Sunday, February 8, 2009

தியாகராஜ கிருதி - ரானிதி3 ராது3 - ராகம் மணிரங்கு3 - Raanidi Raadu - Raga Manirangu

பல்லவி
ரானிதி3 ராது3 ஸுராஸுருலகைன

அனுபல்லவி
போனிதி3 போது3 பூ4-ஸுருலகைன (ரா)

சரணம்
1தே3வேந்த்3ருனிகி ஸு-தே3ஹமு 2பூர்வ
தே3வுலகம்ரு2தமபா4வமே
கானி
3வன சர பா34லா முனுலகே கானி
பாவன த்யாக3ராஜ பா4க்3யமா ஸ்ரீ ராம (ரா)


பொருள் - சுருக்கம்
புனிதனே! தியாகராசனின் பேறே! இராமா!
  • வரமாட்டாதது வாராது, சுரர், அசுரருக்காகிலும்;

  • போகமாட்டாதது போகாது, அந்தணருக்காகிலும்;

  • தேவேந்திரனுக்கு நல்லுடலும், முந்தைய தேவர்களுக்கு அமுதமும், இன்மையே யன்றோ;

  • அவ் வனசரர் தொல்லைகள் அம் முனிவர்களுக்கேயன்றோ.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரானிதி3/ ராது3/ ஸுர/-அஸுருலகு-ஐன/
வரமாட்டாதது/ வாராது/ சுரர்/ அசுரருக்காகிலும்


அனுபல்லவி
போனிதி3/ போது3/ பூ4-ஸுருலகு-ஐன/ (ரா)
போகமாட்டாதது/ போகாது/ அந்தணருக்காகிலும்/


சரணம்
தே3வ/-இந்த்3ருனிகி/ ஸு-தே3ஹமு/ பூர்வ/
தேவ/ இந்திரனுக்கு/ நல்லுடலும்/ முந்தைய/

தே3வுலகு/-அம்ரு2தமு/-அபா4வமே/ கானி/
தேவர்களுக்கு/ அமுதமும்/ இன்மையே/ யன்றோ/

ஆ/ வன/ சர/ பா34லு/-ஆ/ முனுலகே/ கானி/
அந்த/ வன/ சரர்/ தொல்லைகள்/ அந்த/ முனிவர்களுக்கே/ யன்றோ/

பாவன/ த்யாக3ராஜ/ பா4க்3யமா/ ஸ்ரீ ராம/ (ரா)
புனிதனே/ தியாகராசனின்/ பேறே/ ஸ்ரீ ராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தே3வுலகு - தே3வுள்ளகு.
Top

மேற்கோள்கள்
1 - தே3வேந்த்3ருனிகி ஸு-தே3ஹமு - தேவேந்திரனுக்கு நல்லுடல் - இந்திரன் சபிக்கப்பட்டது குறித்து அனேக கதைகள் உள்ளன. ஆனால் 'நல்லுடல்' எனக் குறிப்பிட்டுள்ளதால், இது, அனேகமாக 'அகிலிகையை இந்திரன் புணர்ந்ததினால் விதையை இழந்த கதை'யாக இருக்கலாம். வால்மீகி ராமாயணம் - பால காண்டம் - அத்தியாயம் 48 நோக்குக.



Top

2 - பூர்வ தே3வுலு - முந்தைய தேவர்கள் - அரக்கர்கள் - 'தை3த்யர்' எனப்படும் தேவர்களும், 'தா3னவர்' எனப்படும் அரக்கர்களும், கசியப முனிவரின், 'தி3தி' மற்றும் 'த3னு' எனும் இரு தாரப் புதல்வர்கள். மாற்றாந்தாய் குழந்தைகளான அவர்களிடையே பகைமை இருந்து வந்தது. பாற்கடலை, அமுதம் வேண்டி, இரு சாராரும் கடைந்தனர். ஆயின், அமுதம் தானவர்களுக்கு மறுக்கப்பட்டது. அதனால் அவர்களிடையே தீராத பகை மூண்டது. பாகவத புராணம் - புத்தகம் 8 - அத்தியாயங்கள் 6 - 11 நோக்கவும்.

2 - பூர்வ தே3வுலகம்ரு2தமபா4வமே - முந்தைய தேவர்களுக்கு அமுதம் இன்மை - அமுதம் கடைந்தது - பாகவத புராணம் - புத்தகம் 8 - அத்தியாயம் 9

3 - வன சர பா34லு - முனிவர்கள் தங்கள் குறைகளை ராமனிடம் கூறுதல் - வால்மீகி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - அத்தியாயம் 6 நோக்கவும்.
Top

விளக்கம்
அசுரர் - அரக்கர்
வனசரர் - அரக்கர்
Top


Updated on 08 Feb 2009

No comments: