சால கல்லலாடு3கொன்ன ஸௌக்2யமேமிரா
அனுபல்லவி
காலமு போனு மாட நிலுசுனு
கல்யாண ராம நாதோ (சா)
சரணம்
தல்லி தண்ட்3ரி 1நேனுண்ட3 தக்கின 2ப4யமேலராயனி
பலுமாரு நீவெந்தோ பா3ஸலு சேஸி
இலலோ 3ஸரி வாரலலோ எந்தோ ப்3ரோசுசுண்டி3
பெத்3த3லதோ பல்கி மெப்பிஞ்சி த்யாக3ராஜுனிதோ (சா)
பொருள் - சுருக்கம்
கலியாணராமா!
- என்னிடம் மிக்கு பொய்கள் பேசியதால் (கிடைத்த) சௌக்கியமென்னவய்யா?
- காலம் செல்லும், (சொன்ன) சொல் நிற்கும்;
- 'தாய், தந்தை யானிருக்க மற்ற பயமேனடா' என பலமுறை, நீயெத்தனையோ உறுதிமொழிகள் கூறி,
- புவியிலும், சரிநிகரானோரிடையும் எவ்வளவோ பேணியிருந்து,
- பெரியோரிடம் பகர்ந்து, புகழ்ந்து,
- (ஆனால்) தியாகராசனிடம் மிக்கு பொய்கள் பேசியதால் (கிடைத்த) சௌக்கியமென்னவய்யா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சால/ கல்லலு/-ஆடு3கொன்ன/ ஸௌக்2யமு/-ஏமிரா/
மிக்கு/ பொய்கள்/ பேசியதால்/ (கிடைத்த) சௌக்கியம்/ என்னவய்யா/
அனுபல்லவி
காலமு/ போனு/ மாட/ நிலுசுனு/
காலம்/ செல்லும்/, (சொன்ன) சொல்/ நிற்கும்/
கல்யாண/ ராம/ நாதோ/ (சா)
கலியாண/ ராமா/ என்னிடம்/ மிக்கு...
சரணம்
தல்லி/ தண்ட்3ரி/ நேனு/-உண்ட3/ தக்கின/ ப4யமு/-ஏலரா/-அனி/
'தாய்/ தந்தை/ யான்/ இருக்க/ மற்ற/ பயம்/ ஏனடா/ என/
பலுமாரு/ நீவு/-எந்தோ/ பா3ஸலு/ சேஸி/
பலமுறை/ நீ/ எத்தனையோ/ உறுதிமொழிகள்/ கூறி/
இலலோ/ ஸரி வாரலலோ/ எந்தோ/ ப்3ரோசுசு/-உண்டி3/
புவியிலும்/ சரிநிகரானோரிடையும்/ எவ்வளவோ/ பேணி/ இருந்து/
பெத்3த3லதோ/ பல்கி/ மெப்பிஞ்சி/ த்யாக3ராஜுனிதோ/ (சா)
பெரியோரிடம்/ பகர்ந்து/ புகழ்ந்து/ தியாகராசனிடம்/ மிக்கு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நேனுண்ட3 - நேனுண்ட3க3.
2 - ப4யமேலரா - ப4யமேல.
3 - ஸரி வாரலலோ எந்தோ - ஸரி வாரலலோ எந்தெந்தோ.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
சௌக்கியம் - மனத்திற்கு இன்பம்.
Top
Updated on 15 Oct 2009