ஸீதா பதீ நா மனஸுன
ஸித்3தா4ந்தமனியுன்னானுரா
அனுபல்லவி
வாதாத்மஜாது3ல செந்தனே
வர்ணிஞ்சின நீ பலுகுலெல்ல (ஸீதா)
சரணம்
ப்ரேம ஜூசி நாபை பெத்3த3 மனஸு ஜேஸி
நீ மஹிமலெல்ல நிண்டா3ர ஜூபி
ஈ மஹினி ப4யமேடிகன்ன மாட
ராம சந்த்3ர த்யாக3ராஜ வினுத (ஸீதா)
பொருள் - சுருக்கம்
சீதைக் கேள்வா! இராமசந்திரா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- எனது மனதினில் சித்தாந்தமெனக் கொண்டுளேனய்யா!
- அனுமன் முதலானோர் முன்னிலையில், வருணித்த உனது் சொற்கள் யாவற்றினையும் எனது மனதினில் சித்தாந்தமெனக் கொண்டுளேனய்யா!
- அன்பு காட்டி, என்மீது பெரியமனது செய்து,
- உனது மகிமைகளையெல்லாம் நிறையக் காண்பித்து,
- 'இப்புவியில், அச்சமெதற்கு?' எனப் பகன்ற சொல்லினை,
- எனது மனதினில் சித்தாந்தமெனக் கொண்டுளேனய்யா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதா/ பதீ/ நா/ மனஸுன/
சீதை/ கேள்வா/ எனது/ மனதினில்/
ஸித்3தா4ந்தமு/-அனி/-உன்னானுரா/
சித்தாந்தம்/ என/ கொண்டுளேனய்யா/
அனுபல்லவி
வாத/-ஆத்மஜ/-ஆது3ல/ செந்தனே/
வாயு/ மைந்தன்(அனுமன்)/ முதலானோர்/ முன்னிலையில்/
வர்ணிஞ்சின/ நீ/ பலுகுலு/-எல்ல/ (ஸீதா)
வருணித்த/ உனது/ சொற்கள்/ யாவற்றினையும்/ சீதை...
சரணம்
ப்ரேம/ ஜூசி/ நாபை/ பெத்3த3/ மனஸு/ ஜேஸி/
அன்பு/ காட்டி/ என்மீது/ பெரிய/ மனது/ செய்து/
நீ/ மஹிமலு/-எல்ல/ நிண்டா3ர/ ஜூபி/
உனது/ மகிமைகளை/ யெல்லாம்/ நிறைய/ காண்பித்து/
ஈ/ மஹினி/ ப4யமு/-ஏடிகி/-அன்ன/ மாட/
இந்த/ புவியில்/ அச்சம்/ எதற்கு/ எனப் பகன்ற/ சொல்லினை/
ராம/ சந்த்3ர/ த்யாக3ராஜ/ வினுத/ (ஸீதா)
இராம/ சந்திரா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ சீதை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
'ராக3 ரத்ன மாலிக' (ரீதி கௌ3ள) கீர்த்தனையில், தியாகராஜர் இராமனைக் குறித்து நூற்றுக்கணக்கான ராக ரத்தின மாலையை புனைந்துள்ளதாகக் கூறுகின்றார். அவற்றினில், இந்த கீர்த்தனையின் சொற்கள் சுக்கிரீவனுக்குப் பொருந்தும்.
சுக்கிரீவனுடன் நட்பு கொண்டபின், ராமன், வாலியை தான் கொல்வதாக உறுதியளிக்கிறான். ஆனால் சுக்கிரீவனுக்கு ராமனைக்குறித்து அதிகம் தெரியாது. எனவே மிக்கு வலியவனாகிய தனது அண்ணன் வாலியை ராமன் கொல்ல முடியுமா என ஐயப்படுகின்றான். அவ்வையத்தினைப் போக்குதற்கு, வாலியினால் கொல்லப்பட்ட, துந்துபியின் மலை நிகர் எலும்புக் கூட்டினை, தனது கால் பெரு விரலினால் உதைத்து காத தூரம் தள்ளினான். அப்படியும் சுக்கிரீவன் ஐயம் தீராததனால், ஓரம்பெய்து ஏழு சால மரங்களையும் துளைத்து, அவ்வம்பு திரும்ப தனது அம்பறாத்தூணியை வந்தடையச் செய்தான், ராமன். அதன் பின்னரே, சுக்கிரீவன் ராமனின் திறமையைப் பற்றி ஐயம் நீங்கினான்.
'உனது மகிமைகளையெல்லாம் நிறையக் காண்பித்து' என்ற சொற்கள் சுக்கிரீவனுக்குப் பொருந்தும். இச் சம்பவம் குறித்து வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயங்கள் 11 மற்றும் 12 நோக்கவும்.
சித்தாந்தம் - முடிந்த முடிவு
Top
Updated on 24 Apr 2009
No comments:
Post a Comment