Sunday, September 28, 2008

உபசாரமுலனு சேகொனவய்ய - ராகம் பைரவி - Upacharamulanu Chekonavayya - Raga Bhairavi

பல்லவி
உபசாரமுலனு சேகொனவய்ய
1உரக3 ராஜ1யன

அனுபல்லவி
2சபல கோடி நிபா4ம்ப3ர த4ர ஸ்1ரீ
ஜானகீ பதி த3ய சேஸி நா(து3)

சரணம்
சரணம் 1
3கபட நாடக ஸூத்ர தா4ரிவை
காமித ப2லமுலொஸகே3 ராம
அபரி மித நவ ரத்னமுலு பொதி3கி3
அபரஞ்ஜி கொ3டு3கு3 நீகே தகு3னய்ய (உ)

சரணம் 2
மெருகு3 தீக3ல ரீதினி மெரஸே
கரகு33ங்கா3ரு காட3லமரின
1ரதி3ந்து3 த்3யுதி ஸமானமௌ
சாமர யுக3முலு நீகே தகு3னய்ய (உ)

சரணம் 3
ஜாஜுலு 4ஸம்பங்கு3லு 5மருவபு 6விர-
வாஜுலு
7குரு வேரு வாஸனலு
விராஜமானமகு3 வ்யஜனமு த்யாக3-
ராஜ வினுத நீகே தகு3னய்ய (உ)


பொருள் - சுருக்கம்
அரவரசன் மேல் துயில்வோனே! கோடி மின்னல்கள் நிகருடையணிவோனே!
சானகி மணாளா! வஞ்சக நாடகப் பாவைக்கூத்தன் நீ! விரும்பிய பயன்களருளும், இராமா!
தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

தயவு செய்தெனது உபசாரங்களை ஏற்றுக்கொள்ளுமைய்யா,

எண்ணிறந்த இரத்தினங்கள் பொதித்த, அபரஞ்சிக் குடையுனக்கே தகுமைய்யா!
(ஆயின் எனது எளிய குடையினால்) உபசாரங்களையேற்றுக்கொள்ளுமைய்யா,
மின்னற்கொடி போன்று மிளிரும், உருக்கிய தங்கக் காம்புகள் கொண்ட,
இலையுதிர்கால மதியின் ஒளி நிகர், சாமரங்களின் இணை உனக்கே தகுமைய்யா!
(ஆயின் எனது எளிய சாமரத்தினால்) உபசாரங்களையேற்றுக்கொள்ளுமைய்யா,

மல்லிகை, சம்பங்கி, மருக்கொழுந்து, அடுக்கு மல்லி, வெட்டிவேரின் மணம்
கமழும் விசிறியுனக்கே தகுமைய்யா! (ஆயின் எனது எளிய விசிறியினால்)
உபசாரங்களையேற்றுக்கொள்ளுமைய்யா,


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
உபசாரமுலனு/ சேகொனு-அய்ய/
உபசாரங்களை/ ஏற்றுக்கொள்ளுமைய்யா,

உரக3/ ராஜ/ ஸ1யன/
அரவு/ அரசன்/ அணையோனே/



அனுபல்லவி
சபல/ கோடி/ நிப4/-அம்ப3ர/ த4ர/
மின்னல்கள்/ கோடி/ நிகர்/ உடை/ அணிவோனே/

ஸ்ரீ ஜானகீ/ பதி/ த3ய/ சேஸி/ நாது3/
சானகி/ மணாளா/ தயவு/ செய்து/ எனது/




சரணம்
சரணம் 1
கபட/ நாடக/ ஸூத்ர-தா4ரிவை/
வஞ்சக/ நாடக/ பாவைக்கூத்தன் நீ/

காமித/ ப2லமுலு/ ஒஸகே3/ ராம/
விரும்பிய/ பயன்கள்/ அருளும்/ இராமா!

அபரி மித/ நவ ரத்னமுலு/ பொதி3கி3ன/
எண்ணிறந்த/ இரத்தினங்கள்/ பொதித்த/

அபரஞ்ஜி/ கொ3டு3கு3/ நீகே/ தகு3னு-அய்ய/
அபரஞ்சி/ குடை/ உனக்கே/ தகுமைய்யா/



சரணம் 2
மெருகு3/ தீக3ல/ ரீதினி/ மெரஸே/
மின்னல்/ கொடி/ போன்று/ மிளிரும்/

கரகு3/ ப3ங்கா3ரு/ காட3லு/ அமரின/
உருக்கிய/ தங்க/ காம்புகள்/ கொண்ட/

1ரத்3/ இந்து3/ த்3யுதி/ ஸமானமௌ/
இலையுதிர்கால/ மதியின்/ ஒளி/ நிகர்/

சாமர/ யுக3முலு/ நீகே/ தகு3னு-அய்ய/
சாமரங்களின்/ இணை/ உனக்கே/ தகுமைய்யா/


சரணம் 3
ஜாஜுலு/ ஸம்பங்கு3லு/ மருவபு/
மல்லிகை/ சம்பங்கி/ மருக்கொழுந்து/

விரவாஜுலு/ குரு வேரு/ வாஸனலு/
அடுக்கு மல்லி/ வெட்டிவேரின்/ மணம்/

விராஜமானமகு3/ வ்யஜனமு/ த்யாக3ராஜ/
கமழும்/ விசிறி/ தியாகராஜனால்/

வினுத/ நீகே/ தகு3னு-அய்ய/
போற்றப்பெற்றோனே/ உனக்கே/ தகுமைய்யா/

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1உரக3 ராஜ - உரக3

2சபல - சபலா

Top

மேற்கோள்கள்

3கபட நாடக - வாமனாவதாரத்திலும், மோகினியாகவும், முசுகுந்தனைக் காப்பதற்கும் இறைவன் ஆடிய நாடங்கள் வஞ்சகமென்று சொல்வர் -
கீழ்க்கண்ட web site-களைக் காணவும் -

வாமனாவதாரம்

முசுகுந்தன்

விடங்கத் தலங்கள்

4ஸம்பங்கு3லு - சம்பங்கி

5மருவபு - மருக்கொழுந்து

6விர-வாஜுலு - அடுக்கு மல்லி

7குரு வேரு - வெட்டி வேர்

விளக்கம்

உபசாரம் - சேவை

பாவைக்கூத்தன் - இறைவன்.

அபரஞ்சி - புடமிட்ட பொன்
Top


1 comment:

Vasanthi balu said...

பயனுள்ள வகையில் தெளிவான விளக்கம். நன்றி