Monday, February 21, 2011

தியாகராஜ கிருதி - கு4ம கு4ம - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Ghuma Ghuma - Raga Saurashtram - Nauka Charitram

பல்லவி
கு4ம கு4ம கு4மயனி வாஸனதோ முத்3து3
கு3ம்மலு வெட3லிரி சூட3ரே

அனுபல்லவி
1மமததோனு ஸுர வருலெல்ல ஸுர தரு
ஸும வானலு குரியிம்பக3 வேட்3கக3 (கு4)

சரணம்
சரணம் 1
நலு-வங்க 2பக3லு வத்துலு தேஜரில்லக3
செலக3 ஸாம்ப்3ராணி பொக3லு க்3ரம்ம க3ந்த4
பொடு3ல சல்லுசு பய்யெத3ல தீயுசு
பன்னீருலு சிலுகுசு யது3 குல வீருனிதோ (கு4)


சரணம் 2
33ங்கா3ரு சீரலு ரங்கை3ன ரவிகலு-
நுங்க3ரமுலு வெலயங்க3 4ஸொக3ஸுகா3
பு4ஜங்க31யனுட3கு3 ரங்க3 பதினி ஜூசி
பொங்கு3சு தனிவார கௌகி3லிஞ்சுசுனு (கு4)


சரணம் 3
வரமைன கனக நூபுரமுலு க4ல்லன-
யுரமுன முத்யால ஸருலெல்ல கத3லக3
கரமுன ஸொக3ஸைன விரி ஸுரடுலசே
விஸருசு த்யாக3ராஜ வரது3னி பொக3டு3சு (கு4)


பொருள் - சுருக்கம்
  • காணீரே!

  • கமகம கமவென மணத்துடன், அழகிய கன்னியர்கள் செல்வதைக் காணீரே!

    • பரிவுடன், உயர் வானோர் யாவரும் பாரிசாதப் பூமழை பொழிந்திட,

  • வேடிக்கையாக, அழகிய கன்னியர்கள் செல்வதைக் காணீரே!

    • நாற்புரமும் பகல்வத்திகள் சுடர்விட்டு ஒளிர,
    • சாம்பிராணிப் புகை மணக்க,
    • சந்தனப் பொடியைத் தூவிக்கொண்டு,
    • தாவணிகளை சரித்து, பன்னீரைத் தெளித்துக் கொண்டு,

  • யதுகுல வீரனுடன், அழகிய கன்னியர்கள் செல்வதைக் காணீரே!

    • சரிகை சேலைகளும், வண்ண இரவிக்கைகளும், மோதிரங்களும் பளபளக்க, சொகுசாக,
    • அரவணையோனாம், அரங்க பதியினைக் கண்டு, பெருமிதத்துடன்,

  • ஆசைதீர அரவணைத்துக்கொண்டு, அழகிய கன்னியர்கள் செல்வதைக் காணீரே!

    • சிறந்த பொற் சதங்கைகள் கலீரென,
    • மார்பில் முத்துச் சரங்களெல்லாம் அசைய,
    • கைகளில் சொகுசான, மலர் விசிறிகளினால் விசிறிக்கொண்டு,
    • தியாகராச வரதனைப் புகழ்ந்துகொண்டு,

  • கமகம கமவென மணத்துடன், அழகிய கன்னியர்கள் செல்வதைக் காணீரே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கு4ம/ கு4ம/ கு4ம-அனி/ வாஸனதோ/ முத்3து3/
கம/ கம/ கமவென/ மணத்துடன்/ அழகிய/

கு3ம்மலு/ வெட3லிரி/ சூட3ரே/
கன்னியர்கள்/ செல்வதை/ காணீரே/


அனுபல்லவி
மமததோனு/ ஸுர/ வருலு/-எல்ல/ ஸுர/ தரு/
பரிவுடன்/ வானோர்/ உயர்/ யாவரும்/ வானோர்/ தரு (பாரிசாத)/

ஸும/ வானலு/ குரியிம்பக3/ வேட்3கக3/ (கு4)
பூ/ மழை/ பொழிந்திட/ வேடிக்கையாக/ கமகம...


சரணம்
சரணம் 1
நலு/-வங்க/ பக3லு/ வத்துலு/ தேஜரில்லக3/
நாற்/ புரமும்/ பகல்/ வத்திகள்/ சுடர்விட்டு/

செலக3/ ஸாம்ப்3ராணி/ பொக3லு/ க்3ரம்ம/ க3ந்த4/
ஒளிர/ சாம்பிராணி/ புகை/ மணக்க/ சந்தன/

பொடு3ல/ சல்லுசு/ பய்யெத3ல/ தீயுசு/
பொடியை/ தூவிக்கொண்டு/ தாவணிகளை/ சரித்து/

பன்னீருலு/ சிலுகுசு/ யது3/ குல/ வீருனிதோ/ (கு4)
பன்னீரை/ தெளித்துக் கொண்டு/ யது/ குல/ வீரனுடன்/ கமகம...


சரணம் 2
3ங்கா3ரு/ சீரலு/ ரங்கை3ன/ ரவிகலு/-
(பொன்) சரிகை/ சேலைகளும்/ வண்ண/ இரவிக்கைகளும்/

உங்க3ரமுலு/ வெலயங்க3/ ஸொக3ஸுகா3/
மோதிரங்களும்/ பளபளக்க/ சொகுசாக/

பு4ஜங்க3/ ஸ1யனுட3கு3/ ரங்க3/ பதினி/ ஜூசி/
அரவு/ அணையோனாம்/ அரங்க/ பதியினை/ கண்டு/

பொங்கு3சு/ தனிவி/-ஆர/ கௌகி3லிஞ்சுசுனு/ (கு4)
பெருமிதத்துடன்/ ஆசை/ தீர/ அரவணைத்துக்கொண்டு/ கமகம...


சரணம் 3
வரமைன/ கனக/ நூபுரமுலு/ க4ல்லன/-
சிறந்த/ பொற்/ சதங்கைகள்/ கலீரென/

உரமுன/ முத்யால/ ஸருலு/-எல்ல/ கத3லக3/
மார்பில்/ முத்து/ சரங்கள்/ எல்லாம்/ அசைய/

கரமுன/ ஸொக3ஸைன/ விரி/ ஸுரடுலசே/
கைகளில்/ சொகுசான/ மலர்/ விசிறிகளினால்/

விஸருசு/ த்யாக3ராஜ/ வரது3னி/ பொக3டு3சு/ (கு4)
விசிறிக்கொண்டு/ தியாகராச/ வரதனை/ புகழ்ந்துகொண்டு/ கமகம...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸொக3ஸுகா3 - ஸொக3ஸுன.

Top

மேற்கோள்கள்
2 - பக3லு வத்துலு - பகல்வத்திகள் - ஒளி வாணம்

Top

விளக்கம்
1 - மமததோனு - பரிவுடன் - இது வானோரைக் குறிப்பதாகவோ, அல்லது ஆய்ச்சியரைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.

3 - 3ங்கா3ரு சீரலு - சரிகை சேலைகள்.

Top

'நௌக சரித்திரம்' (ஓடக்கதை) எனும் நாட்டிய நாடகத்தினில் வரும் பாடல் இது.

பாடலின் பின்னணி - ஆய்ச்சியர்கள் கண்ணனை யமுனை நதிக்கரையில் சந்தித்து, எல்லோருமாக ஓடத்தில் பயணம் செய்கின்றனர். கண்ணனை சந்தித்த களிப்பில், ஆய்ச்சியர் கண்ணனை தமது சொத்தாக நினைத்து செருக்கடைகின்றனர். அவர்களுடைய செருக்கினை யடக்க, கண்ணன் புயலை உண்டாக்குகின்றான். புயலில் படகு தத்தளிக்கின்றது. படகினில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுகின்றது. கண்ணன் தனக்கு உடல் நலம் குன்றியதாகப் பாசாங்கு செய்கின்றான். அதனால் தாங்கள் எப்படி கரை சேர்வது, கண்ணனை எங்ஙனம் உயிர்காப்பது என பெருங்கவலை கொள்கின்றனர். அதற்கு, கண்ணன் படகின் ஓட்டையை அடைக்க அவர்கள் யாவருடைய ரவிக்கைகளையும் அவிழ்த்து ஓட்டையில் திணிக்கச்சொல்கின்றான். ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தும், ரவிக்கைகளெல்லாம் நீரில் அடித்துக்கொண்டு போய்விடுகின்றன. கண்ணன் அவர்களை தங்களுடைய சேலைகளையும் அவிழ்த்து ஓட்டையை அடைக்கும்படி கூறுகின்றான். ஆய்ச்சியர் பெரும் தயக்கத்திற்குப் பின்னர் அங்ஙனமே செய்தும், அவைகளும் (சேலைகள்) நீரில் அடித்துச் செல்லப்படவே, செய்வதறியாது, ஆய்ச்சியர், கண்ணனை, சரணடைந்து கதறினர். கண்ணன் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு, புயல்-மழையினை நிறுத்தி, அவர்களுக்கு ஆடைகளை அளித்தான். செருக்கு அகன்ற ஆய்ச்சியர், கண்ணனைக் கொண்டாடினர். இப்பாடல், ஆய்ச்சியர், கண்ணனுடன், பெருங்களிப்புடன், வீடு திரும்பும் காட்சியினை விவரிக்கின்றது.

கன்னியர் - ஆய்ச்சியரைக் குறிக்கும்
யது குல வீரன், அரங்க பதி, தியாகராச வரதன் - கண்ணன்

Top


Updated on 21 Feb 2011

No comments: