பல்லவி
ஏ நாடி நோமு ப2லமோ
ஏ தா3ன ப3லமோ
அனுபல்லவி
ஸ்ரீ நாத2 ப்3ரஹ்மகைனனு நீது3
ஸேவ தொ3ருகுனா தனகு கலுகு3ட (ஏ)
சரணம்
சரணம் 1
நேனு கோரின கோர்கலெல்லனு
நேடு3 தனகு நெரவேரெனு
பா4னு வம்ஸ1 திலக நா பாலி
பா4க்3யமா ஸஜ்ஜன யோக்3யமா தன(கே)
சரணம் 2
நீது3 தா3பு நீது3 ப்ராபு தொ3ரிகெனு
நிஜமுகா3 நே நீ ஸொம்மைதினி
ஆதி3 தே3வ ப்ராண நாத2
1நாத3ங்கமந்து3னுஞ்சி 2பூஜிஞ்ச (ஏ)
சரணம் 3
ஸுந்த3ரேஸ1 ஸுகு3ண ப்3ரு2ந்த3 த3ஸ1ரத2
நந்த3னாரவிந்த3 நயன பாவன
அந்த3கா3ட3 த்யாக3ராஜ நுத ஸுக2-
மனுப4விஞ்ச தொ3ரிகெரா 3ப4ளி தன(கே)
பொருள் - சுருக்கம்
மாமணாளா! பரிதி குலத்திலகமே! என்னைக்காக்கும் எனது பேறே! நல்லோருக்குத் தகுந்தவனே!
முதற்கடவுளே! உயிரின் நிலையே! எழிலரசே! பண்புகள் நிறைந்தோனே! தசரதன் மைந்தா!
கமலக்கண்ணா! தூயோனே! அழகனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
பிரமனுக்கும் கிடைக்காத உனது சேவை எனக்குக் கிடைத்தது; நான் கோரிய கோரிக்கைகள் யாவும் இன்று நிறைவேறின; உனதடைக்கலமும், உன்னாதரவும் கிடைத்தன; உண்மையில், நானுனது சொத்தாகினேன்; எனது மடியிலிருத்தி உன்னை வழிபட்டேன்; இன்பம் துய்க்கக் கிடைத்ததய்யா! ஆகா! தனக்கு என்றைய நோன்பின் பயனோ? எந்தக் கொடையின் வலிமையோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ நாடி/ நோமு/ ப2லமோ/
என்றைய/ நோன்பின்/ பயனோ/
ஏ/ தா3ன/ ப3லமோ/
எந்த/ கொடையின்/ வலிமையோ/
அனுபல்லவி
ஸ்ரீ/ நாத2/ ப்3ரஹ்மகு-ஐனனு/ நீது3/
மா/ மணாளா/ பிரமனுக்காகிலும்/ உனது/
ஸேவ/ தொ3ருகுனா/ தனகு/ கலுகு3ட/
சேவை/ கிடைக்குமோ/ எனக்கு/ கிடைத்தல்/
என்றைய நோன்பின் பயனோ?
சரணம்
சரணம் 1
நேனு/ கோரின/ கோர்கலு/ எல்லனு/
நான்/ கோரிய/ கோரிக்கைகள்/ யாவும்/
நேடு3/ தனகு/ நெரவேரெனு/
இன்று/ தனக்கு/ நிறைவேறின/
பா4னு/ வம்ஸ1/ திலக/ நா/ பாலி/
பரிதி/ குல/ திலகமே/ என்னை/ காக்கும்/
பா4க்3யமா/ ஸஜ்ஜன/ யோக்3யமா/ தனகு/
பேறே/ நல்லோருக்கு/ தகுந்தவனே/ தனக்கு/
என்றைய நோன்பின் பயனோ?
சரணம் 2
நீது3/ தா3பு/ நீது3/ ப்ராபு/ தொ3ரிகெனு/
உனது/ அடைக்கலம்/ உனது/ ஆதரவு/ கிடைத்தன/
நிஜமுகா3/ நே/ நீ/ ஸொம்மு-ஐதினி/
உண்மையில்/ நான்/ உனது/ சொத்தாகினேன்/
ஆதி3/ தே3வ/ ப்ராண/ நாத2/
முதற்/ கடவுளே/ உயிரின்/ நிலையே/
நாது3/-அங்கமு/-அந்து3/-உஞ்சி/ பூஜிஞ்ச/
எனது/ மடியில்/ இருத்தி/ வழிபட/
என்றைய நோன்பின் பயனோ?
சரணம் 3
ஸுந்த3ர/-ஈஸ1/ ஸுகு3ண/ ப்3ரு2ந்த3/ த3ஸ1ரத2/
எழில்/ ஈசனே/ பண்பு/ குவியலே/ தசரதன்/
நந்த3ன/-அரவிந்த3/ நயன/ பாவன/
மைந்தா/ கமல/ கண்ணா/ தூயோனே/
அந்த3கா3ட3/ த்யாக3ராஜ/ நுத/ ஸுக2மு/
அழகனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ இன்பம்/
அனுப4விஞ்ச/ தொ3ரிகெரா/ ப4ளி/ தனகு/
துய்க்க/ கிடைத்ததய்யா/ ஆகா/ தனக்கு/
என்றைய நோன்பின் பயனோ?
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1நாத3ங்கமந்து3னுஞ்சி - நாதங்க3முனனுஞ்சி : நாதங்க3முனனுஞ்சி - தவறாகும்
2பூஜிஞ்ச - பூஜிஞ்ச தனகு
3ப4ளி தனகு - தனகிக
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் எனும் நாட்டிய நாடகத்தில் பிரகலாதன் இறைவனைக் கண்டு பேரானந்தமுற்று தனது பேற்றினை வியந்து பாடுவதாக
மாமணாளன் - இலக்குமி மணாளன்
Top
No comments:
Post a Comment