Monday, May 4, 2009

தியாகராஜ கிருதி - மரி மரி நின்னே - ராகம் காம்போ4ஜி - Mari Mari Ninne - Raga Kaambhoji

பல்லவி
மரி மரி நின்னே மொரலிட3 நீ மனஸுன த3ய ராது3

அனுபல்லவி
கரி மொர வினி ஸரகு3ன சன நீகு
காரணமேமி ஸர்வாந்தர்யாமி (மரி)

சரணம்
கருணதோ த்4ருவுனிகெது3ட நில்சின கத2 வின்னானய்ய
ஸுர ரிபு தனயுனிகை நர ம்ரு23மௌ ஸூசனலேமய்ய
1மரசியுன்ன வன சருனி ப்3ரோசின மஹிம தெலுபவய்ய
4ரனு வெலயு த்யாக3ராஜ ஸன்னுத தரமு காதி32நே வினனய்ய (மரி)


பொருள் - சுருக்கம்
யாவரின் உள்ளியங்குவோனே! புவியில் விளங்கும், தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • திரும்பத் திரும்ப உன்னையே முறையிட, உனது மனதினில் தயை வாராது

  • கரியின் முறையீட்டினைக் கேட்டு விரைந்து செல்ல உனக்குக் காரணமென்ன?

  • கருணையுடன் துருவனின் முன் நின்ற கதை செவி மடுத்தேனய்யா!

  • வானோர் பகைவன் மைந்தனுக்கென நரசிங்கமாகிய செய்தி யென்னவைய்யா?

  • (வாக்குறுதியினை) மறந்திருந்த வனத்துறைவோனைக் காத்த மகிமையினைத் தெரிவியுமைய்யா;

  • தரமன்று இனியும்;

  • நான் கேளேனய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரி/ மரி/ நின்னே/ மொரலு-இட3/ நீ/ மனஸுன/ த3ய/ ராது3/
திரும்ப/ திரும்ப/ உன்னையே/ முறையிட/ உனது/ மனதினில்/ தயை/ வாராது/


அனுபல்லவி
கரி/ மொர/ வினி/ ஸரகு3ன/ சன/ நீகு/
கரியின்/ முறையீட்டினை/ கேட்டு/ விரைந்து/ செல்ல/ உனக்கு/

காரணமு/-ஏமி/ ஸர்வ/-அந்தர்யாமி/ (மரி)
காரணம்/ என்ன/ யாவரின்/ உள்ளியங்குவோனே/


சரணம்
கருணதோ/ த்4ருவுனிகி/-எது3ட/ நில்சின/ கத2/ வின்னானு/-அய்ய/
கருணையுடன்/ துருவனின்/ முன்/ நின்ற/ கதை/ செவி மடுத்தேன்/ அய்யா/

ஸுர/ ரிபு/ தனயுனிகை/ நர/ ம்ரு23மௌ/ ஸூசனலு/-ஏமய்ய/
வானோர்/ பகைவன்/ மைந்தனுக்கென/ நர/ சிங்கமாகிய/ செய்தி/ என்ன/ அய்யா/

மரசி/-உன்ன/ வன/ சருனி/ ப்3ரோசின/ மஹிம/ தெலுபு/-அய்ய/
(வாக்குறுதியினை) மறந்து/ இருந்த/ வனத்து/ உறைவோனை/ காத்த/ மகிமையினை/ தெரிவியும்/ அய்யா/

4ரனு/ வெலயு/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ தரமு/ காது3/-இக/ நே/ வினனு/-அய்ய/ (மரி)
புவியில்/ விளங்கும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தரம்/ அன்று/ இனியும்/ நான்/ கேளேன்/ அய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நே வினனய்ய - நே வினவய்ய : இவ்விடத்தில் 'நே வினனய்ய' பொருத்தமாகும்.

Top

மேற்கோள்கள்
1 - மரசியுன்ன வன சருனி - (வாக்குறுதியினை) மறந்திருந்த வனத்துறைவோன் - சுக்கிரீவன் - வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயம் 30 நோக்கவும்.

Top

விளக்கம்
வானோர் பகைவன் - இரணியன்
வானோர் பகைவன் மைந்தன் - பிரகலாதன்
வனத்துறைவோன் - சுக்கிரீவன்
புவியில் விளங்கும் - இறைவனைக் குறிக்கும்

Top


Updated on 04 May 2009

3 comments:

Anand Balasubramanian said...

Dear Sir,

I read your explanation of the song Mari Mari Ninne today after getting a thought about this song during meditation. Your explanation is wonderful and I wanted to personally thank you for enlightening all of us with your knowledge.

Thanks once again sir,
Anand Balasubramanian.

Unknown said...

wonderful i understand song now
so i enjoyed the melody only

Unknown said...

excellent knowledgeable information
thanks