Saturday, November 6, 2010

தியாகராஜ கிருதி - ஹரி ஹரி நீயொக்க - ராகம் புன்னாகவராளி - Hari Hari Niyokka - Raga Punnagavarali - Nauka Charitram

பல்லவி
1ஹரி ஹரி 2நீயொக்க தி3வ்ய
பாதா3ரவிந்த3மிய்யவே

அனுபல்லவி
4ரனு கலுகு3 போ43 பா4க்3யமெல்லனு
தத்2யமு காது3 3ஸுமீ ஸ்ரீ க்ரு2ஷ்ணா (ஹ)

சரணம்
சரணம் 1
ஸனக ஸனந்த3ன ஸ்ரீ நாரத3
4ஸு1கார்ஜுன க4னுலெல்ல நுதிஞ்சு
வனஜ நயன ப்3ரஹ்மாதி3
ஸங்க்ரந்த3னலனயமு ஸேவிஞ்சு
(ஹ)


சரணம் 2
5வினு வேத3 புராணாக3ம ஸா1ஸ்த்ர
6வித்3யலந்து3 சரிஞ்சு
4ன ஸம நீல நிரஞ்ஜன நிர்கு3
கனிகரமுக3 7த்யாக3ராஜு பா4விஞ்சு (ஹரி)


பொருள் - சுருக்கம்
  • அரியே!
  • கண்ணா!
  • கமலக் கண்ணா!
  • கார்முகில் நிகர் நீல வண்ணா! மாசற்றோனே! உருவற்றோனே!

  • கேளாய்!
  • உனதொரு திவ்வியத் திருவடித் தாமரையினைத் தாருமய்யா!

    • புவியில் உண்டாகும் இன்பங்கள், பேறுகள் யாவும் மெய்யாகா, அல்லவோ? எனவே,

  • உனதொரு திவ்விய திருவடித் தாமரையினைத் தாருமய்யா!

    • சனகர், சனந்தனர், நாரதர், சுகர், அர்ச்சுனன் (ஆகிய) பெரியோர்கள் யாவரும் போற்றும்,
    • பிரமன் முதலாக இந்திரன் ஆகியோர் எவ்வமயமும் சேவிக்கும்,
    • மறைகள், புராணங்கள், ஆகம, சாத்திரங்கள், மற்றும் கல்விகளில் உள்ளுறையும்,
    • தியாகராசன் உள்ளத்தினில் உணரும்,

  • உனதொரு திவ்வியத் திருவடித் தாமரையினை, கனிவு கூர்ந்து, தாருமய்யா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹரி/ ஹரி/ நீ-ஒக்க/ தி3வ்ய/
அரியே/ அரியே/ உனதொரு/ திவ்விய/

பாத3/-அரவிந்த3மு/-இய்யவே/
திருவடி/ தாமரையினை/ தாருமய்யா/


அனுபல்லவி
4ரனு/ கலுகு3/ போ43/ பா4க்3யமு/-எல்லனு/
புவியில்/ உண்டாகும்/ இன்பங்கள்/ பேறுகள்/ யாவும்/

தத்2யமு/ காது3/ ஸுமீ/ ஸ்ரீ க்ரு2ஷ்ணா/ (ஹ)
மெய்/ ஆகா/ அல்லவோ/ கண்ணா/


சரணம்
சரணம் 1
ஸனக/ ஸனந்த3ன/ ஸ்ரீ நாரத3/
சனகர்/ சனந்தனர்/ ஸ்ரீ நாரதர்/

ஸு1க/-அர்ஜுன/ க4னுலு/-எல்ல/ நுதிஞ்சு/
சுகர்/ அர்ச்சுனன்/ (ஆகிய) பெரியோர்கள்/ யாவரும்/ போற்றும்/

வனஜ/ நயன/ ப்3ரஹ்மா/-ஆதி3/
கமல/ கண்ணா/ பிரமன்/ முதலாக/

ஸங்க்ரந்த3னலு/-அனயமு/ ஸேவிஞ்சு/ (ஹ)
இந்திரன்/ ஆகியோர்/ எவ்வமயமும்/ சேவிக்கும்/ அரியே...


சரணம் 2
வினு/ வேத3/ புராண/-ஆக3ம/ ஸா1ஸ்த்ர/
கேளாய்/ மறைகள்/ புராணங்கள்/ ஆகம/ சாத்திரங்கள்/

வித்3யலு-அந்து3/ சரிஞ்சு/
(மற்றும்) கல்விகளில்/ உள்ளுறையும்/

4ன/ ஸம/ நீல/ நிரஞ்ஜன/ நிர்கு3ண/
கார்முகில்/ நிகர்/ நீல வண்ணா/ மாசற்றோனே/ உருவற்றோனே/

கனிகரமுக3/ த்யாக3ராஜு/ பா4விஞ்சு/ (ஹரி)
கனிவு கூர்ந்து/ தியாகராசன்/ உள்ளத்தினில் உணரும்/ அரியே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸுமீ - ஸுமா : இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான்.

4 - அர்ஜுன க4னுலெல்ல நுதிஞ்சு - ஸங்க்ரந்த3னலனயமு ஸேவிஞ்சு : அர்ஜுன முனுலெல்ல நுதிஞ்சு - ஸங்க்ரந்த3ன க4னுலு ஸேவிஞ்சு : இவ்விடத்தில், 'முனுலு' என்பது பொருந்தாது என்று கருதுகின்றேன். எனக்குத் தெரிந்தவரையில், பிற்கூறப்பட்டதில், சரணத்தின் முதல் பாகத்தினையும், இரண்டாவது பாகத்தினையும் குழப்பப்பட்டுள்ளது என்று கருதுகின்றேன்.

5 - வினு - நினு - முனு : இவ்விடத்தில் 'நினு' மற்றும் 'முனு' பொருந்தாது என்று கருதுகின்றேன்.

6 - வித்3யலந்து3 - வித்3யலனெல்ல : பிற்கூறியது பொருந்தாது என்று கருதுகின்றேன்.

7 - த்யாக3ராஜு பா4விஞ்சு - த்யாக3ராஜுபாஸிஞ்சு (த்யாக3ராஜு உபாஸிஞ்சு).

Top

மேற்கோள்கள்
4 - அர்ஜுன - தியாகராஜர் பஞ்சபாண்டவரின் அர்ஜுனனைக் குறிப்பிடுகின்றார் என்று கருதுகின்றேன். கீதையில் பதினோராவது அத்தியாயத்தினில், தெய்வீகப் பார்வை பெற்ற அர்ஜுனன், கண்ணனைத் துதிப்பதை, அர்ஜுனனின் பக்திக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

வேறொரு அர்ஜுனனும் உண்டு - கார்த்தவீர்யார்ஜுனன்.

Top

விளக்கம்
1 - ஹரி ஹரி - இந்த இரட்டைப் பிரயோகம், தவறுக்கு வருந்துவதனைக் குறிக்கும். ஆனால், இவ்விடத்தில் அப்படிப்பட்ட பொருள் பொருந்தாது.

2 - நீயொக்க - உனதொரு : இவ்விடத்தில் 'ஒரு' என்பதற்குத் தனிப்பட்ட பொருளேதும் இல்லை. இது பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவது.

Top

'நௌக சரித்திரம்' (ஓடக்கதை) எனும் நாட்டிய நாடகத்தினில் வரும் பாடல் இது

பாடலின் பின்னணி - ஆய்ச்சியர்கள் கண்ணனை யமுனை நதிக்கரையில் சந்தித்து, எல்லோருமாக ஓடத்தில் பயணம் செய்கின்றனர். கண்ணனை சந்தித்த களிப்பில், ஆய்ச்சியர் கண்ணனைத் தமது சொத்தாக நினைத்து செருக்கடைகின்றனர். அவர்களுடைய செருக்கினை யடக்க, கண்ணன், புயல்-மழையை உண்டாக்குகின்றான். புயல்-மழையில் படகு தத்தளிக்கின்றது. படகினில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுகின்றது. கண்ணன் தனக்கு உடல் நலம் குன்றியதாகப் பாசாங்கு செய்கின்றான். அதனால் ஆய்ச்சியர் தாங்கள் எப்படி கரை சேர்வது, கண்ணனை எங்ஙனம் உயிர்காப்பது என பெருங்கவலை கொள்கின்றனர். அதற்கு, கண்ணன் படகின் ஓட்டையை அடைக்க, அவர்கள் யாவருடைய ரவிக்கைகளையும் அவிழ்த்து ஓட்டையில் திணிக்கச்சொல்கின்றான். ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தும் ரவிக்கைகளெல்லாம் நீரில் அடித்துக்கொண்டு போய்விடுகின்றன. கண்ணன், அவர்களை தங்களுடைய சேலைகளையும் அவிழ்த்து ஓட்டையை அடைக்கும்படி கூறுகின்றான். பெரும் தயக்கத்திற்குப் பின் ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தனர். ஆனால் அவைகளும் நீரில் அடித்துச் செல்லப்படவே, வேறு ஏதும் செய்ய இயலாது, ஆய்ச்சியர் கண்ணனைச் சரணடைந்து இப்பாடலைப் பாடுகின்றனர். தன்னைத் தியானிக்கும் ஆய்ச்சியரைக் கண்டு, மனமிரங்கி, கண்ணன், புயல்-மழையை நிறுத்தி, அவர்களுக்கு ஆடைகளை அளிக்கின்றான்.

Top

உருவற்றோன் - குணங்களுக்கு அப்பாற்பட்டோன் என்றும கொள்ளலாம்.
குணங்கள் - முக்குணங்கள் - சாத்விகம், இராஜசம், தாமசம்.
இப்பாடல், ஆய்ச்சியர், கண்ணனைத் தியானித்துப் பாடுவதாக.

Top


Updated on 07 Nov 2010

No comments: