Wednesday, May 6, 2009

தியாகராஜ கிருதி - மஹித ப்ரவ்ரு2த்3த4 - ராகம் காம்போ4ஜி - Mahita Pravrddha - Raga Kaambhoji

பல்லவி
1மஹித ப்ரவ்ரு2த்34 ஸ்ரீமதி கு3ஹ க3ண பதி ஜனனி

அனுபல்லவி
பாஹி வத3ன ஜித ஸுதா4-கரே ஸ்ரீகரே
பாஹி ஸுகு3ண ரத்னாகரே (மஹித)

சரணம்
சரணம் 1
தே3ஹி சரண ப4க்திமகி2ல தே3ஹினி ஸதா3 ஸு14
2லதே3 ஹிம கி3ரி தனயே வைதே3ஹீ-ப ஸஹோத3ரி (மஹித)


சரணம் 2
வாஹினீஸ1 ஸன்னுதே 2நவாஹி பூ4ஷ வல்லபே4
4வாஹி 3நீல கண்டி2 4ஸிம்ஹ வாஹினி ஜனனி (மஹித)


சரணம் 3
பார்த2 ஸன்னுத ப்ரியே 5பதா3ர்தே2 அபுண்ய தூ3ரே
காமிதார்த22லதே3 ஸ்ரீ தபஸ்தீர்த2 புர நிவாஸினி (மஹித)


சரணம் 4
ராஜ ஸே12ராத்ம-பூ4 விராஜ ராஜ ஸன்னுதே
ஸரோஜ த3ள நிபா4க்ஷி த்யாக3ராஜ பா4க்3ய தா3யகி (மஹித)


பொருள் - சுருக்கம்
  • மகிமை மிக்கு திருமதியே! குகன் கணபதியை ஈன்றவளே!

  • வதனத்தில் மதியை வென்றவளே! சீரருள்பவளே! நற்குணக் கடலே (இரத்தினச் சுரங்கமே)!

  • அனைத்துலக வடிவினளே! எவ்வயமும் நலன் அருள்பவளே! இமவான் மடந்தையே! வைதேகி மணாளன் சோதரியே!

  • கடலரசனால் போற்றப் பெற்றவளே! அரவணிவோன் இல்லாளே! பிறவிக் கடலெனும் அரவினுக்கு மயிலே! அரியேறுபவளே! (எமை) ஈன்றவளே!

  • பார்த்தனால் போற்றப் பெற்றோனுக்கினியவளே! சொற்பொருளே! நல்வினை யற்றோருக்கு துரமே! வேண்டியவற்றின் பயனருள்பவளே! திருத்தவத்துறை நகருறையே!

  • மதியணிவோன், தான்தோன்றி, கருடனின் தலைவனால் போற்றப் பெற்றவளே! தாமரையிதழ் நிகர் கண்ணினளே! தியாகராசனுக்கு பேறருள்பவளே!

    • காப்பாய்.

    • அருள்வாய் திருவடிப் பற்றினை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மஹித/ ப்ரவ்ரு2த்34/ ஸ்ரீமதி/ கு3ஹ/ க3ண/ பதி/ ஜனனி/
மகிமை/ மிக்கு/ திருமதியே/ குகன்/ கண/ பதியை/ ஈன்றவளே/


அனுபல்லவி
பாஹி/ வத3ன/ ஜித/ ஸுதா4-கரே/ ஸ்ரீ-கரே/
காப்பாய்/ வதனத்தில்/ வென்றவளே/ மதியை/ சீர்/ அருள்பவளே/

பாஹி/ ஸுகு3ண/ ரத்னாகரே/ (மஹித)
காப்பாய்/ நற்குண/ கடலே (இரத்தினச் சுரங்கமே)/


சரணம்
சரணம் 1
தே3ஹி/ சரண/ ப4க்திம்/-அகி2ல/ தே3ஹினி/ ஸதா3/ ஸு14/
அருள்வாய்/ திருவடி/ பற்றினை/ அனைத்துலக/ வடிவினளே/ எவ்வயமும்/ நலன்/

2லதே3/ ஹிம கி3ரி/ தனயே/ வைதே3ஹீ/-ப/ ஸஹோத3ரி/ (மஹித)
அருள்பவளே/ இமவான்/ மடந்தையே/ வைதேகி/ மணாளன்/ சோதரியே/


சரணம் 2
வாஹினி/-ஈஸ1/ ஸன்னுதே/ நவ-அஹி/ பூ4ஷ/ வல்லபே4/
கடல்/ அரசனால்/ போற்றப் பெற்றவளே/ உயர்/ அரவு/ அணிவோன்/ இல்லாளே/

4வ/-அஹி/ நீல கண்டி2/ ஸிம்ஹ/ வாஹினி/ ஜனனி/ (மஹித)
பிறவிக் கடலெனும்/ அரவினுக்கு/ மயிலே/ அரி/ ஏறுபவளே/ (எமை) ஈன்றவளே/


சரணம் 3
பார்த2/ ஸன்னுத/ ப்ரியே/ பத3/-அர்தே2/ அபுண்ய/ தூ3ரே/
பார்த்தனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ இனியவளே/ சொற்/ பொருளே/ நல்வினை யற்றோருக்கு/ துரமே/

காமித-அர்த2/ ப2லதே3/ ஸ்ரீ தபஸ்தீர்த2/ புர/ நிவாஸினி/ (மஹித)
வேண்டியவற்றின்/ பயனருள்பவளே/ திருத்தவத்துறை/ நகர்/ உறையே/


சரணம் 4
ராஜ/ ஸே12ர/-ஆத்ம/-பூ4/ விராஜ/ ராஜ/ ஸன்னுதே/
மதி/ அணிவோன்/ தான்/ தோன்றி/ கருடனின்/ தலைவனால்/ போற்றப் பெற்றவளே/

ஸரோஜ/ த3ள/ நிப4/-அக்ஷி/ த்யாக3ராஜ/ பா4க்3ய/ தா3யகி/ (மஹித)
தாமரை/ இதழ்/ நிகர்/ கண்ணினளே/ தியாகராசனுக்கு/ பேறு/ அருள்பவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - மஹித ப்ரவ்ரு2த்34 ஸ்ரீமதி - திருமதி - திருத்தவத்துறையில் அம்மையின் பெயர் : 'பெருந்திருப் பிராட்டியார்' என்றும் அம்மைக்குப் பெயருண்டு. 'மஹித ப்ரவ்ரு2த்34' என்பதன் தமிழ்ச்சொல் 'பெருந்திருப் பிராட்டி'யா என்பது தெரியவில்லை. அதனால், 'மகிமை மிக்க' என்று பொருள் கொள்ளப்பட்டது.

4 - ஸிம்ஹ வாஹினி - அரி ஏறுபவள். வட இந்தியாவில், துர்க்கை, 'ஸிம்ஹ வாஹினி' என்று அழைக்கப்பட்டாலும், வாகனம் புலியாகும். இதற்கு ஒரு காரணத்தினை இந்த web site-ல் காணவும்.

5 - பதா3ர்தே2 - பொருட்களின் சாரம். இது குறித்து கடோபநிடத விளக்கவுரையில் காணவும்.

Top

விளக்கம்
2 - நவாஹி - நவ என்ற சொல்லுக்கு 'ஒன்பது', 'புதிய', 'உயர்' ஆகிய பொருள்களுண்டு.

3 - நீல கண்டி2 - சிவனுக்கு நீலகண்டன் என்று பெயர். ஆனால் மயிலுக்கும் அது காரணப்பெயராகும்.

Top

குகன் - முருகன்
வைதேகி மணாளன் - இராமன்
பார்த்தன் - அருச்சுனன்
பார்த்தனால் போற்றப் பெற்றோன் - கண்ணன்
சொற்பொருளே - 'பொருட்களின் சாரமே' என்றும் கொள்ளலாம்
மதியணிவோன் - சிவன்
தான்தோன்றி - பிரமன்
கருடனின் தலைவன் - அரி

Top


Updated on 06 May 2009

No comments: