எந்தனுசு வர்ணிந்துனேயீ
இந்தி3ரா ரமணுனி நே(னெந்த)
அனுபல்லவி
ஸந்ததமு நம்மு ஸஜ்ஜனுல-
யாஸந்த தீர்சு வஸந்த குமாருனி (எ)
சரணம்
சரணம் 1
மெருகு3 ப3ங்க3ரு சேலமிரவொந்த3 மரியு
நூபுரமுலு க4ல்லனக3 ப4க்துல கனி
கருணாம்ரு2தமு சல்லக3 யோகு3ல
1த3ஹரமுலு ஜ2ல்லனக3 வேஞ்சேஸின (எ)
சரணம் 2
திலகமு செலக3க3 ஜலஜாக்ஷுடி3லனு
கத3லு டீ2வி வினிபிம்பக3 தும்பு3ரு
நாரது3லு கனி நுதியிம்பக3 ஸுருலு
ஸுமமுல வான குரியிம்பக3 வேஞ்சேஸின (எ)
சரணம் 3
க4ன நீலமுனு கேரு தனுவுபை புனுகு3
சந்த3னமு பரிமளிம்பக3 பா3கு3-
யுரமுன முக்தா மணுலாட3க3 த்யாக3ராஜு
கனி 2சே-லாகி3ய்யக3 வேஞ்சேஸின (எ)
பொருள் - சுருக்கம்
- எப்படியென்று வருணிப்பேனே, இந்த இந்திரை மணாளனை, நான்!
- என்றும் நம்பும் நல்லோரின் ஆசையெல்லாம் தீர்க்கும், வசந்த குமாரனை,
- துலங்கு, பீதாம்பரம் பொருந்தமாக,
- சலங்கைகள் கலீரென,
- தொண்டர்களைக் கண்டு, கருணையமிழ்து சொரிந்துகொண்டு,
- துலங்கு, பீதாம்பரம் பொருந்தமாக,
- யோகியர் இதயங்கள் துடிக்க, எழுந்தருளிய, இந்த இந்திரை மணாளனை,
- திலகம் சிறக்க, கமலக்கண்ணன், புவியில் அசையும் ஒயில் கேள்விப்பட,
- தும்புரு, நாரதர் ஆகியோர், கண்டு, போற்ற,
- திலகம் சிறக்க, கமலக்கண்ணன், புவியில் அசையும் ஒயில் கேள்விப்பட,
- வானோர் மலர் மழை பொழிய, எழுந்தருளிய, இந்த இந்திரை மணாளனை,
- கார்முகில் நீலத்தினைப் பழிக்கும் மேனியில், புனுகு சந்தனம் பரிமளிக்க,
- அகன்ற மார்பினில் முத்து மணி மாலைகளாட,
- கார்முகில் நீலத்தினைப் பழிக்கும் மேனியில், புனுகு சந்தனம் பரிமளிக்க,
- தியாகராசனைக் கண்டு கைகொடுக்க, எழுந்தருளிய, இந்த இந்திரை மணாளனை,
- என்றும் நம்பும் நல்லோரின் ஆசையெல்லாம் தீர்க்கும், வசந்த குமாரனை,
- எப்படியென்று வருணிப்பேனே, நான்!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/-அனுசு/ வர்ணிந்துனே/-ஈ/
எப்படி/ யென்று/ வருணிப்பேனே/ இந்த/
இந்தி3ரா/ ரமணுனி/ நேனு/-(எ)
இந்திரை/ மணாளனை/ நான்/
அனுபல்லவி
ஸந்ததமு/ நம்மு/ ஸஜ்ஜனுல/-
என்றும்/ நம்பும்/ நல்லோரின்/
ஆஸ/-அந்த/ தீர்சு/ வஸந்த/ குமாருனி/ (எ)
ஆசை/ யெல்லாம்/ தீர்க்கும்/ வசந்த/ குமாரனை/ எப்படியென்று...
சரணம்
சரணம் 1
மெருகு3/ ப3ங்க3ரு சேலமு/-இரவொந்த3/ மரியு/
துலங்கு/ பீதாம்பரம்/ பொருந்தமாக/ மேலும்/
நூபுரமுலு/ க4ல்லு/-அனக3/ ப4க்துல/ கனி/
சலங்கைகள்/ கலீர்/ என/ தொண்டர்களை/ கண்டு/
கருணா/-அம்ரு2தமு/ சல்லக3/ யோகு3ல/
கருணை/ யமிழ்து/ சொரிந்துகொண்டு/ யோகியர்/
த3ஹரமுலு/ ஜ2ல்லு-அனக3/ வேஞ்சேஸின/ (எ)
இதயங்கள்/ துடிக்க/ எழுந்தருளிய/ இந்திரை...
சரணம் 2
திலகமு/ செலக3க3/ ஜலஜ/-அக்ஷுடு3/-இலனு/
திலகம்/ சிறக்க/ கமல/ கண்ணன்/ புவியில்/
கத3லு/ டீ2வி/ வினிபிம்பக3/ தும்பு3ரு/
அசையும்/ ஒயில்/ கேள்விப்பட/ தும்புரு/
நாரது3லு/ கனி/ நுதியிம்பக3/ ஸுருலு/
நாரதர் ஆகியோர்/ கண்டு/ போற்ற/ வானோர்/
ஸுமமுல/ வான/ குரியிம்பக3/ வேஞ்சேஸின/ (எ)
மலர்/ மழை/ பொழிய/ எழுந்தருளிய/ இந்திரை...
சரணம் 3
க4ன/ நீலமுனு/ கேரு/ தனுவுபை/ புனுகு3/
கார்முகில்/ நீலத்தினை/ பழிக்கும்/ மேனியில்/ புனுகு/
சந்த3னமு/ பரிமளிம்பக3/ பா3கு3/-
சந்தனம்/ பரிமளிக்க/ அகன்ற/
உரமுன/ முக்தா/ மணுலு/-ஆட3க3/ த்யாக3ராஜு/
மார்பினில்/ முத்து/ மணி (மாலைகள்)/ ஆட/ தியாகராசனை/
கனி/ சே/-லாகு3-இய்யக3/ வேஞ்சேஸின/ (எ)
கண்டு/ கை/ கொடுக்க/ எழுந்தருளிய/ இந்திரை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - த3ஹரமுலு ஜ2ல்லனக3 - த3ஹரமுலு க4ல்லனக3 - த3ஹரமுலு சல்லனக3 : இவ்விடத்தில் 'இதயங்கள் துடிக்க' என்பதுதான் பொருந்தும். எனவே, 'த3ஹரமுலு ஜ2ல்லனக3' என்பதே சரியாகும்.
2 - சே-லாகி3ய்யக3 - செயி-லாகி3ய்யக3 : இரண்டுக்குமே பொருள் ஒன்றுதான்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
இப்பாடலில், தியாகராஜர், பிரகலாதனைக் காண, அரி, புவிக்கு வருகை தரும் அழகினை வருணிக்கின்றார்
தும்புரு - வானோர் இசைஞரின் தலைவன்
இந்திரை - இலக்குமி
இந்திரை மணாளன் - அரி
Top
Updated on 15 Feb 2011
No comments:
Post a Comment