Friday, October 15, 2010

தியாகராஜ கிருதி - ராம ராம ராமசந்த்3ர - ராகம் க4ண்டா - Rama Rama Ramachandra - Raga Ghanta

பல்லவி
ராம ராம ராமசந்த்3ர ஸ்ரீ
ராம ராம கு3ண ஸாந்த்3

சரணம்
சரணம் 1
4ல்லு க4ல்லு நீ கரமு பட்டி 1க்ரீ
கன்னுல கண்டேமுன்னதி3 தரமு
(ரா)


சரணம் 2
நா ஜூபு நீ ஜூபு ஸரிகா3 ஜேஸிதே
ஜேயுனா ஸுக2மு எவரிகியெருக (ரா)


சரணம் 3
இதி3 பு3த்3தி4யனுசு ஆனதிய்ய வேரே
வேல்புலேடிகி தனகு ராமய்ய (ரா)


சரணம் 4
செட்ட பட்டனி நா பீ4தி ராம
2பொ3ட்டு கட்டனி கன்யக ரீதி (ரா)


சரணம் 5
எவரிகி தகு3னே பா33 ரா
ஜூபு வலெ ராம த்யாக3ராஜ பரிபால (ரா)


பொருள் - சுருக்கம்
  • இராமா! இராமசந்திரா! குணங்கள் நிறைந்தோனே!
  • இராமைய்யா!
  • தியாகராசனைப் பேணுவோனே!

    • கலீர் கலீரென உனது கையைப் பிடித்தும், (என்னை) (நீ) கடைக்கண்ணால் நோக்கினால், என்ன தரமாகும்?
    • என் பார்வையும், உன் பார்வையும் நேருக்கு நேரானால் உண்டாகும் அந்த சுகம், யாருக்குத் தெரியும்?
    • இஃது உகந்ததென எனக்கு அறிவுரை கூற, வேறு தெய்வங்கள் எதற்கு தனக்கு?
    • (நீ) கைப்பற்றாத எனது அச்சம், தாலி கட்டாத கன்னியைப் போன்றதய்யா.
    • எவருக்குத் தகுமே, (உனது) சிறந்த அரச பார்வை போன்று?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராமசந்த்3ர/ ஸ்ரீ/
இராமா/ இராமா/ இராமசந்திரா/ ஸ்ரீ/

ராம/ ராம/ கு3ண/ ஸாந்த்3ர/
ராமா/ இராமா/ குணங்கள்/ நிறைந்தோனே/


சரணம்
சரணம் 1
4ல்லு/ க4ல்லு/ நீ/ கரமு/ பட்டி/
கலீர்/ கலீரென/ உனது/ கையை/ பிடித்தும் (என்னை)/

க்ரீ/ கன்னுல/ கண்டே/-ஏமி/-உன்னதி3/ தரமு/ (ரா)
(நீ) கடை/ கண்ணால்/ நோக்கினால்/ என்ன/ (ஆகும்) உள்ளது/ தரம்/


சரணம் 2
நா/ ஜூபு/ நீ/ ஜூபு/ ஸரிகா3 ஜேஸிதே/
என்/ பார்வையும்/ உன்/ பார்வையும்/ நேருக்கு நேரானால்/

ஜேயுனு/-ஆ/ ஸுக2மு/ எவரிகி/-எருக/ (ரா)
உண்டாகும்/ அந்த/ சுகம்/ யாருக்கு/ தெரியும்/


சரணம் 3
இதி3/ பு3த்3தி4/-அனுசு/ ஆனதி/-இய்ய/ வேரே/
இஃது/ உகந்தது/ என/ (எனக்கு) அறிவுரை/ கூற/ வேறு/

வேல்புலு/-ஏடிகி/ தனகு/ ராமய்ய/ (ரா)
தெய்வங்கள்/ எதற்கு/ தனக்கு/ இராமைய்யா/


சரணம் 4
செட்ட/ பட்டனி/ நா/ பீ4தி/ ராம/
(நீ) கை/ பற்றாத/ எனது/ அச்சம்/ இராமா/

பொ3ட்டு/ கட்டனி/ கன்யக/ ரீதி/ (ரா)
தாலி/ கட்டாத/ கன்னியை/ போன்றதய்யா/


சரணம் 5
எவரிகி/ தகு3னே/ பா33/ ரா/
எவருக்கு/ தகுமே/ (உனது) சிறந்த/ அரச/

ஜூபு/ வலெ/ ராம/ த்யாக3ராஜ/ பரிபால/ (ரா)
பார்வை/ போன்று/ இராமா/ தியாகராசனை/ பேணுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - க்ரீ கன்னுல கண்டேமுன்னதி3 தரமு - கடைக்கண்ணால் நோக்கினால், என்ன தரமாகும்? - ஒரு புத்தகத்தில், 'நீ கடைக்கண்ணால் நோக்கினாலே போதும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த சரணத்தினில், 'உன் பார்வையும், என் பார்வையும் நேருக்கு நேரானால் கிடைக்கும் சுகம் எத்தகையது!' என்று கேட்கின்றார். எனவே, தியாகராஜர், இறைவனின் கடைக்கண் பார்வையினால் நிறைவடையவில்லை என்பதுதான் சரியான பொருளாகும்.

2 - பொ3ட்டு கட்டனி கன்யக - தாலி கட்டாத கன்னி - பெண், ஒருவனைக் காதலித்த பின், அவன் அவளைக் கைப்பற்றுவது ஐயத்துக்குரியதானால், அந்தப் பெண்ணின் உள்ளம் எப்படிப் பதைக்கும் - அதனைத்தான் தியாகராஜர் இங்கு கூறுகின்றார்.

கலீர் கலீரென - யாவரும் அறிய

Top

No comments: