Friday, September 26, 2008

இந்து3கா புட்டிஞ்சிதிவி - பை4ரவி ராகம் - Induka Puttinchitivi - Raga Bhairavi

பல்லவி
இந்து3கா புட்டிஞ்சிதிவி ந(ன்னிந்து3)

அனுபல்லவி
அந்த3கா33 நன்னேல எந்தோ
அலயிஞ்சி வேடு3க ஜூசுடகு ந(ன்னிந்து3)

சரணம் 1
1ஆ பராத்பர ரூப நாது3
ஸமீப ஜனுல சேதனாபத3லனு
நேனே ப்ரொத்3து3னு பரிதாபமந்தி3
ஸீதா பதி நீது3பை கோபகி3ஞ்ச ந(ன்னிந்து3)

சரணம் 2
தா3ஸ போஷக ஸதா3 ஸத3ன தா3ராதி3
கோ3 ஸுதாது3ல து3ராஸ சேத
காஸாஸ மிஞ்சி 2ஏ தோ3ஸமு தெலியனி
3வேஸ த4ருல ஸஹவாஸமு ஜேய ந(ன்னிந்து3)

சரணம் 3
போ433 ஆப்த ஸுலபா434ரண ப4
ரோக3 ஹரண ஸ்ரீ த்யாக3ராஜ நுத
4ஸோக3 கனுலதோ பா3கு3 மீரனு
வேக3 ஜூட3 ராதா3 ஆக3ம சர ந(ன்னிந்து3)


பொருள் - சுருக்கம்
அழகனே! பராபர வடிவத்தோனே!
சீதை மணாளா! அடியாரைப் பேணுவோனே!
இன்பமருள்வோனே! உற்றாருக் கெளியோனே!
மலையைச் சுமந்தோனே! புவி வாழ்வெனும்
நோயைக் களைவோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே! சாத்திரங்களிலுறைவோனே!

இதற்காயென்னைப் பிறப்பித்தாய்?

என்னையாள, எவ்வளவோ அலையவைத்து, வேடிக்கை பார்ப்பதற்காயென்னைப் பிறப்பித்தாய்?

எனது நெருங்கியோரால் அடையும் இன்னல்களால்,
நான் எவ்வமயமும் துயருற்று, உன்மீது சினமுறுவதற்கா
என்னைப் பிறப்பித்தாய்?

எவ்வமயமும் வீடு, மனைவி, மக்கள், பசுக்கள்
ஆகியவற்றின் பேராசையினால், பணத்தாசை மிகுந்து,
ஒரு குற்றமும் அறியாதவர் போன்று வேடமிடுவோரின்
நட்பு கொள்வதற்கா என்னைப் பிறப்பித்தாய்?

நீண்ட கண்களினால், மிக்கு கனிவுடன், விரைவில் என்னை நோக்கலாகாதா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்து3கா/ புட்டிஞ்சிதிவி/ நன்னு/
இதற்கா/ பிறப்பித்தாய்/ என்னை/



அனுபல்லவி
அந்த3கா33/ நன்னு/ ஏல/ எந்தோ/
அழகனே/ என்னை/ ஆள/ எவ்வளவோ/

அலயிஞ்சி/ வேடு3க/ ஜூசுடகு/ நன்னு/
அலையவைத்து/ வேடிக்கை/ பார்ப்பதற்கா/ என்னை/
பிறப்பித்தாய்?


சரணம் 1
ஆ/ பராத்பர/ ரூப/ நாது3/
அந்த/ பராபர/ வடிவத்தோனே/ எனது/

ஸமீப ஜனுல சேதனு/ ஆபத3லனு/
நெருங்கியோரால் அடையும்/ இன்னல்களால்/

நேனு/ ஏ ப்ரொத்3து3னு/ பரிதாபமு அந்தி3/
நான்/ எவ்வமயமும்/ துயருற்று/

ஸீதா/ பதி/ நீது3பை/ கோபகி3ஞ்ச/ நன்னு/
சீதை/ மணாளா/ உன்மீது/ சினமுறுவதற்கா/ என்னை/
பிறப்பித்தாய்?


சரணம் 2
தா3ஸ/ போஷக/ ஸதா3/ ஸத3ன/ தா3ர/ ஆதி3/
அடியாரை/ பேணுவோனே/ எவ்வமயமும்/ வீடு/ மனைவி/ முதலாக/

கோ3/ ஸுத/ ஆது3ல/ து3ராஸ சேத/
பசுக்கள்/ மக்கள்/ ஆகியவற்றின்/ பேராசையினால்/

காஸு ஆஸ/ மிஞ்சி/ ஏ/ தோ3ஸமு/ தெலியனி/
பணத்தாசை/ மிகுந்து/ 'ஒரு/ குற்றமும்/ அறியாத'/

வேஸ த4ருல/ ஸஹவாஸமு/ ஜேய/ நன்னு/
வேடமிடுவோரின்/ நட்பு/ கொள்வதற்கா/ என்னை/
பிறப்பித்தாய்?


சரணம் 3
போ43-த3/ ஆப்த/ ஸுலப4/ அக3/ த4ரண/ ப4வ/
இன்பம் அருள்வோனே/ உற்றாருக்கு/ எளியோனே/ மலையை/ சுமந்தோனே/ புவி வாழ்வு/

ரோக3/ ஹரண/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/
நோயை/ களைவோனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/

ஸோக3/ கனுலதோ/ பா3கு3/ மீரனு/
நீண்ட/ கண்களினால்/ கனிவு/ மிக/

வேக3/ ஜூட3/ ராதா3/ ஆக3ம/ சர/ நன்னு/
விரைவில்/ நோக்கலாகாதா/ சாத்திரங்களில்/ உறைவோனே/ என்னை/
இதற்கா பிறப்பித்தாய்?

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3வேஸ த4ருல - வேஸ தா4ருல


மேற்கோள்கள்

விளக்கம்
1ஆ பராத்பர - 'தத்-த்வம்-அஸி' எனும் மஹா வாக்கியத்தின் 'தத்' எனப்படும் பரம்பொருளினை 'அந்த' என்ற சொல் சுட்டும்

2ஏ தோ3ஸமு தெலியனி - ஒரு குற்றமும் அறியாது போன்று வேடமிடுவோர்
4ஸோக3 கனுலு - நீண்ட கண்கள்

பராபரன் - யாவற்றிற்குமப்பாற்பட்ட தன்மை

மலை - மந்தர மலை அல்லது கோவர்த்தன மலை

Top




No comments: