பலுகு கண்ட3 சக்கெரனு கேருனே 1பணதுலார ஜூட3ரே
அனுபல்லவி
கொலுவு கூடமுனனு கொலுசு வாரினி
பிலிசி தா3ஸ1ரதி2 ப்ரேம மீர 2பலிகே (பலுகு)
சரணம்
ஸுருல காமினீ மணுல கா3ன-
மாத3ரணனாலகிஞ்சுசுனு 3ஸ்1ரு2ங்கா3ர
ரஸ யுக்த 4வார ரமணுலாட3 ஜூசி
ஸரஸ 5த்யாக3ராஜுனிதோனு 6பொக3டே3 (பலுகு)
பொருள் - சுருக்கம்
வனிதையரே, காணீர்!
- சொற்கள் கண்டசருக்கரையைப் பழிக்குமே!
- கொலுவுக் கூடத்தினில் சேவிப்போரை அழைத்து, தாசரதி பரிவு மிகப் பகரும்
- சொற்கள், கண்டசருக்கரையைப் பழிக்குமே!
- வானோர் பெண்மணிகளின் இசையை கனிவுடன் செவிமடுத்துக்கொண்டு,
- சிங்காரச் சுவையுடை ஆடல் மகளிர் ஆடக்கண்டு,
- இனிமையாக, தியாகராசனுடன் புகழ்ந்துரைக்கும்
- சொற்கள், கண்டசருக்கரையைப் பழிக்குமே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பலுகு/ கண்ட3/ சக்கெரனு/ கேருனே/ பணதுலார/ ஜூட3ரே/
சொற்கள்/ கண்ட/ சருக்கரையை/ பழிக்குமே/ வனிதையரே/ காணீர்/
அனுபல்லவி
கொலுவு/ கூடமுனனு/ கொலுசு வாரினி/
கொலுவு/ கூடத்தினில்/ சேவிப்போரை/
பிலிசி/ தா3ஸ1ரதி2/ ப்ரேம/ மீர/ பலிகே/ (பலுகு)
அழைத்து/ தாசரதி/ பரிவு/ மிக/ பகரும்/ சொற்கள்...
சரணம்
ஸுருல/ காமினீ/ மணுல/ கா3னமு/-
வானோர்/ பெண்/ மணிகளின்/ இசையை/
ஆத3ரணனு/-ஆலகிஞ்சுசுனு/ ஸ்1ரு2ங்கா3ர/
கனிவுடன்/ செவிமடுத்துக்கொண்டு/ சிங்கார/
ரஸ/ யுக்த/ வார/ ரமணுலு/-ஆட3/ ஜூசி/
சுவை/ யுடை/ ஆடல்/ மகளிர்/ ஆட/ கண்டு/
ஸரஸ/ த்யாக3ராஜுனிதோனு/ பொக3டே3/ (பலுகு)
இனிமையாக/ தியாகராசனுடன்/ புகழ்ந்துரைக்கும்/ சொற்கள்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பணதுலார - புத்தகங்களில், இச்சொல்லுக்கு 'பெண்கள்' என்றும் 'தோழிகள்' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கு அகராதியில் 'பணதி' என்ற சொல்லுக்கு அப்படிப்பட்ட பொருளில்லை. தியாகராஜர், 'நௌகா சரித்திர'த்திலும், 'பணதி' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அங்கு, அச்சொல்லுக்கு, 'பெண்மணி' என்று பொருள்படும்.
சம்ஸ்கிருதச் சொல் 'ப்ரணயின்' மற்றும், அதற்குச் சமமான தெலுங்கு சொல், 'ப்ரணயினி' என்பது 'இனிய பெண்', 'மனைவி' என்று பொருள்படும். எனவே, 'பணதி' என்ற சொல், இந்த சொல்லிலிருந்து (ப்ரணயினி) வந்திருக்கலாம். மேலும், தெலுங்கில், சில சொற்களின் தொடக்கத்தில், 'ப' - 'ப்ர' என்பது மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகின்றது - 'பக்கல' - 'ப்ரக்கல'.
2 - பலிகே - பலுகு : இவ்விடத்தினில் 'பலிகே' பொருந்தும்.
5 - த்யாக3ராஜுனிதோனு - த்யாக3ராஜ நுதுனிதோனு : 'த்யாக3ராஜ நுதுனிதோனு' என்ற சொல்லுக்கு 'தியாகராஜனால் போற்றப் பெற்றவனுடன்' (அதாவது ராமன்) என்று பொருளாகும். அதன்படி, 'ராமன் தனக்குத்தானே பேசிக்கொள்கின்றான்' என்று பொருளாகும். இங்கு 'ராமன், தியாகராஜனுடன் பகர்வதாக'த்தான் பொருள் கொள்ளவேண்டும். எனவே, 'த்யாக3ராஜ நுதுனிதோனு' தவறாகும்.
6 - பொக3டே3 - பொக3டு3
Top
மேற்கோள்கள்
3 - ஸ்1ரு2ங்கா3ர ரஸ - நவ ரசங்களில் முதன்மையான சிங்கார ரசம். நவ ரசங்களாவன - சிங்காரம், வீரம், வெறுப்பு, சினம், நகைச்சுவை, அச்சம், கருணை, வியப்பு, அமைதி. சில இடங்களில் 'வாத்ஸல்யம்' எனப்படும் 'பெற்றோரின் பரிவும்' இப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
4 - வார ரமணுலு - தேவதாசிகள் எனப்படும் ஆடல் மகளிர்.
Top
விளக்கம்
இப்பபாடல் நாயகி பா4வத்தில் அமைந்துள்ளது.
கண்டசருக்கரை - கற்கண்டெனவும் கொள்ளலாம்
தாசரதி - தசரதன் மைந்தன் - இராமன்
Top
Updated on 14 Jun 2009
No comments:
Post a Comment