Friday, October 29, 2010

தியாகராஜ கிருதி - ஏ நோமு நோசிதிமோ - ராகம் புன்னாகவராளி - E Nomu Nochitimo - Raga Punnagavarali - Nauka Charitram

பல்லவி
ஏ நோமு நோசிதிமோ 1செலுலமே தா3னமொஸகி3திமோ

அனுபல்லவி
ஸ்ரீ நாது2 கொலுவமரெ 2செலுலு செக்கிள்ளுனொத்துசுனு
மானக மோவானுசு சந்த்3ரானனு 3ஹ்ரு23யமுனனுஞ்ச (ஏ)

சரணம்
சரணம் 1
4ஸ்த்ரீ ரத்னமுலு மனமு செலுலு ஸ்ரீ மிஞ்சு யௌவனமு
வாரிஜ லோசனுடு3 5செலுலு பாலாயெ33வம்ம
6கோரிகலீடே3ரனு யது3 வீருனி கனுலார ஜூட3(னே)


சரணம் 2
3ங்கா3ரு ஸொம்முலனு செலுலு பா3கு33 பெட்டுகொனி
ஸ்1ரு2ங்கா3ராம்ப3ரமுலனு செலுலு செலுவொந்த3 கட்டுகொனி
7ஸங்க3திகா3னங்க3முலு ஸு1பா4ங்கு3னிகினொஸங்க3 மன(மே)


சரணம் 3
பொங்கா3ருயீ நதி3லோ செலுலு பொந்து3கா3 கு3மி கூடி3
மங்க3ளாகாருனிதோ செலுலு மனஸார கூடி3திமி
ரங்க3 பதியுப்பொங்கு3சு மன 8செங்க3டனு செலங்க33 மன(மே)


சரணம் 4
வாகீ3ஸா1த்3யமருலகு செலுலு வர்ணிம்ப தரமௌனே
த்யாக3ராஜாப்துனிதோ செலுலு போ43முலந்து3சுனு
பா3கு33 தமி 9ரேக33னு நய ராக3முலீலாகு3 பாட3 (ஏ)


பொருள் - சுருக்கம்

தோழியரே!

  • பெண் இரத்தினங்கள் நாம்; இலக்குமியை மிகும் இளமை;

  • மா மணாளன் கொலு கிடைத்தது.

    • பொன் அணிகலன்களை, நன்கு அணிந்துகொண்டு,
    • எழிலான ஆடைகளை, ஒயிலாகக் கட்டிக்கொண்டு,
    • நிறைந்தோடும் இந்நதியில், சிறக்க ஒன்று கூடி,
    • மங்கள உருவத்தோனுடன், மனதாரக் கூடினோம்.

    • கன்னங்கள் இணைத்து, மேலும், இதழ் சேர்த்து, மதி முகத்தோனை இதயத்திலிருத்த,
    • கோரிக்கைகள் ஈடேற, யாதவ வீரனைக் கண்ணாரக் காண,
    • கூட்டாக (நமது) அங்கங்களை நல்லங்கத்தோனுக்கு அளிக்க,
    • அரங்கபதி பெருமிதத்துடன் நம்மிடைத் திகழ்ந்திருக்க,
    • தியாகராசனின் தோழனுடன், நாம் இன்பம் துய்க்கையில், நன்கு இச்சை மேலிட, நயமான இராகங்களில் இங்ஙனம் பாட,

  • நாம் எந்நோன்பு நோற்றோமோ? எக்கொடை அளித்தோமோ?

  • கமலக்கண்ணன், நம் வயப்பட்டானன்றோ!

  • பிரமன் முதலாக அமரருக்கும், வருணிக்கத் தரமாமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ நோமு/ நோசிதிமோ/ செலுலமு/-ஏ/ தா3னமு/-ஒஸகி3திமோ/
எந்த/ நோன்பு/ நோற்றோமோ/ தோழியரே/ எந்த/ கொடை/ அளித்தோமோ/


அனுபல்லவி
ஸ்ரீ/ நாது2/ கொலுவு/-அமரெ/ செலுலு/ செக்கிள்ளு/-ஒத்துசுனு/
மா/ மணாளன்/ கொலு/ கிடைத்தது/ தோழியரே/ கன்னங்கள்/ இணைத்து/

மானக/ மோவி/-ஆனுசு/ சந்த்3ர/-ஆனனு/ ஹ்ரு23யமுன/-உஞ்ச/ (ஏ)
மேலும்/ இதழ்/ சேர்த்து/ மதி/ முகத்தோனை/ இதயத்தில்/ இருத்த/ எந்நோன்பு...


சரணம்
சரணம் 1
ஸ்த்ரீ/ ரத்னமுலு/ மனமு/ செலுலு/ ஸ்ரீ/ மிஞ்சு/ யௌவனமு/
பெண்/ இரத்தினங்கள்/ நாம்/ தோழியரே/ இலக்குமியை/ மிகும்/ இளமை/

வாரிஜ/ லோசனுடு3/ செலுலு/ பாலாயெ/ க33/-அம்ம/
கமல/ கண்ணன்/ தோழியரே/ (நம்) வயப்பட்டான்/ அன்றோ/ அம்மா/

கோரிகலு/-ஈடே3ரனு/ யது3/ வீருனி/ கனுலார/ ஜூட3னு/-(ஏ)
கோரிக்கைகள்/ ஈடேற/ யாதவ/ வீரனை/ கண்ணார/ காண/ எந்நோன்பு...


சரணம் 2
3ங்கா3ரு/ ஸொம்முலனு/ செலுலு/ பா3கு33/ பெட்டுகொனி/
பொன்/ அணிகலன்களை/ தோழியரே/ நன்கு/ அணிந்துகொண்டு/

ஸ்1ரு2ங்கா3ர/-அம்ப3ரமுலனு/ செலுலு/ செலுவு-ஒந்த3/ கட்டுகொனி/
எழிலான/ ஆடைகளை/ தோழியரே/ ஒயிலாக/ கட்டிக்கொண்டு/

ஸங்க3திகா3னு/-அங்க3முலு/ ஸு14/-அங்கு3னிகி/-ஒஸங்க3/ மனமு/-(ஏ)
கூட்டாக/ (நமது) அங்கங்களை/ நல்/ அங்கத்தோனுக்கு/ அளிக்க/ நாம்/ எந்நோன்பு...


சரணம் 3
பொங்கா3ரு/-ஈ/ நதி3லோ/ செலுலு/ பொந்து3கா3/ கு3மி/ கூடி3/
நிறைந்தோடும்/ இந்த/ நதியில்/ தோழியரே/ சிறக்க/ ஒன்று/ கூடி/

மங்க3ள/-ஆகாருனிதோ/ செலுலு/ மனஸார/ கூடி3திமி/
மங்கள/ உருவத்தோனுடன்/ தோழியரே/ மனதார/ கூடினோம்/

ரங்க3/ பதி/-உப்பொங்கு3சு/ மன/ செங்க3டனு/ செலங்க33/ மனமு/-(ஏ)
அரங்க/ பதி/ பெருமிதத்துடன்/ நம்/ இடை/ திகழ்ந்திருக்க/ நாம்/ எந்நோன்பு...


சரணம் 4
வாக்3/-இஸ1/-ஆதி3/-அமருலகு/ செலுலு/ வர்ணிம்ப/ தரமௌனே/
நாமகள்/ மணாளன் (பிரமன்)/ முதலாக/ அமரருக்கும்/ தோழியரே/ வருணிக்க/ தரமாமோ/

த்யாக3ராஜ/-ஆப்துனிதோ/ செலுலு/ போ43முலு/-அந்து3சுனு/
தியாகராசனின்/ தோழனுடன்/ தோழியரே/ (நாம்) இன்பம்/ துய்க்கையில்/

பா3கு33/ தமி/ ரேக33னு/ நய/ ராக3முலு/-ஈலாகு3/ பாட3/ (ஏ)
நன்கு/ இச்சை/ மேலிட/ நயமான/ இராகங்களில்/ இங்ஙனம்/ பாட/ எந்நோன்பு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - செலுலமே - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை, 'செலுலமு+ஏ' என்றோ 'செலுல+ஏ என்றோ பிரிக்கலாம். எல்லா சரணங்களிலும் 'செலுலு' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கும் 'செலுலு' என்றுதான் இருக்கவேண்டும். 'செலுல' என்பது தவறாகும். ஆனால், 'செலுலமு' என்பது சரியான வடிவமா என்பது தெரியவில்லை.

2 - செலுலு செக்கிள்ளு - செலுல செக்கிள்ளு. அனைத்து சரணங்களிலும் கொடுத்துள்ளபடி, 'செலுலு' என்றுதான் இருக்கவேண்டும். 'செலுல' என்ற கொண்டால், சரணத்தின் பொருள் மாறிவிடும். 'செலுல செக்கிள்ளு' என்று ஏற்றால், கண்ணன், தான் பெண்களின் கன்னங்களோடு கன்னம் இணைத்தான் என்று பொருளாகும். ஆனால், கண்ணன், ஆய்ச்சியர் செய்ததற்கெல்லாம் இசைந்தான் என்பதுதான் கதை. எனவே, 'செலுல' என்பது தவறாகும்.

2 - செக்கிள்ளுனொத்துசுனு (செக்கிள்ளு+ஒத்துசுனு) - செக்கிள்ளு நொக்குசுனு : 'ஒத்துசுனு' என்றால் 'கன்னத்தோடு கன்னம் இணைத்தல்' என்றும், 'நொக்குசு' என்றால் 'கன்னத்தைக் கிள்ளி' என்றும் பொருளாகும். அடுத்து வரும், 'இதழ் சேர்த்து' என்பதனால், இவ்விடத்தில், 'கன்னம் இணைத்து' என்பது தான் பொருந்தும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

Top

3 - ஹ்ரு23யமுனனுஞ்ச - ஹ்ரு23யானனுஞ்ச.

4 - ஸ்த்ரீ ரத்னமுலு - ஸ்ரீ ரத்னமுலு : இவ்விடத்தில், 'ஸ்த்ரீ' என்ற சொல்தான் பொருந்தும்.

5 - செலுலு பாலாயெ - செலுல பாலாயெ : எல்லா சரணங்களிலும் 'செலுலு' என்று தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடத்தில், 'செலுல' என்றாலும் பொருளில் வேறுபாடில்லை.
Top

6 - கோரிகலீடே3ரனு - கோரிகலீடே3ரெனு : முன் கூறியதற்கு 'கோரிக்கைகள் ஈடேற' என்றும், பிற்கூறியதற்கு, 'கோரிக்கைகள் ஈடேறின' என்றும் பொருளாகும். முன் கூறிய சொல்லினால், பல்லவியுடன் இணைக்கலாம். எனவே அங்ஙனமே ஏற்கப்பட்டது.

7 - ஸங்க3திகா3னங்க3முலு - ஸங்க3திகா3னங்க3முனு.

8 - செங்க3டனு - செங்க3ட்லனு.

9 - ரேக33னு - ரேக3னு : இவ்விடத்தில் ரேக33னு என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல், 'நௌக சரித்ரம்' எனப்படும் 'ஓடக்கதை'யினைச் சேர்ந்ததாகும்.

பாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். பின்னர், கண்ணன், தன்னுடைய பெருமைகளையெல்லாம் எடுத்துக் கூறி, அவர்களை நம்பவைக்கின்றான். அதன் பின்னர், யாவரும் ஒடத்தில், கண்ணனுடன் கலந்து விளையாடுகின்றனர். கண்ணன், ஒவ்வொரு ஆய்ச்சிக்கும் ஒவ்வொரு உருவம் எடுத்து, எல்லோருடனும் விளையாடினான். இந்தப் பாடலில் ஆய்ச்சியர் தம்முடைய பேற்றினை வியந்து பாடுகின்றனர்.

மா மணாளன் - மதி முகத்தோன் - கமலக் கண்ணன் - யாதவ வீரன் - நல்லங்கத்தோன் - மங்கள உருவத்தோன் - அரங்கபதி - தியாகராசனின் தோழன் - யாவும் கண்ணனைக் குறிக்கும்
யாதவர் - கண்ணனின் குலம்

Top


Updated on 29 Oct 2010

No comments: