Sunday, February 20, 2011

தியாகராஜ கிருதி - ஏமேமோ தெலியக - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Ememo Teliyaka - Raga Saurashtram - Nauka Charitram

பல்லவி
ஏமேமோ தெலியக பலிகெத3ரு செலுலார
நா மீத33ய லேக

சரணம்
சரணம் 1
முனு மந்த3ர கி3ரி முனுக3 1கூர்மமை
வீபுன 2தால்சக3 லேதா3 (ஏ)


சரணம் 2
3கரி ராஜு மகரிசே கா3ஸி ஜெந்த33 நேனு
கருண ஜூட3 லேதா3 (ஏ)


சரணம் 3
4வெரவக நீட ஜொச்சின 5ஸோமகுனி கொட்டி
வேத3மு தே லேதா3 (ஏ)


சரணம் 4
6காளிந்தி3 லோனி காளியுனி மத3ம்பு3னு
காலனணச லேதா3 (ஏ)


சரணம் 5
மகரமு கொம்போயின 7கு3ரு புத்ருனி
மரி தெச்சியொஸக3 லேதா3 (ஏ)


சரணம் 6
த்யாக3ராஜுனகு ஸகு2டை3ன நாது3
ப்ரதாபமு வின லேதா3 (ஏ)


பொருள் - சுருக்கம்
  • பெண்டிரே!

  • ஏதேதோ, அறியாது பேசுகின்றீர், என்மீது கருணையின்றி;

    • முன்பு, மந்தர மலை (நீரில்) மூழ்க, ஆமையாகி, முதுகின்மீது சுமக்கவில்லையா?
    • கரியரசன், முதலையிடம் துயருற, நான் கருணை காட்டவில்லையா?
    • அச்சமின்றி, நீருட் புகுந்த சோமகனைக் கொன்று, வேதங்களைக் கொணரவில்லையா?
    • காளிந்தி நதியில், காளியனின் செருக்கினை (எனது) காலினால் அடக்கவில்லையா?
    • சங்கு அரக்கன் கொண்டுபோன குரு மைந்தனை, திரும்பக் கொணர்ந்து அளிக்கவில்லையா?


  • தியாகராசனுக்கு நண்பனான எனது பிரதாபங்களைக் கேட்டதில்லையா?

  • ஏதேதோ, அறியாது பேசுகின்றீர், என்மீது கருணையின்றி.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/-ஏமோ/ தெலியக/ பலிகெத3ரு/ செலுலார/
ஏது/ ஏதோ/ அறியாது/ பேசுகின்றீர்/ பெண்டிரே/

நா/ மீத3/ த3ய/ லேக/
என்/ மீது/ கருணை/ யின்றி/


சரணம்
சரணம் 1
முனு/ மந்த3ர/ கி3ரி/ முனுக3/ கூர்மமை/
முன்பு/ மந்தர/ மலை/ (நீரில்) மூழ்க/ ஆமையாகி/

வீபுன/ தால்சக3 லேதா3/ (ஏ)
முதுகின்மீது/ சுமக்கவில்லையா/


சரணம் 2
கரி/ ராஜு/ மகரிசே/ கா3ஸி ஜெந்த33/ நேனு/
கரி/ யரசன்/ முதலையிடம்/ துயருற/ நான்/

கருண/ ஜூட3 லேதா3/ (ஏ)
கருணை/ காட்டவில்லையா/


சரணம் 3
வெரவக/ நீட/ ஜொச்சின/ ஸோமகுனி/ கொட்டி/
அச்சமின்றி/ நீருட்/ புகுந்த/ சோமகனை/ கொன்று/

வேத3மு/ தே லேதா3/ (ஏ)
வேதங்களை/ கொணரவில்லையா/


சரணம் 4
காளிந்தி3 லோனி/ காளியுனி/ மத3ம்பு3னு/
காளிந்தி நதியில்/ காளியனின்/ செருக்கினை/

காலனு/-அணச லேதா3/ (ஏ)
(எனது) காலினால்/ அடக்கவில்லையா/


சரணம் 5
மகரமு/ கொம்போயின/ கு3ரு/ புத்ருனி/
சங்கு அரக்கன்/ கொண்டுபோன/ குரு/ மைந்தனை/

மரி/ தெச்சி/-ஒஸக3 லேதா3/ (ஏ)
திரும்ப/ கொணர்ந்து/ அளிக்கவில்லையா/


சரணம் 6
த்யாக3ராஜுனகு/ ஸகு2டை3ன/ நாது3/
தியாகராசனுக்கு/ நண்பனான/ எனது/

ப்ரதாபமு/ வின லேதா3/ (ஏ)
பிரதாபங்களை/ கேட்டதில்லையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தால்சக3 லேதா3 - தால்சக3 லேதா3 செலுலார.

Top

மேற்கோள்கள்
1 - கூர்மமை - ஆமையாகி - பாகவத புராணம் 8.7 நோக்கவும்.

3 - கரி ராஜு - கரி யரசன் - பாகவத புராணம் 8.4 நோக்கவும்.

5 - ஸோமகுனி - சோமகன் - பாகவத புராணத்தினில் (8-வது புத்தகம், 24-வது அத்தியாயம்), 'ஹயக்3ரீவ' (குதிரைத்தலை) அசுரன், மறைகளைக் கவர்ந்து சென்றதாகவும், இறைவன், மீனாக அவதரித்து, அவ்வசுரனைக் கொன்று, மறைகளை மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிலேயே, மறைகளைக் கவர்ந்து சென்றது, 'சோமகாசுரன்' என்றும் கூறப்பட்டுள்ளது.

அப்புராணத்திலேயே, (5-வது புத்தகம், 18-வது அத்தியாயம்), ஓர் அசுரன் மறைகளைக் கவர்ந்து சென்றதாகவும், இறைவன், ஹயக்3ரீவராக அவதரித்து அவனைக் கொன்று, மறைகளை மீட்டதாகக் கூறப்படும்.

Top

ஸ்ரீ வேங்கடேஸ்வர அஷ்டோத்தரத்தில், மது4, கைடப4 என்ற மறைகளைக் கவர்ந்த அசுரர்களைக் கொன்று, இறைவனாகிய, ஹயக்3ரீவர் மறைகளை மீட்டதாகக் கூறப்படும்.

எனவே, மறைகளைக் கவர்ந்தது, ஹயக்3ரீவரா, சோமகாசுரனா அல்லது மது4, கைடப4னா என விளங்கவில்லை. அதுபோன்றே, அசுரனைக் கொன்று, மறைகளை மீட்டது, இறைவனின், மீன் அவதாரத்தினிலா, அல்லது ஹயக்3ரீவ அவதாரத்தினிலா, என்பதும் விளங்கவில்லை. இது குறித்து, முரண்பாடுகள் இருப்பதனால், தாமே இதனைக் குறித்து முடிவு செய்யும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

6 - காளிந்தி3 - காளிந்தி நதியில் - பாகவத புராணம் 10.16 நோக்கவும்.

7 - கு3ரு புத்ருனி - குரு மைந்தனை - பாகவத புராணம் 10.45 நோக்கவும்.

பாகவத புராணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு

Top

விளக்கம்
4 - வெரவக - அச்சமின்றி - இது சோமகனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆனால், கண்ணன் இங்கு, தனது பிரதாபங்களைக் கூறுவதனால், இது கண்ணனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது.

இப்பாடல், 'நௌக சரித்ரம்' 'ஓடக்கதை' எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

பாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். ஆய்ச்சியர், கண்ணனை நம்பாது, அவனுடைய பல குறும்புகளை விவரிக்கின்றனர்.இப்பாடலில், கண்ணன் தனது பிரதாபங்களை வருணித்து, கோபியர், தன்னைப் பற்றி அறியாது பேசுகின்றனர் என்கின்றான்.

Top


Updated on 21 Feb 2011

No comments: