Thursday, October 14, 2010

தியாகராஜ கிருதி - பெருகு3 பாலு - ராகம் க3ண்டா - Perugu Paalu - Raga Ghanta - Nauka Charitram

பல்லவி
பெருகு3 பாலு பு4ஜியிஞ்சி 1தனுவுல
பெஞ்சினதெ3ல்ல2னிந்து3கா

அனுபல்லவி
நிரவதி4 ஸுக2 தா3யக மா வயஸு
நீடனு 3கலயுடந்து3கா (பெ)

சரணம்
சரணம் 1
அத்த மாமலதோ நீகை
மேமெது3ராடி3னதெ3ல்லயிந்து3கா
4ஸத்த கலிகி3யிகனைனாயுந்து3மனி
ஸந்தஸில்லினதி3ந்து3கா (பெ)


சரணம் 2
ஆஸ தீர நீ ஸேவ வலயுனனி
5அரஸினதெ3ல்லனிந்து3கா
பா3ஸியுண்ட3 நேரக பெத்33லசே
பா3முல ஜெந்தி3னதி3ந்து3கா (பெ)


சரணம் 3
ஸ்னான பானமுலு ஸேயு வேள நினு
த்4யானமு ஜேஸினதி3ந்து3கா
6மேனுல நீ ஸொம்முலு ஜேயுடகை
மேமல்லாடி3னதி3ந்து3கா (பெ)


சரணம் 4
தலிரு போ3ணுலை யமுனா நதி3லோ
7தல்லடி3ல்லேதி3ந்து3கா
வலசுசு 8தொலி ஜன்மமு ராமுனிசே
வரமுலு பட3ஸினதி3ந்து3கா
(பெ)


சரணம் 5
கோடி ஜன்மமுலு தபமுலு ஜேஸி
கோரினதெ3ல்லனிந்து3கா
ஸாடி லேனி நீ 9லீலலு மனஸுன
ஸைரிஞ்சியுன்னதி3ந்து3கா (பெ)


சரணம் 6
ஆக3ம நிக3ம புராண சாருட3னி
அனுஸரிஞ்சினதி3ந்து3கா
10த்யாக3ராஜ நுத தாரக நாம நீ
தத்வமு தெலிஸினதி3ந்து3கா (பெ)


பொருள் - சுருக்கம்
இடையறா சுகமளிப்போனே! தியாகராசன் போற்றும், தாரக நாமத்தோனே!

  • தயிரும் பாலுமூட்டி உடல்களை வளர்த்ததெல்லாம் இதற்கா?

  • எமது வயது நீரில் கரைவதற்கா? தயிரும் பாலுமூட்டி உடல்களை வளர்த்ததெல்லாம் இதற்கா?

    • அத்தை, மாமனார்களுடன் உனக்காக யாம் எதிர்த்துப் பேசியதெல்லாம் இதற்கா?
    • பேறு பெற்று, இனியாகிலும் இருப்போமெனக் களிப்படைந்தது இதற்கா?

    • ஆசை தீர, உனது சேவை அமையுமெனத் தேடியதெல்லாம் இதற்கா?
    • (உன்னைப்) பிரிந்திருக்க இயலாது, பெரியோர்களிடம் தொல்லைகள் பட்டது இதற்கா?

    • குளியல் மற்றும் உண்ணும் வேளையிலும், உன்னைத் தியானம் செய்தது இதற்கா?
    • உடல்களை உனது சொத்தாக்குவதற்காக, யாம் அலைந்து திரிந்தது இதற்கா?

    • இளம் கன்னியராகியும், யமுனை நதியினில் (இவ்வமயம்) தத்தளிப்பது இதற்கா?
    • விரும்பி, முற்பிறவியினில், இராமனிடம் வரங்கள் பெற்றது இதற்கா?

    • கோடிப் பிறவிகள், தவங்களியற்றிக் கோரினதெல்லாம் இதற்கா?
    • இணையற்ற, உனது திருவிளையாடல்களை மனதில் பொறுத்திருப்பது இதற்கா?

    • ஆகம, மறை, புராணங்களில் உள்ளுறைவோனென (உன்னைப்) பின்பற்றியது இதற்கா?
    • உனது உண்மையான தன்மை தெரிந்தது இதற்கா?


  • தயிரும் பாலுமூட்டி உடல்களை வளர்த்ததெல்லாம் இதற்கா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பெருகு3/ பாலு/ பு4ஜியிஞ்சி/ தனுவுல/
தயிரும்/ பாலும்/ ஊட்டி/ உடல்களை/

பெஞ்சினதி3/-எல்ல/-இந்து3கா/
வளர்த்தது/ எல்லாம்/ இதற்கா/


அனுபல்லவி
நிரவதி4/ ஸுக2/ தா3யக/ மா/ வயஸு/
இடையறா/ சுகம்/ அளிப்போனே/ எமது/ வயது/

நீடனு/ கலயுட-அந்து3கா/ (பெ)
நீரில்/ கரைவதற்கா/


சரணம்
சரணம் 1
அத்த/ மாமலதோ/ நீகை/
அத்தை/ மாமனார்களுடன்/ உனக்காக/

மேமு/-எது3ரு/-ஆடி3னதி3/-எல்ல/-இந்து3கா/
யாம்/ எதிர்த்து/ பேசியது/ எல்லாம்/ இதற்கா/

ஸத்த/ கலிகி3/-இகனைனா/-உந்து3மு/-அனி/
பேறு/ பெற்று/ இனியாகிலும்/ இருப்போம்/ என/

ஸந்தஸில்லினதி3/-இந்து3கா/ (பெ)
களிப்படைந்தது/ இதற்கா/


சரணம் 2
ஆஸ/ தீர/ நீ/ ஸேவ/ வலயுனு/-அனி/
ஆசை/ தீர/ உனது/ சேவை/ அமையும்/ என/

அரஸினதி3/-எல்ல/-இந்து3கா/
தேடியது/ எல்லாம்/ இதற்கா/

பா3ஸி/-உண்ட3/ நேரக/ பெத்33லசே/
(உன்னைப்) பிரிந்து/ இருக்க/ இயலாது/ பெரியோர்களிடம்/

பா3முல/ ஜெந்தி3னதி3/-இந்து3கா/ (பெ)
தொல்லைகள்/ பட்டது/ இதற்கா/


சரணம் 3
ஸ்னான/ பானமுலு ஸேயு/ வேள/ நினு/
குளியல்/ (மற்றும்) உண்ணும்/ வேளையிலும்/ உன்னை/

த்4யானமு/ ஜேஸினதி3/-இந்து3கா/
தியானம்/ செய்தது/ இதற்கா/

மேனுல/ நீ/ ஸொம்முலு/ ஜேயுடகை/
உடல்களை/ உனது/ சொத்து/ ஆக்குவதற்காக/

மேமு/-அல்லாடி3னதி3/-இந்து3கா/ (பெ)
யாம்/ அலைந்து திரிந்தது/ இதற்கா/


சரணம் 4
தலிரு/ போ3ணுலை/ யமுனா/ நதி3லோ/
இளம்/ கன்னியராகியும்/ யமுனை/ நதியினில்/

தல்லடி3ல்லேதி3/-இந்து3கா/
(இவ்வமயம்) தத்தளிப்பது/ இதற்கா/

வலசுசு/ தொலி/ ஜன்மமு/ ராமுனிசே/
விரும்பி/ முற்/ பிறவியினில்/ இராமனிடம்/

வரமுலு/ பட3ஸினதி3/-இந்து3கா/ (பெ)
வரங்கள்/ பெற்றது/ இதற்கா/


சரணம் 5
கோடி/ ஜன்மமுலு/ தபமுலு/ ஜேஸி/
கோடி/ பிறவிகள்/ தவங்கள்/ இயற்றி/

கோரினதி3/-எல்ல/-இந்து3கா/
கோரினது/ எல்லாம்/ இதற்கா/

ஸாடி/ லேனி/ நீ/ லீலலு/ மனஸுன/
இணை/ யற்ற/ உனது/ திருவிளையாடல்களை/ மனதில்/

ஸைரிஞ்சி/-உன்னதி3/-இந்து3கா/ (பெ)
பொறுத்து/ இருப்பது/ இதற்கா/


சரணம் 6
ஆக3ம/ நிக3ம/ புராண/ சாருடு3/-அனி/
ஆகம/ மறை/ புராணங்களில்/ உள்ளுறைவோன்/ என/

அனுஸரிஞ்சினதி3/-இந்து3கா/
(உன்னைப்) பின்பற்றியது/ இதற்கா/

த்யாக3ராஜ/ நுத/ தாரக/ நாம/ நீ/
தியாகராசன்/ போற்றும்/ தாரக/ நாமத்தோனே/ உனது/

தத்வமு/ தெலிஸினதி3/-இந்து3கா/ (பெ)
உண்மையான தன்மை/ தெரிந்தது/ இதற்கா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தனுவுல - தனுவுனு.

சில புத்தகங்களில் அனுபல்லவி, பல்லவியின் 3 மற்றும் 4-வது வரிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

3 - கலயுடந்து3கா - கலிபேடந்து3கா.

5 - அரஸினதி3 - அலஸினதி3.

6 - மேனுல நீ ஸொம்முலு - மேனு நீ ஸொம்மு.

7 - தல்லடி3ல்லேதி3ந்து3கா - தல்லடி3ல்லுடந்து3கா.

10 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ ஸன்னுத.

Top

மேற்கோள்கள்
8 - தொலி ஜன்மமு ராமுனிசே வரமுலு பட3ஸினதி3 - முற்பிறவியில் இராமனிடம் வரங்கள் பெற்றது - தண்டகாரண்ய ரிஷிகள் ஆய்ச்சியர்களாகப் பிறந்த கதை நோக்கவும். ஆனால், வால்மீகி ராமாயணத்தினில், இத்தகைய குறிப்பு ஏதுமில்லை. தியாகராஜர், தமது 'முத்3து3 மோமு' என்ற 'சூரியகாந்த' ராக கீர்த்தனையில் கூறுவது -

"இறைவன் வருவான் என்ற நம்பிக்கையில், பல காலம் உள்ளம் உருகி நின்ற முனிவர்கள் முன்னிலையில், இராமனின் எழிலான முகம் எங்ஙனம் விளங்கியதோ! முனிவர்கள் அதனைக் கண்டு எங்ஙனம் மோகித்தனரோ!"

"தண்டகாரண்ய வனத்தின் 60,000 ரிஷிகள் இராமனுடன் இணைய விரும்பினர். ஆனால், இராமன், தான் இந்த அவதாரத்தினில் 'ஓர் மளையாள்' விரதம் ஏற்றிருப்பதனால், அங்ஙனம் நடக்க இயலாது என்றும், தனது அடுத்த அவதாரமாகிய 'கண்ணன்' அவதாரத்தினில், ரிஷிகள், ஆய்ச்சியர்களாகப் பிறந்து, தன்னைக் கலக்கலாம் என்று கூறினான். அந்த முனிவர்கள் தாம் ஆய்ச்சியராகப் பிறந்தனர்." (மேற்கூறிய வலைத்தளம் நோக்கவும்.)

Top

விளக்கம்
2 - இந்து3கா - இதற்கா? - அனுபல்லவியில், இந்த கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டுள்து - 'எமது வயது நீரில் கரைவதற்கா?' என்று. இதற்கு முந்தைய பாடலில் ('உன்ன தாவுன' - ராகம் க4ண்டா), 'நாம் காளிந்தி நதியில் மூழ்க நேரிடும்' என்று ஆய்ச்சியர் அஞ்சினர்.

4 - ஸத்த கலிகி3 - பேறு பெற்று. இதற்கு சரியான பொருள் கொள்வதற்கு, 4-வது சரணத்தின் இரண்டாவது பகுதியையும், 5-வது சரணத்தின் முதற் பகுதியையும் நோக்கவும். ஆய்ச்சியர், ரிஷிகளாக இருந்தவர்கள். பல பிறவிகளில் தவமியற்றியதன் பயனாக, ஆய்ச்சியராகப் பிறந்து, கண்ணனைக் கலந்தனர்.

9 - லீலலு - திருவிளையாடல்கள் - அடுத்து வரும் 'பொறுத்து இருப்பது' என்ற சொற்களினால், இவை, 'கண்ணனின் குறும்புத்தனங்களை'க் குறிக்கும்

Top

இப்பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.

(பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, அவனுடன் படகில் யமுனை நதியில் பயணம் செய்தனர். கண்ணனை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள், கண்ணன், 'தங்களது சொத்து' என்று செருக்குற்றனர். அவர்களுடைய செருக்கினைப் போக்குதற்காக, யமுனையில், புயலையும், மழையையும் உண்டாக்கினான் கண்ணன். அந்தப் புயல் - மழையினால், படகு, நீரில் தத்தளித்தது. அதனால் படகில் ஓட்டை விழுந்து, தண்ணீர் படகினுள் நுழைய ஆரம்பித்தது. இதனைக் கண்டு ஆய்ச்சியர் செய்வதறியாது தத்தளித்தனர். அச்சமயம், கண்ணன் தனக்கு உடல் நலம் இல்லாதது போன்று நடிக்கவே, அவர்கள் என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். இந்தப் பாடலில், ஆய்ச்சியர் தமது விதியை நொந்துகொள்கின்றனர்.)

தாரக நாமத்தோன் - 'ராம' எனும் நாமம் பிறவிக் கடலைக் கடத்துவிப்பது

Top


Updated on 14 Oct 2010

No comments: