Friday, February 18, 2011

தியாகராஜ கிருதி - என்னடோ3 ரக்ஷிஞ்சிதே - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Ennado Rakshinchite - Raga Saurashtram

பல்லவி
என்னடோ3 ரக்ஷிஞ்சிதே நீவிபுடீ3
வக3னு உண்ட3 வலெனா

அனுபல்லவி
பன்னக31யன 1பெத்33ல ஸ்வ-
பா4வமிட்லுண்ட33
பா3கு33 நன்னே நீ(வென்னடோ3)

சரணம்
சரணம் 1
சீகடி சேதனு கா3ஸி ஜெந்தி3யீ
லோகுலு ஸகல கர்மமுலகை மன
ராக கொரகு ஜூசெத3ரனி தெலிஸி
விபா4-கருடு3 மதி3னி
ப்ராகடமுக3 தா 2ரானு செல்லுனனி
வ்யாகுலுடை3 அதி வேக3முனனு
வேகுவ ஜாமுன தோஷமு கலக3னு
தா 3கருணனருணுனி பனுப லேதா3 (எ)


சரணம் 2
நீரு லேக ஸஜ்ஜன க3ணமுலு மன
தா3ரினி ஜூசேரனுசு தெலிஸி
4காவேரி தானு 2ரானு செல்லுனனுசு
விசார ஹ்ரு23யுராலை
ஸாரெகு வச்சுனனுசு ஸந்தோஷமு
வீருலகெல்லனு கல்க3 பட3மடி
5மாருத சஞ்சலமுல பனிபி
6செலமலூர சேய லேதா3 ராம (எ)


சரணம் 3
3ர்விஞ்சின ஆ ராவண பா34ல-
நோர்வ லேகனு விபீ4ஷணுடு3 நின்னு
7ஸர்வ லோக ஸ1ரண்யா வந்த3னமன
8நிர்விகாருடை3 நீவு
ஸர்வதா3 ரக்ஷிஞ்செத3னனுசுனு
9ஸார்வபௌ4 லங்காதி4பத்யமுன
10ஸர்வக்3ஞுனி 11லக்ஷ்மணுனிம்மனகா3
12ஸர்வ ஸன்னுத த்யாக3ராஜுனி (எ)


பொருள் - சுருக்கம்
  • அரவணையோனே!
  • இராமா!
  • யாவரும் போற்றுவோனே!

  • என்றோ (என்னைக்) காத்ததனால், நீ இவ்வமயம் இப்படியிருக்க வேண்டுமோ?

  • பெரியோரின் இயல்பு இப்படியிருக்க, நன்கு, என்னையே நீ என்றோ காத்ததனால், இவ்வமயம் இப்படியிருக்க வேண்டுமோ?

    • இருட்டினால் துயருற்று, இந்த புவியோர், அனைத்து கருமங்களுக்கும், நமது வரவினை எதிர்நோக்கியுள்ளனரெனத் தெரிந்து,
    • கதிரவன், தனது உள்ளத்தினில், வெளிப்படையாக, தான் வர நேரமாகுமென கவலையுற்றவனாகி, மிக்கு விரைவாக,
    • விடியற் காலை வேளையில், மகிழ்ச்சி யூட்ட, தான், கருணையுடன், அருணனை அனுப்பவில்லயா?

    • நீரின்றி, நன்மக்கள், நமது வழி நோக்கியுள்ளனர் என்றறிந்து,
    • காவிரி, தான் வரத் தாமதமாகுமென, கவலை உள்ளத்தினளாகி, தவறாது வருவாளென,
    • மகிழ்ச்சியை இம்மக்கள் யாவருக்கும் அளிக்க, மேற்கத்திய இளங் காற்றினை அனுப்பி, ஊற்றுக்களை ஊறச் செய்யவில்லையா?

    • செருக்குற்ற, அந்த இராவணனின் தொல்லைகள் தாளவியலாது,
    • விபீடணன், உன்னை, 'பல்லுலகிற்கும் புகலே! வந்தனம்' என,
    • பற்றற்றவனாகி, நீ, 'எவ்வமயமும் காப்போம்' என்று,
    • இலங்கையின் தன்னரசாட்சியை, (விபீடணனுக்கு) யாவுமறிந்த, இலக்குவனிடம், அளிக்கச் சொல்ல,


  • தியாகராசனை என்றோ காத்ததனால், நீ இவ்வமயம் இப்படியிருக்க வேண்டுமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னடோ3/ ரக்ஷிஞ்சிதே/ நீவு/-இபுடு3/-
என்றோ/ (என்னைக்) காத்ததனால்/ நீ/ இவ்வமயம்/

ஈ-வக3னு/ உண்ட3/ வலெனா/
இப்படி/ யிருக்க/ வேண்டுமோ/


அனுபல்லவி
பன்னக3/ ஸ1யன/ பெத்33ல/
அரவு/ அணையோனே/ பெரியோரின்/

ஸ்வபா4வமு/-இட்லு/-உண்ட33/ பா3கு33/ நன்னே/ நீவு/-(எ)
இயல்பு/ இப்படி/ யிருக்க/ நன்கு/ என்னையே/ நீ/ என்றோ...


சரணம்
சரணம் 1
சீகடி சேதனு/ கா3ஸி/ ஜெந்தி3/-ஈ/
இருட்டினால்/ துயர்/ உற்று/ இந்த/

லோகுலு/ ஸகல/ கர்மமுலகை/ மன/
புவியோர்/ அனைத்து/ கருமங்களுக்கும்/ நமது/

ராக கொரகு/ ஜூசெத3ரு/-அனி/ தெலிஸி/
வரவினை/ எதிர்நோக்கியுள்ளனர்/ என/ தெரிந்து/

விபா4-கருடு3/ மதி3னி/
கதிரவன்/ (தனது) உள்ளத்தினில்/

ப்ராகடமுக3/ தா/ ரானு/ செல்லுனு/-அனி/
வெளிப்படையாக/ தான்/ வர/ நேரமாகும்/ என/

வ்யாகுலுடை3/ அதி/ வேக3முனனு/
கவலையுற்றவனாகி/ மிக்கு/ விரைவாக/

வேகுவ/ ஜாமுன/ தோஷமு/ கலக3னு/
விடியற் காலை/ வேளையில்/ மகிழ்ச்சி/ யூட்ட/

தா/ கருணனு/ அருணுனி/ பனுப லேதா3/ (எ)
தான்/ கருணையுடன்/ அருணனை/ அனுப்பவில்லயா/


சரணம் 2
நீரு/ லேக/ ஸஜ்ஜன க3ணமுலு/ மன/
நீர்/ இன்றி/ நன்மக்கள்/ நமது/

தா3ரினி/ ஜூசேரு/-அனுசு/ தெலிஸி/
வழி/ நோக்கியுள்ளனர்/ என்று/ அறிந்து/

காவேரி/ தானு/ ரானு/ செல்லுனு/-அனுசு/
காவிரி/ தான்/ வர/ தாமதமாகும்/ என/

விசார/ ஹ்ரு23யுராலை/
கவலை/ உள்ளத்தினளாகி/

ஸாரெகு/ வச்சுனு/-அனுசு/ ஸந்தோஷமு/
தவறாது/ வருவாள்/ என/ மகிழ்ச்சியை/

வீருலகு/-எல்லனு/ கல்க3/ பட3மடி/
இம்மக்கள்/ யாவருக்கும்/ அளிக்க/ மேற்கத்திய/

மாருத/ சஞ்சலமுல/ பனிபி/
இளங்/ காற்றினை/ அனுப்பி/

செலமலு/-ஊர/ சேய லேதா3/ ராம/ (எ)
ஊற்றுக்களை/ ஊற/ செய்யவில்லையா/ இராமா/


சரணம் 3
3ர்விஞ்சின/ ஆ/ ராவண/ பா34லனு/-
செருக்குற்ற/ அந்த/ இராவணனின்/ தொல்லைகள்/

ஓர்வ/ லேகனு/ விபீ4ஷணுடு3/ நின்னு/
தாள/ இயலாது/ விபீடணன்/ உன்னை/

ஸர்வ லோக/ ஸ1ரண்யா/ வந்த3னமு/-அன/
'பல்லுலகிற்கும்/ புகலே/ வந்தனம்/ என/

நிர்விகாருடை3/ நீவு/
பற்றற்றவனாகி/ நீ/

ஸர்வதா3/ ரக்ஷிஞ்செத3னு/-அனுசுனு/
'எவ்வமயமும்/ காப்போம்/ என்று/

ஸார்வபௌ4ம/ லங்கா/-அதி4பத்யமுன/
தன்னரசு/ இலங்கையின்/ ஆட்சியை/ (விபீடணனுக்கு)

ஸர்வக்3ஞுனி/ லக்ஷ்மணுனி/-இம்மனகா3/
யாவுமறிந்த/ இலக்குவனிடம்/ அளிக்கச் சொல்ல/

ஸர்வ/ ஸன்னுத/ த்யாக3ராஜுனி/ (எ)
யாவரும்/ போற்றுவோனே/ தியாகராசனை/ என்றோ...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - செலம - எல்லா புத்தகங்களிலும், 'சலம' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'ஊற்று' என்று பொருளாகும். அதற்கு, சரியான தெலுங்கு சொல், 'செலம' ஆகும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
3 - அருணுனி பனுப - அருணனை அனுப்ப - சூரியன் உதிப்பதற்கு முன்னரான, இளங்காலை, 'அருணோதயம்' எனப்படும். அருணன், சூரியனின் தேரோட்டியான கதை மகாபாரதத்தில் (ஆதி பருவம் - ஆஸ்திக பருவம் - 24-வது அத்தியாயம்) கொடுக்கப்பட்டுள்ளது.

4 - காவேரி - கச்சியப்ப சிவாச்சாரியாரின், கந்த புராணத்தினில், அகத்தியரால் காவிரி உண்டானது என்று கூறப்பட்டுள்ளது. காவிரியின் கதையினை நோக்கவும்.

Top

5 - மாருத சஞ்சலமு - இளங் காற்று - தென்மேற்கு பருவ மழையில், தமிழ் நாட்டுக்கு, அதிகமாக மழை கிடையாது. ஆனாலும், ஆடி மாதத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், பெய்யும் மழை காரணமாக, காவிரியில் நீர் பெருகும். இன்றும், ஆடி மாதம், 18-ம் நாள், 'ஆடிப்பெருக்கு' என்று, காவிரி நதி பாயும் இடங்களில், கொண்டாடப்படும். அங்ஙனம், நீர் பெருகுவதற்குமுன், மேற்கிலிருந்து இளங்காற்று வீசும். ஆற்றுப்படுகையில், ஊற்றுக்கள் பெருகும். இதனை, காவிரியில் நீர் வருவதற்கு 'முன்னோடி' என்று தியாகராஜர் கூறுகின்றார்.

7 - ஸர்வ லோக ஸ1ரண்யா - 'பல்லுலகப் புகலே' என வால்மீகி ராமாயணத்தில் (யுத்தகாண்டம், 17-வது அத்தியாயம், 17-வது செய்யுள்), ராமனை நோக்கி, விபீடணன் கூறிய சொற்களை, அப்படியே, தியாகராஜர் பயன்படுத்துகின்றார். .

"பல்லுலகிற்கும் புகலளிக்கும், அந்த மேலோன், ராமனிடம், விபீடணனாகிய நான் வந்திருக்கின்றேன் என்று கூறுங்கள்."

Top

விளக்கம்
1 - பெத்33ல ஸ்வபா4வமிட்லுண்ட33 - பெரியோரின் இயல்பு இப்படியிருக்க - சரணங்களில் கூறியபடி. இந்த மூன்று உதாரணங்களைக் கூறி, தியாகராஜர், ராமனிடம், 'உனதருள் வரும் என்று எனக்கு ஆசுவாசம் அளிப்பாய்' என்கின்றார்.

2 - ரானு செல்லுனு - இவ்விடத்தில் 'செல்லுனு' என்ற சொல்லுக்கு சரியான பொருள் தெரியவில்லை. ஆனால், முதலிரண்டு சரணங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 'ரானு செல்லுனு' என்பதற்கு 'வரத் தாமதமாகும்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
Top

6 - செலம - ஊற்று. நதிக் கரையில் வாழும் மக்கள், பொதுவாக, நதி நீரை, நேரடியாக, குடிப்பதற்குப் பயன் படுத்துவதில்லை. ஆற்றுப் படுகையில், அன்றாடம், சிறிய பள்ளம் தோண்டி, அதனில் ஊறும் நீரையே எடுத்துச் செல்வர்.

8 - நிர்விகாருடை3 - பற்றற்றவனாகி - பொதுவாக, இச்சொல் மாற்றமற்ற தன்மையதாகிய, 'பரம்பொருளினை'க் குறிக்கும். இங்கு, 'வேண்டியவன் - வேண்டாதவன்' என்று நோக்காது, புகலளிக்கும், ராமனின் தன்மையைக் குறிப்பதாக, 'பற்றற்றவனாகி' என்று பொருள் கொள்ளப்பட்டது. விபீடணன், புகல் கோரி வந்தபோது, மற்றெல்லோரையும் கலந்தாலோசித்த பின்னர், ராமன், தனது முடிவினைத் தெரிவிக்கின்றான். அவன் கூறிய சொற்களாவன (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 18-வது அத்தியாயம், 33-34-வது செய்யுட்கள் - மேற்கூறிய வலைத் தளத்தில் நோக்கவும்) -

Top

"என்னிடம் ஒருமுறையாகிலும், 'உன்னவன் நான்' என்று இரந்து எவன் வருகின்றானோ அவனுக்கு அனைத்துயிர்களிடமிருந்தும் அடைக்கலம் நான் அளிப்பேன் - இது என் விரதம்.

எனவே, வானரர்களிற் சிறந்தோனே! சுக்கிரீவா! வந்துள்ளது, விபீடணனோ, அல்லது ராவணனேதான் ஆகிலும், அவனுக்கு அடைக்கலம் அளித்துவிட்டேன். கொண்டுவா அவனை."

9 - ஸார்வபௌ4 - சார்வபூமன் - இச்சொல் அமைந்துள்ள இடத்தைக் கருத்தில் கொண்டு, 'இலங்கையின் தன்னரசாட்சி' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும், இது, பரம்பொருளின் இலக்கணமாகும். எனவே, இதனை, ராமனின் அடைமொழியாகவும் கொள்ளலாம்.

10 - ஸர்வக்3 - யாவுமறிந்தவன். இலக்குவன், வைகுண்டத்தில், விஷ்ணுவின் படுக்கையாகிய, சேடனின் அவதாரமாகும். அதனால், ராமனின் அவதாரப் பெருமையை, முக்கியமாக, 'வேண்டியன்-வேண்டாதவன் என்று பாகுபாடில்லாத, பற்றற்ற தன்மை'யினை, முழுதும் அறிந்தவனாவான்.

11 - இம்மனகா3 - அளிக்கச் சொல்ல - இச்சொல்லினைப் பல்லவியுடன் இணைத்தால் பொருள் நிறைவுறும்.

Top

12 - ஸர்வ ஸன்னுத - யாவரும் போற்றுவோன் - ராமன், போர் தொடங்கு முன்னமே, விபீடணனுக்கு, இலங்கைக்குப் பேரரசனாக முடி சூட்டினான். இது கீதையில், கண்ணன், அர்ஜுனனை நோக்கி கூறிய சொற்களை (11-வது அத்தியாயம் - 33-வது செய்யுள்) எதிரொலிப்பதாக உள்ளது -

"எனவே, நீ எழுந்திரு; புகழ் பெறு; எதிரிகளை வென்று, அரசினைப் பெருவாரியாகத் துய்ப்பாய்.
ஈர்கை வில்லாளா! என்னால், இவர்கள் முன்னமேயே (எனது சங்கல்பத்தில்) கொல்லப்பட்டுவிட்டனர். (இவர்கள் போர்க்களத்தில் உண்மையாகக் கொல்லப்படுவதற்கு) பொருட்டாக மட்டுமே இருப்பாயாக."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

ஊற்றுக்கள் - ஆற்றுப் படுகையில்
பற்றற்ற - நண்பன், பகைவனென பாகுபாடற்ற
தன்னரசாட்சி - யாருக்கும் உட்படாத அரசு

Top


Updated on 18 Feb 2011

No comments: