Showing posts with label Hamsa Dhvani Raga. Show all posts
Showing posts with label Hamsa Dhvani Raga. Show all posts

Sunday, February 7, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ரகு4 குல - ராகம் ஹம்ஸ த்4வனி - Sri Raghu Kula - Raga Hamsa Dhvani

பல்லவி
ஸ்ரீ ரகு4 குலமந்து3 1புட்டி
ஸீதனு 2செயி கொனின ராம சந்த்3

அனுபல்லவி
ஆராமமந்து3 3முனுல
கோரிகலீடே3ர ஸேய
பூனு-கொன்ன 4ராம (ஸ்ரீ)

சரணம்
வர ரத்ன பீட2மந்து3 5மஜ்ஜனமு
6புட3மி ஸுருல சேத கை3கொன்ன ராம
பரம ப4க்துலனு பாலனமு ஸேயு
ஸாகேத வாஸ த்யாக3ராஜ நுத (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • உயர் இரகு குலத்தினில் பிறந்து, சீதையைக் கைப்பற்றிய இராமசந்திரா!
  • அடவியினில், முனிவர்களின் கோரிக்கைகள் ஈடேறச் செய்ய, விரதம் பூண்ட இராமா!
  • சிறந்த இரத்தின பீடத்தினில், புனித நீராட்டலினை, அந்தணர்கள் கைகளினால், ஏற்றுக் கொண்ட இராமா!
  • சீரிய தொண்டர்களைப் பேணும், சாகேத நகருறையே!
  • தியாகராசனால் போற்றப் பெற்றோனே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ ரகு4/ குலமு-அந்து3/ புட்டி/
உயர்/ இரகு/ குலத்தினில்/ பிறந்து/

ஸீதனு/ செயி/ கொனின/ ராம/ சந்த்3ர/
சீதையை/ கை/ பற்றிய/ இராம/ சந்திரா/


அனுபல்லவி
ஆராமமு-அந்து3/ முனுல/
அடவியினில்/ முனிவர்களின்/

கோரிகலு/-ஈடே3ர/ ஸேய/ பூனு-கொன்ன/ ராம/ (ஸ்ரீ)
கோரிக்கைகள்/ ஈடேற/ செய்ய/ விரதம் பூண்ட/ இராமா/


சரணம்
வர/ ரத்ன/ பீட2மு-அந்து3/ மஜ்ஜனமு/
சிறந்த/ இரத்தின/ பீடத்தினில்/ புனித நீராட்டலினை/

புட3மி ஸுருல/ சேத/ கை3கொன்ன/ ராம/
அந்தணர்கள்/ கைகளினால்/ ஏற்றுக் கொண்ட/ இராமா/

பரம/ ப4க்துலனு/ பாலனமு ஸேயு/
சீரிய/ தொண்டர்களை/ பேணும்/

ஸாகேத/ வாஸ/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ்ரீ)
சாகேத/ நகருறையே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - புட்டி - புட்டி நீவு.

2 - செயி - சே.

4 - ராம - ராம சந்த்3ர.

Top

மேற்கோள்கள்
3 - முனுல கோரிகலீடே3ர ஸேய பூனு-கொன்ன - முனிவர்களின் கோரிக்கைகள் ஈடேறச் செய்ய, விரதம் பூண்ட - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 6-வது அத்தியாயம் (செய்யுடகள் 23 – 25) நோக்கவும்.

5 - மஜ்ஜனமு - புனித நீராட்டல் - வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 128-வது அத்தியாயம் (செய்யுட்கள் 63, 64) (இராமன் முடிசூடுதல்).

Top

விளக்கம்
6 - புட3மி ஸுருல - அந்தணர்கள் - வசிட்டர் முதலானோர்

புனித நீராடல் - பட்டம் சூடுகையில்
சாகேத நகர் - அயோத்தியா

Top


Updated on 08 Feb 2010

தியாகராஜ கிருதி - ரகு4 நாயக - ராகம் ஹம்ஸ த்4வனி - Raghu Nayaka - Raga Hamsa Dhvani

பல்லவி
ரகு4 நாயக நீ பாத3 யுக3
ராஜீவமுல நே விட3 ஜால ஸ்ரீ (ரகு4)

அனுபல்லவி
அக4 ஜாலமுல 1பா3ர-தோ3லி
நன்னாத3ரிம்ப நீவே க3தி காத3 ஸ்ரீ (ரகு4)

சரணம்
4வ ஸாக3ரமு தா3ட லேக நே
3லு கா3ஸி-படி3 நீ மருகு3 ஜேரிதினி
அவனிஜாதி4பாஸ்1ரித ரக்ஷக
2ஆனந்த3-கர ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ரகு4)


பொருள் - சுருக்கம்
  • இரகு நாயகா! புவிமகள் கேள்வா! சார்ந்தோரைக் காப்போனே! ஆனந்தமளிப்போனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

    • உனது திருவடியிணைத் தாமரைகளை நான் விடேன்;
      • (எனது) பாவக் குவியலினை துர விரட்டி, என்னை யாதரிக்க நீயே கதியன்றோ?
      • பிறவிக்கடலினைத் தாண்டவியலாது, நான் மிக்கு துயருற்று, உனது நீழலை யடைந்தேன்;

    • உனது திருவடியிணைத் தாமரைகளை நான் விடேன்



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ரகு4/ நாயக/ நீ/ பாத3/ யுக3/
    இரகு/ நாயகா/ உனது/ திருவடி/ இணை/

    ராஜீவமுல/ நே/ விட3 ஜால/ ஸ்ரீ/ (ரகு4)
    தாமரைகளை/ நான்/ விடேன்/ ஸ்ரீ/ ரகு நாயகா...


    அனுபல்லவி
    அக4/ ஜாலமுல/ பா3ர/-தோ3லி/
    (எனது) பாவ/ குவியலினை/ துர/ விரட்டி/

    நன்னு/-ஆத3ரிம்ப/ நீவே/ க3தி/ காத3/ ஸ்ரீ/ (ரகு4)
    என்னை/ ஆதரிக்க/ நீயே/ கதி/ அன்றோ/ ஸ்ரீ/ ரகு நாயகா...


    சரணம்
    4வ/ ஸாக3ரமு/ தா3ட/ லேக/ நே/
    பிறவி/ கடலினை/ தாண்ட/ இயலாது/ நான்/

    3லு/ கா3ஸி/-படி3/ நீ/ மருகு3/ ஜேரிதினி/
    மிக்கு/ துயர்/ உற்று/ உனது/ நீழலை/ யடைந்தேன்/

    அவனிஜா/-அதி4ப/-ஆஸ்1ரித/ ரக்ஷக/
    புவிமகள்/ கேள்வா/ சார்ந்தோரை/ காப்போனே/

    ஆனந்த3/-கர/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ரகு4)
    ஆனந்தம்/ அளிப்போனே/ ஸ்ரீ தியாகராசன்/ போற்றும்/ இரகு நாயகா...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - பா3ர-தோ3லி - பா3ர-த்3ரோலி.

    2 - ஆனந்த3-கர - ஆனந்தா3கர.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்



    Updated on 07 Feb 2010