நிஜ மர்மமுலனு தெலிஸின வாரினி
நீவலயிஞ்சே1தே3மகோ 2ராம
அனுபல்லவி
அஜ க3ஜ ரக்ஷக 3க3ஜ சர்மாம்ப3ராதி3
4தை3வ பே4த3முல லீல கல்க3 ஜேஸின நீ (நிஜ)
சரணம்
ஸ்1ருதி ஸா1ஸ்த்ர புராண-5விதா3தி3
6ஷண்மத நிஷ்டு2ல 7நாம பராது3ல
8க்ஷிதி பதுலன் குமதுலுகா3 ஜேஸின
9க்ஷேம த்யாக3ராஜ நுத ஸ்ரீ 10மனோஹர (நிஜ)
பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! இலக்குமி மனம் கவர்வோனே!
- நிச மருமங்களினை யறிந்தவரையும் நீ அலையச்செய்வதனோ?
- பிரமன், கரியைக் காத்தோன், கரித்தோலையணிந்தோன் முதலான தெய்வங்களின் வேறுபாடெனும் திருவிளையாடலை உண்டாக்கிய உனது நிச மருமங்களினை யறிந்தவரையும் நீ அலையச்செய்வதனோ?
- மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் ஆகியவற்றினில் தேர்ந்தோரையும்,
- அறுமத நெறி நிற்போரையும்,
- (உனது) நாமத்தினில் திளைப்போரையும்,
- புவியாள்வோரையும்,
- மதியிழந்தோராக்கிய (உனது) களிப்பின் நிச மருமங்களினை யறிந்தவரையும் நீ அலையச்செய்வதனோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நிஜ/ மர்மமுலனு/ தெலிஸின வாரினி/
நிச/ மருமங்களினை/ அறிந்தவரையும்/
நீவு/-அலயிஞ்சேதி3/-ஏமகோ/ ராம/
நீ/ அலையச்செய்வது/ ஏனோ/ இராமா/
அனுபல்லவி
அஜ/ க3ஜ/ ரக்ஷக/ க3ஜ/ சர்ம/-அம்ப3ர/-ஆதி3/
பிரமன்/ கரியை/ காத்தோன்/ கரி/ தோலை/ அணிந்தோன்/ முதலான/
தை3வ/ பே4த3முல/ லீல/ கல்க3 ஜேஸின/ நீ/ (நிஜ)
தெய்வங்களின்/ வேறுபாடெனும்/ திருவிளையாடலை/ உண்டாக்கிய/ உனது/ நிச...
சரணம்
ஸ்1ருதி/ ஸா1ஸ்த்ர/ புராண/-வித்3/-ஆதி3/
மறைகள்/ சாத்திரங்கள்/ புராணங்கள்/ தேர்ந்தோரை/ ஆகியவற்றினில்/
ஷண்மத/ நிஷ்டு2ல/ நாம/ பராது3ல/
அறுமத/ நெறி நிற்போரையும்/ (உனது) நாமத்தினில்/ திளைப்போரையும்/
க்ஷிதி/ பதுலன்/ குமதுலுகா3/ ஜேஸின/
புவி/ ஆள்வோரையும்/ மதியிழந்தோர்/ ஆக்கிய/
க்ஷேம/ த்யாக3ராஜ/ நுத/ ஸ்ரீ/ மனோஹர/ (நிஜ)
(உனது) களிப்பின்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ இலக்குமி/ மனம் கவர்வோனே/ நிச...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஏமகோ - ஏமொகோ : இவ்விரண்டு சொற்களுமே தெலுங்கு அகராதியில் காணப்படவில்லை. இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'ஏனோ' என்று பொருளாகும். அதற்கு ஈடான தெலுங்கு சொல், 'ஏமிடிகோ' ஆகும். 'ஏமகோ' அல்லது 'ஏமொகோ' - 'ஏமிடிகோ'-இன் திரிபாக, பேச்சு வழக்கில் இருக்கலாம். 'ராம நன்னு ப்3ரோவ' என்ற கீர்த்தனையில், 'ஏமகோ' காணப்படுகின்றது. எனவே, இங்கும் அச்சொல்லே ஏற்கப்பட்டது.
2 - ராம - ஸ்ரீ ராம
4 - தை3வ - கௌ3ண : 'தை3வ' சரியாகும். கௌ3ண திணிக்கப்பட்டதாக இருக்கலாம்.
5 - விதா3தி3 - விவாதி3 - விதா4தி3 : இவ்விடத்தில் 'விதா3தி3' தான் பொருந்தும்.
8 - க்ஷிதி பதுலன் குமதுலுகா3 ஜேஸின - க்ஷிதி பதுலங்குமதுலுகா3 ஜேஸின - க்ஷிதி பதுலங்க3மதுலுகா3 ஜேஸின : முதலிரண்டிற்கும் வேறுபாடில்லை. மூன்றாவது தவறாகும்.
9 - க்ஷேம - ஸ்ரீத3 : பல்லவியுடன் சரணத்தினை இணைப்பதற்கு 'க்ஷேம'-தான் பொருந்தும்.
10 - மனோஹர - மனோஹர நீ
Top
மேற்கோள்கள்
3 - க3ஜ சர்மாம்ப3ர - கரித்தோலையணிந்தோன் - அரன் - 'கரியரக்கனை சிவன் வதைத்தல்' நோக்கவும்
6 - ஷண்மத - அறு மதங்கள் - அரி, அரன், சக்தி, முருகன், கணபதி, சூரியன் ஆகியோரின் வழிபாடு
Top
விளக்கம்
7 - நாம பராது3ல - இவ்விடத்தல், 'ஆது3ல' என்ற சொல்லுக்கு 'ஆகிய' என்ற பொருளில்லை.
8 - குமதுலுகா3 ஜேஸின - மதியிழந்தோராக்கிய - 'மனஸா மன ஸாமர்த்2ய' என்ற கீர்த்தனையில், தியாகராஜர் இரணடு சம்பவங்களைக் குறிப்பிடுகின்றார் - (1) ராமனுக்கு இளவரசு பட்டம் சூட்ட தசரதன் செய்த முடிவினை, ராமனிடம் மிக்கு அன்புடைய, கைகேயி மூலமாகவே மாற்றச் செய்ததது; (2) தனது தமையனால் காட்டுக்கு விரட்டப்பட்டு, தன் குடும்பத்தினை மீண்டும் அடையமுடியாதென, மனமொடிந்திருந்த சுக்கிரீவனின் மனத்தினை மாற்றியது. இவ்விரண்டுமே, ராம அவதார காரியம் நிறைவேற இன்றியமைததாக அமைந்தன. இவ்விரண்டும் ராமன், தன்னுடைய 'மாயை' எனும் வலையினை வீசி, சாதித்ததாகத் தியாகராஜர், அந்த கீர்த்தனையில் குறிப்பிடுகின்றார்.
கீதையில் (அத்தியாயம் 7, செய்யுள் 14) கண்ணன் கூறுவது -
"உண்மையில், என்னுடைய முக்குணங்களாலான இந்த மாயையைக் கடத்தல் அரிதாகும். எனக்கெனவே தொண்டு பூண்டவர்கள் மட்டுமே அதனைக் கடக்க வல்லர்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
எனவே, தியாகராஜர், இந்த கீர்த்தனையில் இறைவனிடம் கேட்பது, 'நீ (கீதையில்) கூறி்யபடி, உன்னுடைய நாமத்தினில் திளைப்போரையும் நீ ஏன் அலையவிடுகின்றாய்' என.
எவர் கையிலும் சிக்காத, இங்கங்கென சொல்லமுடியாத, மாயையின் தன்மையினை கபீர்தாசரின் 'மாயா மஹா ட2க்4னி' என்ற செய்யுளில் காணவும்.
கரியைக் காத்தோன் - அரி
Top
Updated on 23 Apr 2009
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
நிஜ மர்மமுலனு என்பதற்கு நிச மருமங்களினை என்று பொருள் கொடுத்துள்ளீர். நிஜ என்னும் ஸ்ம்ஸ்க்ருதச் சொல் தற்சமமாகவே தமிழில் வழங்குகிறது. நிச என்று அல்ல.
தமிழ் (பல்லவ) க்ரந்த எழுத்துக்களை (ஜ, ஸ,ஷ.ஹ.க்ஷ) ஒதுக்குவதில் ஏன் குறியாக உள்ளீர் என்று எனக்கு விளங்கவில்லை. தியாகராஜர் பாடல்களில் பாதிக்கு மேல் ஸம்ஸ்க்ருத சொற்கள் தானே உள்ளன.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
எனது தாய்மொழியான தெலுங்குக்கு நான் எவ்வளவு மதிப்பு கொடுக்கின்றேனோ, அதே அளவு மதிப்பு தமிழுக்கும் கொடுக்கின்றேன். தமிழுக்கென்று தனியான சிறப்புகள் உண்டு. அவற்றினைப் போற்றுதல் எனது கடமையாக நான் கருதுகின்றேன்.
'நிஜ' என்ற ஸம்ஸ்கிருதச் சொல், 'நிச' என்றுதான் தமிழில் வழங்கும். ஐயத்திற்கிடமான சொற்களைப் பயன் படுத்துகையில் அவற்றினை மாற்றாமலே நான் எழுதியுள்ளேன் - உதாரணமாக 'பஜனை'.
வணக்கம்
கோவிந்தன்.
Post a Comment