பல்லவி
ஆனந்த3மானந்த3மாயெனு
ப்3ரஹ்மானந்த3 நித்யானந்த3
ஸதா3னந்த3 பர(மானந்த3)
சரணம்
சரணம் 1
ஸ்ரீ ராம நே த4ன்யுடை3தினி ஆனந்த3
நீரதி4லோனீத3னைதினி ராம
ஸாரெகு நீ வாட3னி பேரு கலுக3னைதினி (ஆ)
சரணம் 2
ஆ நாடி மொத3லு நின்னே வேடி3தி து3ஷ்ட
மானவுல செலிமி வீடி3தி நா
மானமே நீது3 1பா4ரமனுசுனு தலசிதி (ஆ)
சரணம் 3
பாபமுலகு ப4யமந்தி3தி
ஹ்ரு2த்தாபமுலெல்ல சல்ல ஜேஸிதி ராம
நீ பாத3முரமுனனுஞ்சி 2பூஜிஞ்சனைதி (ஆ)
சரணம் 4
கலிகியாஸலு ரோஸினாரமுயீ
கலினி ப்3ரதுகு நாம ஸாரமுயிட்லு
பலிகி பலிகி 3தொலகி3 போயெ விசாரமு (ஆ)
சரணம் 5
இலலோ ஸுக2முலேமாயெனுயண்டே
கல கன்ன பா4க்3ய சந்த3மாயெனு நின்னு
கொலிசி த்4யானிஞ்சி தெலுஸுகொண்டி நீ மாயனு (ஆ)
சரணம் 6
நீயந்த3முனு கனி ஸொக்கிதி-
னெட3 பா3யனி ப்ரேம சேத ஜிக்கிதி நா
ப்ராயமுலெல்ல நீ பாலு சேஸி ம்ரொக்கிதி (ஆ)
சரணம் 7
4நலுவகைனனுனிந்த்3ருகைனனு சந்த்3ர
கலனு 5த4ரிஞ்சு வானிகைனனு ராம
தலசினதெ3ல்ல செப்ப தரமா நோடிகி ராது3 (ஆ)
சரணம் 8
அன்யமுகா3 ஜூட3 தோசெனா க3னுக
த4ன்யோஹமனி பல்க யோசனா
6மூர்த4ன்யுலைன ப4க்தானுத்4வாந்த விரோசன (ஆ)
சரணம் 9
ராஜஸ கு3ணமுனு மானிதி ராம
நீ ஜபமுனு மதி3 பூனிதி த்யாக3-
ராஜு சேஸின புண்ய ராஸி1யனியெஞ்சிதி (ஆ)
இராமா! தலை சிறந்த பத்தர்களின் இருளினை நீக்கும் பரிதியே!
மிக்கு ஆனந்தமுற்றேன்! பிரமானந்தம், இடையறா
ஆனந்தம், எவ்வமயமும் ஆனந்தம், பேரானந்தமுற்றேன்!
1. நான் பேறு பெற்றேன்; ஆனந்தக் கடலில் நீந்தலானேன்,
எவ்வமயமும் உன்னவனெனப் பெயர் பெற்றேன்!
2. அன்று முதல் உன்னையே வேண்டினேன்; தீய
மனிதர்களின் தோழமை நீங்கினேன்; எனது
மானமே உனது பொறுப்பென நான் எண்ணினேன்;
3. பாவங்களுக்கஞ்சினேன்; இதயத்தின்
வெம்மைகளையெல்லாம் தணித்தேன்;
உனது திருவடிகளை யுள்ளத்திலருத்தி வழிபடலானேன்;
4. பெண்டிரின் ஆசைகளைக் கைவிட்டேன்;
'இக்கலியில் பிழைப்பு உனது நாம சாரம்' இங்ஙனம்
திரும்பத் திரும்பப் பகன்று, கவலைகள் தொலைந்தன;
5. புவியில் இன்பங்கள் என்னவாயிற்றென்றால்,
கனாக்கண்ட செல்வம் போன்றானது; உன்னைப் போற்றி,
தியானித்து, அறிந்துகொண்டேன், உனது மாயையினை;
6. உனதழகைக்கண்டு சொக்கினேன்; இடை
பிரியா (உனது) காதலில் சிக்கினேன்; எனது
ஆயுள் முழுவதையும் உனக்கெனவாக்கித் தொழுதேன்;
7. பிரமனுக்காகிலும், இந்திரனுக்காகிலும் அல்லது
சிவனுக்காகிலும், நினைப்பதெல்லாம் பகரத்தரமா!
(இயலாது) சொற்கள் வாராது;
8. அந்நியமாக நோக்கத் தோன்றியதோ? அன்றேல்,
(நான்) பேறு பெற்றேனெனப் பகர யோசிக்கின்றாயோ?
9. இராசத குணத்தைக் கைவிட்டேன்; உனது செபத்தினை
மனதில் விரதம் பூண்டேன்; தியாகராசன் செய்த
புண்ணியங்களெனக் கருதினேன்;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஆனந்த3மு ஆனந்த3மு-ஆயெனு/ ப்3ரஹ்மானந்த3/ நித்ய/
மிக்கு ஆனந்தமுற்றேன்/ பிரமானந்தம்/ இடையறா/
ஆனந்த3/ ஸதா3/ ஆனந்த3/ பரமானந்த3
ஆனந்தம்/ எவ்வமயமும்/ ஆனந்தம்/ பேரானந்தம்/ உற்றேன்!
சரணம்
சரணம் 1
ஸ்ரீ ராம/ நே/ த4ன்யுடு3/ஐதினி/ ஆனந்த3/ நீரதி4-லோன/
இராமா/ நான்/ பேறு/ பெற்றேன்/ ஆனந்த/ கடலில்/
ஈத3னு-ஐதினி/ ராம/ ஸாரெகு/ நீ வாடு3-அனி/ பேரு/ கலுக3னு-ஐதினி
நீந்தலானேன்/ இராமா/ எவ்வமயமும்/ உன்னவனென/ பெயர்/ பெற்றேன்!
சரணம் 2
ஆ-நாடி/ மொத3லு/ நின்னே/ வேடி3தி/ து3ஷ்ட/ மானவுல/
அன்று/ முதல்/ உன்னையே/ வேண்டினேன்/ தீய/ மனிதர்களின்/
செலிமி/ வீடி3தி/ நா/ மானமே/ நீது3/ பா4ரமு-அனுசுனு/ தலசிதி/
தோழமை/ நீங்கினேன்/ எனது/ மானமே/ உனது/ பொறுப்பென/ எண்ணினேன்/
சரணம் 3
பாபமுலகு/ ப4யமு-அந்தி3தி/ ஹ்ரு2த்/-தாபமுலு/ எல்ல/
பாவங்களுக்கு/ அஞ்சினேன்/ இதயத்தின்/ வெம்மைகளை/ எல்லாம்/
சல்ல-ஜேஸிதி/ ராம/ நீ/ பாத3மு/ உரமுன/ உஞ்சி/ பூஜிஞ்சனு-ஐதி/
தணித்தேன்/ இராமா/ உனது/ திருவடிகளை/ உள்ளத்தில்/ இருத்தி/ வழிபடலானேன்;
சரணம் 4
கலிகி/ ஆஸலு/ ரோஸினாரமு/ ஈ-கலினி/ ப்3ரதுகு/
பெண்டிரின்/ ஆசைகளை/ கைவிட்டோம்/ இக்கலியில்/ பிழைப்பு/
நாம/ ஸாரமு/ இட்லு/ பலிகி-பலிகி/ தொலகி3-போயெ/ விசாரமு/
நாம/ சாரம்/ இங்ஙனம்/ திரும்பத் திரும்ப பகன்று/ தொலைந்தன/ கவலைகள்/
சரணம் 5
இலலோ/ ஸுக2முலு/ ஏமாயெனு/ அண்டே/ கல கன்ன/ பா4க்3ய
புவியில்/ இன்பங்கள்/ என்னவாயிற்று/ என்றால்/ கனாக்கண்ட/ செல்வம்/
சந்த3மு-ஆயெனு/ நின்னு/ கொலிசி/ த்4யானிஞ்சி/ தெலுஸுகொண்டி/ நீ/ மாயனு/
போன்றானது/ உன்னை/ போற்றி/ தியானித்து/ அறிந்துகொண்டேன்/ உனது/ மாயையினை/
சரணம் 6
நீ/அந்த3முனு/ கனி/ ஸொக்கிதினி/ எட3/ பா3யனி/ ப்ரேம-சேத/ ஜிக்கிதி/
உனது/ அழகை/ கண்டு/ சொக்கினேன்/ இடை/ பிரியா/ காதலில்/ சிக்கினேன்/
நா/ ப்ராயமுலு/ எல்ல/ நீ-பாலு-சேஸி/ ம்ரொக்கிதி/
எனது/ ஆயுள்/ முழுவதையும்/ உனக்கெனவாக்கி/ தொழுதேன்/
சரணம் 7
நலுவகு-ஐனனு/ இந்த்3ருகு-ஐனனு/ சந்த்3ர கலனு/ த4ரிஞ்சு வானிகி-ஐனனு/
நான்முகனுக்காகிலும்/ இந்திரனுக்காகிலும்/ பிறை/ அணிவோனுக்காகிலும்/
ராம/ தலசினதி3-எல்ல/ செப்ப/ தரமா/ நோடிகி/ ராது3/
இராமா/ நினைப்பதெல்லாம்/ பகர/ தரமா/ சொற்கள்/ வாராது/
சரணம் 8
அன்யமுகா3/ ஜூட3/ தோசெனா/ க3னுக/ த4ன்ய-அஹம்/ அனி/
அந்நியமாக/ நோக்க/ தோன்றியதோ/ அன்றேல்/ பேறு பெற்றேன்/ என/
பல்க/ யோசனா/ மூர்த4ன்யுலு-ஐன/ ப4க்த/ அனுத்4வாந்த/ விரோசன/
பகர/ யோசிக்கின்றாயோ/ தலை சிறந்த/ பத்தர்களின்/ இருளினை நீக்கும்/ பரிதியே/
சரணம் 9
ராஜஸ/ கு3ணமுனு/ மானிதி/ ராம/ நீ/ ஜபமுனு/ மதி3/
இராசத/ குணத்தை/ கைவிட்டேன்/ இராமா/ உனது/ செபத்தினை/ மனதில்/
பூனிதி/ த்யாக3ராஜு/ சேஸின/ புண்ய ராஸி1-அனி/எஞ்சிதி/
விரதம் பூண்டேன்/ தியாகராசன்/ செய்த/ புண்ணியங்களென/ கருதினேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
'ஆனந்த3மானந்த3மாயெனு' என அனுபல்லவி சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது
1 பா4ரமனுசுனு தலசிதி - பா4ரமனுசுனு தெலிஸிதி
2 பூஜிஞ்சனைதி - த்4யானிஞ்சக3 : த்4யானிஞ்சக3 - என்பது சரியல்ல
3 தொலகி3 போயெ - தொலகி3 பா3ய
4 இந்த்3ருகைனனு - இந்து்3கைனனு - ஹரிகைனனு - பிற்சொன்ன இரண்டும் சரியல்ல
5 த4ரிஞ்சு வானிகைனனு - த4ரிஞ்சு வாரிகைனனு
Top
மேற்கோள்கள்
விளக்கம்
6 மூர்த4ன்யுலைன - இதனை 'தலை சிறந்த பக்தர்களின்' என்றோ அல்லது 'தலை சிறந்த பக்தர்களாக ஆகியோருடைய' என்றோ கொள்ளலாம். தலை சிறந்த பக்தராகிய நாரத முனியும் முன்னம் மாயையை தான் வென்றதாக கருவம் கொண்டதனால், பெண்ணுருவம் அடைந்து, துன்பங்களில் உழன்று, இறைவனருளால் மீண்டும் நாரதராகியதாக தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே தலை சிறந்த பக்தர்கள் ஆவதற்கும், அங்ஙனம் ஆகிய பின்னும் மாயையின் தொல்லைகளெனும் இருளினை நீக்கும் பகலவனாக இறைவன் இருப்பதாக. தேவி பாகவதத்தினை இந்த web site-ல் நோக்கலாம். தேவி பாகவதம்
நான்முகன் - பிரமன்
பிறையணிவோன் - சிவன்
இராசத குணம் - முக்குணங்களிலொன்று
இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்னும் நாடகத்தில் பிரகலாதன் அரியை நோக்கிப்பாடுவது
Top
No comments:
Post a Comment