Sunday, June 14, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீபதே நீ பத3 - ராகம் நாக3 ஸ்வராவளி - Sri-pate Nee Pada - Raga Naga Svaravali

பல்லவி
ஸ்ரீ-பதே நீ பத3 1சிந்தனே ஜீவனமு

அனுபல்லவி
நே பர-தே3ஸி1 நா கா3ஸி பா3பவே சனுவுன த3ய சேஸி (ஸ்ரீ)

சரணம்
ராஜாதி4ராஜ ரவி கோடி தேஜ பூஜிஞ்சி நின்னிந்த்3ராது3லு 2தி3க்3-
ராஜுலை
வெலய லேதா3 ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜுனிகி (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
மா மணாளா! அரசர்க்கரசே! கோடிப் பரிதியொளியோனே!

  • உனது திருவடிகளின் சிந்தனையே (எனக்கு) வாழ்வு.


  • நான் போக்கற்றவன்; எனது துயரினைக் களைவாய், கனிவுடன், தயை செய்து;


  • உன்னைப் பூசித்து இந்திரன் முதலானோர் திசை மன்னர்களாக விளங்கவில்லையா?

  • திகழும் இத்தியாகராசனுக்கு, உனது திருவடிகளின் சிந்தனையே வாழ்வு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/-பதே/ நீ/ பத3/ சிந்தனே/ ஜீவனமு/
மா/ மணாளா/ உனது/ திருவடிகளின்/ சிந்தனையே/ (எனக்கு) வாழ்வு/


அனுபல்லவி
நே/ பர-தே3ஸி1/ நா/ கா3ஸி/ பா3பவே/ சனுவுன/ த3ய/ சேஸி/ (ஸ்ரீ)
நான்/ போக்கற்றவன்/ எனது/ துயரினை/ களைவாய்/ கனிவுடன்/ தயை/ செய்து/


சரணம்
ராஜ/-அதி4ராஜ/ ரவி/ கோடி/ தேஜ/ பூஜிஞ்சி/ நின்னு/-இந்த்3ர/-ஆது3லு/ தி3க்3/-
அரசர்க்கு/ அரசே/ பரிதி/ கோடி/ ஒளியோனே/ பூசித்து/ உன்னை/ இந்திரன்/ முதலானோர்/ திசை/

ராஜுலை/ வெலய லேதா3/ ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜுனிகி/ (ஸ்ரீ)
மன்னர்களாக/ விளங்கவில்லையா/ திகழும்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ மா மணாளா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சிந்தனே - சிந்தன

மேற்கோள்கள்
2 - தி3க்3-ராஜுலு - எண் திசைப் பாலர்

விளக்கம்
மா - இலக்குமி

சிந்தனை - தியானம்

Top


Updated on 14 Jun 2009

No comments: