ஸ்ரீ நாரஸிம்ஹ மாம் பாஹி
க்ஷீராப்3தி4 கன்யகா ரமண
அனுபல்லவி
தீ3னார்தி நிவாரண ப4வ்ய கு3ண
தி3தி தனய திமிர ஸூர்ய 1த்ரி-நேத்ர (ஸ்ரீ)
சரணம்
ப்ரஹ்லாத3 2பராஸ1ர நாரத3
ஹ்ரு2த்பங்கே-ருஹ நீரஜ ப3ந்தோ4
ஆஹ்லாத3 கர 3அஸு1ப4 ரோக3
ஸம்ஹார வரத3 த்யாக3ராஜாதி3 வினுத (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
- திரு நரசிங்கமே! பாற்கடல் மகளின் மணாளா!
- எளியோர் துயர் தீர்ப்போனே! மங்கள குணங்களோனே! திதி மைந்தன் எனும் இருள் நீக்கும் பரிதியே! முக்கண்ணா!
- பிரகலாதன், பராசரர், நாரதர் ஆகியோரின் இதயக் கமலத்தினை மலரச்செய்யும் பகலவனே! மகிழ்வூட்டுவோனே! கொடிய நோய்களை அழிக்கும் வரதா! தியாகராசன் ஆகியோரால் போற்றப் பெற்றோனே!
- என்னைக் காப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ நாரஸிம்ஹ/ மாம்/ பாஹி/
திரு/ நரசிங்கமே/ என்னை/ காப்பாய்/
க்ஷீர/-அப்3தி4/ கன்யகா/ ரமண/
பால்/ கடல்/ மகளின்/ மணாளா/
அனுபல்லவி
தீ3ன/-ஆர்தி/ நிவாரண/ ப4வ்ய/ கு3ண/
எளியோர்/ துயர்/ தீர்ப்போனே/ மங்கள/ குணங்களோனே/
தி3தி/ தனய/ திமிர/ ஸூர்ய/ த்ரி-நேத்ர/ (ஸ்ரீ)
திதி/ மைந்தன்/ (எனும்) இருள் (நீக்கும்)/ பரிதியே/ முக்கண்ணா/
சரணம்
ப்ரஹ்லாத3/ பராஸ1ர/ நாரத3/
பிரகலாதன்/ பராசரர்/ நாரதர் (ஆகியோரின்)/
ஹ்ரு2த்/-பங்கே-ருஹ/ நீரஜ/ ப3ந்தோ4/
இதய/ கமலத்தினை (மலரச்செய்யும்) கமல/ நண்பனே (பகலவனே)/
ஆஹ்லாத3 கர/ அஸு1ப4/ ரோக3/
மகிழ்வூட்டுவோனே/ கொடிய/ நோய்களை/
ஸம்ஹார/ வரத3/ த்யாக3ராஜ/-ஆதி3/ வினுத/ (ஸ்ரீ)
அழிக்கும்/ வரதா/ தியாகராசன்/ ஆகியோரால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - த்ரி-நேத்ர - முக்கண்ணன் - சிவனைப்போன்று, நரசிங்கத்திற்கும், மூன்று கண்கள் (பரிதி, மதி, நெருப்பு) - பிரகலாதனின் ந்ரு2ஸிம்ஹ கவசம் (செய்யுள் 8) நோக்கவும்.
நரசிங்கத்தின் பேரில் அனேக தோத்திரங்களைக் காணலாம்
Top
விளக்கம்
2 - பராஸ1ர - பராசர முனிவர் - வேதங்களைத் தொகுத்த வியாச முனிவரின் தந்தை.
3 - அஸு1ப4 ரோக3 - கொடிய நோய்கள் - தீய (அபிசார) மந்திரங்களினால் உண்டாவது - நரசிங்கத்தினை வழிபடுவதனால், இவைகள் ஒழியும் என திருக்கடிகை தல புராணம் கூறும்.
ஆதி சங்கரர், காபாலிகரால், காளிக்கு பலியிடப்பட இருந்ததாகவும், அந்நேரத்தில், நரசிங்கம் அவருடைய சீடரின் உருவில் தோன்றி, காபாலிகனை அழித்து, சங்கரரைக் காத்தாராம். அவ்வமயம், சங்கரர் லக்ஷ்மீ-ந்ரு2ஸிம்ஹ தோத்திரம் இயற்றியதாக கூறப்படுகின்றது.
பாற்கடல் மகள் - இலக்குமி
திதி மைந்தன் - இரணிய கசிபு - பிரகலாதனின் தந்தை
Top
Updated on 17 Jun 2009
No comments:
Post a Comment