ஓ ரங்க3 1ஸா1யி 2பிலிசிதே
ஓயனுசு ரா ராதா3
அனுபல்லவி
3ஸாரங்க3 த4ருடு3 4ஜூசி
கைலாஸாதி4புடு3 கா லேதா3 (ஓ)
சரணம்
பூ4-லோக வைகுண்ட2மிதி3யனி
நீ லோன நீவேயுப்பொங்கி3
5ஸ்ரீ லோலுடை3யுண்டே மா
சிந்த தீரேதெ3ன்னடோ3
மேலோர்வ லேனி ஜனுலலோ நே
மிகு3ல நொகி3லி தி3வ்ய ரூபமுனு
முத்யால ஸருலயுரமுனு கான
வச்சிதி த்யாக3ராஜ ஹ்ரு2த்3பூ4ஷண (ஓ)
பொருள் - சுருக்கம்
ஓ திருவரங்கத்தில் பள்ளிகொண்டோனே! தியாகராசனின் இதய அணிகலனே!
- அழைத்தால், 'ஓ'யென வரலாகாதா?
- சாரங்கமேந்துவோன் (உன்னைக்) கண்டு கைலாய பதியாகினானன்றோ!
- பூலோக வைகுண்டமிஃதென, உன்னுள் நீயே பெருமிதமுற்று, இலக்குமியுடன் குலவிக்கொண்டிருந்தால், எமது கவலைகள் தீருவதென்றோ?
- (பிறரின்) மேன்மை சகிக்காத மனிதர்களிடை, நான் மிக்கு துயருற்று (உனது) திவ்விய உருவத்தினை, முத்துச் சரங்கள் விளங்கும் திருமார்பினைக் காண வந்தேன்
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ/ ரங்க3/ ஸா1யி/ பிலிசிதே/
ஓ/ திருவரங்கத்தில்/ பள்ளிகொண்டோனே/ அழைத்தால்/
ஓ/-அனுசு/ ரா ராதா3/
'ஓ'/ யென/ வரலாகாதா/
அனுபல்லவி
ஸாரங்க3/ த4ருடு3/ ஜூசி/
சாரங்கம்/ ஏந்துவோன்/ (உன்னைக்) கண்டு/
கைலாஸ/-அதி4புடு3/ கா லேதா3/ (ஓ)
கைலாய/ பதி/ ஆகினானன்றோ/
சரணம்
பூ4-லோக/ வைகுண்ட2மு/-இதி3/-அனி/
பூலோக/ வைகுண்டம்/ இஃது/ என/
நீ லோன/ நீவே/-உப்பொங்கி3/
உன்னுள்/ நீயே/ பெருமிதமுற்று/
ஸ்ரீ/ லோலுடை3/-உண்டே/ மா/
இலக்குமியுடன்/ குலவிக்கொண்டு/ இருந்தால்/ எமது/
சிந்த/ தீரேதி3/-என்னடோ3/
கவலைகள்/ தீருவது/ என்றோ/
மேலு/-ஓர்வ லேனி/ ஜனுலலோ/ நே/
(பிறரின்)மேன்மை/ சகிக்காத/ மனிதர்களிடை/ நான்/
மிகு3ல/ நொகி3லி/ தி3வ்ய/ ரூபமுனு/
மிக்கு/ துயருற்று/ (உனது) திவ்விய/ உருவத்தினை/
முத்யால/ ஸருல/-உரமுனு/ கான/
முத்து/ சரங்கள்/ (விளங்கும்) திருமார்பினை/ காண/
வச்சிதி/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்3/-பூ4ஷண/ (ஓ)
வந்தேன்/ தியாகராசனின்/ இதய/ அணிகலனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸா1யி - ஸா1யீ
2 - பிலிசிதே - பிலசிதே
Top
மேற்கோள்கள்
3 - ஸாரங்க3 த4ருடு3 - சாரங்கம் - மான்; சாரங்கமேந்துவோன் - சிவன் : தாருகாவனத்தில் பி3க்ஷாடனராக (பிச்சைக்காரனாக) சிவன் சென்று, அங்கு, கடவுளை நம்பாத இருடிகளுக்கு பாடம் புகட்டி, அவ்விருடிகள் ஏவிய மான் ஆகியவற்றினை தன்னுடைய அலங்காரப் பொருள்களாக ஏற்றுக்கொண்டான். இதுகுறித்து இந்த web site-களில் காணவும். பிக்ஷாடனர் மற்றும் சிவனின் திருவிளையாடல்கள் - (pdf download)
'சாரங்கம்' என விஷ்ணுவின் வில்லுக்கும் பெயராகும். அதனால் 'சாரங்கபாணி' என விஷ்ணுவுக்கப் பெயர். அந்த பொருள் இங்கு பொருந்தாது.
திருவரங்கப் பெருமானைப் பற்றிய விவரங்கள் மற்றும் இந்த கீர்த்தனை தியாகராஜர் பாடிய அமயத்தினைக் குறித்தும் அறிய திருவரங்கம் தல புராணம் நோக்கவும்
ஆதி சங்கரரின் ரங்கநாத அஷ்டகம்
Top
விளக்கம்
4 - ஜூசி கைலாஸாதி4புடு3 கா லேதா3 - கண்டு கயிலாய பதி ஆகினானன்றோ - இந்த சம்பவத்தினைக் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
5 - ஸ்ரீ லோலுடை3யுண்டே - இலக்குமியுடன் குலவிக்கொண்டிருந்தால் - தியாகராஜர், அரங்கநாதன் 'தொண்டர்களைப் பேணும் தொழிலையும் மறந்துள்ளான்' என கேலி செய்கின்றார்.
Top
Updated on 04 May 2009
1 comment:
திரு கோவிந்தன் அவர்களே
’தியாகராஜர் பாடிய அமயத்தினை’ என்று தாங்கள் கூறியது சிலருக்குக் குழப்பத்தைத் தரலாம். இலக்கியத்தில் அமயம் என்று வழங்கப் படுவதை மறுக்காவிட்டாலும் பேச்சு வழக்கில் சமயம் என்று தானே உள்ளது.
வணக்கம்
கோவிந்தசாமி
Post a Comment