Wednesday, June 30, 2010

தியாகராஜ கிருதி - ஏஹி த்ரி-ஜக3தீ31 - ராகம் ஸாரங்க - Ehi Trijagadisa - Raga Saranga

பல்லவி
ஏஹி த்ரி-ஜக3தீ311ம்போ4 மாம்
பாஹி பஞ்ச நதீ31

அனுபல்லவி
1வாஹினீஸ1 ரிபு நுத ஸி1வ ஸாம்ப3
தே3ஹி த்வதீ3ய கராப்3ஜாவலம்ப3ம் (ஏ)

சரணம்
சரணம் 1
3ங்கா34ர தீ42நிர்ஜர ரிபு புங்க3வ ஸம்ஹார
மங்க3ள-கர 3புர ப4ங்க3 4வித்4ரு2த ஸு-
குரங்கா3
ப்த ஹ்ரு23யாப்3ஜ ப்4ரு2ங்க3 ஸு1பா4ங்க3 (ஏ)


சரணம் 2
5வாரணாஜின சேல4வ நீரதி4 தாரண ஸுர பால
க்ரூர லோகாப்4ர ஸமீரண ஸு1ப்4
1ரீர மாமகாக4 ஹர பராத்பர (ஏ)


சரணம் 3
ராஜ ஸே12ர கருணா ஸாக3ர நக3 ராஜாத்மஜா ரமண
ராஜ ராஜ பரி-பூஜித பத3 த்யாக3-
ராஜ ராஜ வ்ரு2ஷ ராஜாதி4-ராஜ (ஏ)


பொருள் - சுருக்கம்
  • மூவுலக ஈசா! சம்போ! திருவையாற்றப்பா!
  • வருணனின் பகைவன் போற்றும், அம்பையுடனுறை சிவனே!
  • கங்கையணிவோனே! தீரனே! வானோரின் முக்கிய பகைவரை அழித்தோனே! மங்களமருள்வோனே! புரமெரித்தோனே! அழகிய மானேந்துவோனே! அன்பரிதயக் கமல வண்டே! நல்லங்கத்தோனே!
  • கரித் தோல் ஆடையோனே! பிறவிக்கடல் கடத்துவோனே! வானோரைப் பேணுவோனே! கொடியோரெனும் முகிலை விரட்டும் புயலே! ஒளிரும் உடலோனே! எனது பாவத்தினைக் களைவோனே! பராபரனே!
  • பிறையணிவோனே! கருணைக் கடலே! மலையரசன் மகள் மணாளா! மன்னாதி மன்னர்கள் தொழுதேத்தும் திருவடியோனே! தியாகராசனின் மன்னா! இடப அரசனுக்குத் தலைவா!

    • அருகில் வாராய்.
    • என்னைக் காப்பாய்.
    • தருவாய், உனது கர கமலத் தாங்கல்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏஹி/ த்ரி-ஜக3த்/-ஈஸ1/ ஸ1ம்போ4/ மாம்/
அருகில் வாராய்/ மூவுலக/ ஈசா/ சம்போ/ என்னை/

பாஹி/ பஞ்ச நதி3/-ஈஸ1/
காப்பாய்/ திருவையாறு/ அப்பா/


அனுபல்லவி
வாஹினி/-ஈஸ1/ ரிபு/ நுத/ ஸி1வ/ ஸ/-அம்ப3/
நதி/ அரசன் (வருணனின்)/ பகைவன்/ போற்றும்/ சிவனே/ உடனுறை/ அம்பை/

தே3ஹி/ த்வதீ3ய/ கர/-அப்3ஜ/-அவலம்ப3ம்/ (ஏ)
தருவாய்/ உனது/ கர/ கமல/ தாங்கல்/


சரணம்
சரணம் 1
3ங்கா3/ த4ர/ தீ4ர/ நிர்ஜர/ ரிபு/ புங்க3வ/ ஸம்ஹார/
கங்கை/ அணிவோனே/ தீரனே/ வானோரின்/ பகைவரை/ முக்கிய/ அழித்தோனே/

மங்க3ள/-கர/ புர/ ப4ங்க3/ வித்4ரு2த/ ஸு-/
மங்களம்/ அருள்வோனே/ புரம்/ எரித்தோனே/ ஏந்துவோனே/ அழகிய/

குரங்க3/-ஆப்த/ ஹ்ரு23ய/-அப்3ஜ/ ப்4ரு2ங்க3/ ஸு14/-அங்க3/ (ஏ)
மான்/ அன்பர்/ இதய/ கமல/ வண்டே/ நல்/ அங்கத்தோனே/


சரணம் 2
வாரண/-அஜின/ சேல/ ப4வ/ நீரதி4/ தாரண/ ஸுர/ பால/
கரி/ தோல்/ ஆடையோனே/ பிறவி/ கடல்/ கடத்துவோனே/ வானோரை/ பேணுவோனே/

க்ரூர லோக/-அப்4ர/ ஸமீரண/ ஸு1ப்4ர/
கொடியோர் (எனும்)/ முகிலை (விரட்டும்)/ புயலே/ ஒளிரும்/

1ரீர/ மாமக/-அக4/ ஹர/ பராத்பர/ (ஏ)
உடலோனே/ எனது/ பாவத்தினை/ களைவோனே/ பராபரனே/


சரணம் 3
ராஜ/ ஸே12ர/ கருணா/ ஸாக3ர/ நக3/ ராஜ/-ஆத்மஜா/ ரமண/
மதி (பிறை)/ அணிவோனே/ கருணை/ கடலே/ மலை/ அரசன்/ மகள்/ மணாளா/

ராஜ/ ராஜ/ பரி-பூஜித/ பத3/
மன்னாதி/ மன்னர்கள்/ தொழுதேத்தும்/ திருவடியோனே/

த்யாக3ராஜ/ ராஜ/ வ்ரு2ஷ/ ராஜ/-அதி4-ராஜ/ (ஏ)
தியாகராசனின்/ மன்னா/ இடப/ அரசனுக்கு/ தலைவா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - வாஹினீஸ1 ரிபு - (நதி அரசன்) வருணனின் பகைவன் - அகத்திய முனி - கடலைக் குடித்ததனால். மகாபாரதம், 3-வது புத்தகம், வன பர்வம், அத்தியாயம் 104-105 நோக்கவும்.

2 - நிர்ஜர ரிபு புங்க3வ ஸம்ஹார - வானோர் பகைவரில் முக்கியமானோரை அழித்த - வானோருக்கு எதிரிகளான, சிவனால் கொல்லப்பட்ட அரக்கர் பலர் உண்டு. அவற்றினில் ஜாலந்தரன், கஜாசுரன், கமலாக்ஷன், தாருகாக்ஷன், வித்யுன்மாலி ஆகியோர் சிலர். கீழ்க்கண்ட website-களில், சிவனுடைய மகிமையினைப்பற்றி நோக்கவும். சிவனின் மகிமைகள்-1 மற்றும் சிவனின் மகிமைகள்-2 (Download)

Top

3 - புர ப4ங்க3 - புரமெரித்தோன் - மேற்கூறிய website-கள் நோக்கவும்.

4 - வித்4ரு2த ஸு-குரங்க3 - மானை ஏந்துவோன். தாருகா வனத்தில் நடந்த நிகழ்ச்சி பற்றி, மேற்கூறிய website-களில் நோக்கவும்.

5 - வாரணாஜின சேல- கரியின் தோல் அணிவோன் - கஜாசுரனைப் பற்றி மேற்கூறிய website-களில் நோக்கவும்.

Top

விளக்கம்
மலையரசன் மகள் - பார்வதி
இடப அரசன் - நந்தி

Top


Updated on 30 Jun 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
ரிபு புங்க3வ ஸம்ஹார - இதற்கு பகைவரை முக்கிய அழித்தோனே என்று பொருள் கொடுத்துள்ளீர். இது தெளிவாக இல்லை. ஸம்ஸ்க்ருதத்தில் தொக்கி நிற்கும் வேற்றுமை உருபுகள் இந்த குழப்பத்தை விளைவிக்கின்றனவா. ’பகைவரில்முக்கியமானவரை அழித்தோனே’ என்பது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். மேற்கோள் பகுதியில் இதனைத் தெளிவாகக் கொடுத்துள்ளீர்.

வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

இந்தப் பாடல் முழுவதும் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பெற்றுள்ளது.Sentence construction சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் (தெலுங்குக்கும் கூட) மாறுபட்டதாகும். பொருள் சுருக்கத்தில் நான் சரியாகக் கொடுத்துள்ளேன். பதம் பிரிக்கையில் இத்தகைய இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன.

வணக்கம்
கோவிந்தன்.