top
Updated on 18 Jun 2009
No comments:
Post a Comment