Friday, May 14, 2010

தியாகராஜ கிருதி - ஏ தா3ரி ஸஞ்சரிந்துரா - ராகம் ஸ்1ருதி ரஞ்ஜனி - E Daari Sancharintura - Raga Sruti Ranjani

பல்லவி
ஏ தா3ரி ஸஞ்சரிந்துராயிக பல்கரா

அனுபல்லவி
ஸ்ரீ-தா3தி3 மத்4யாந்த ரஹித
ஸீதா ஸமேத கு3ணாகர நே(னே தா3ரி)

சரணம்
1அன்னி தானனு மார்க3முன சனக3
2நன்னு வீட3னு பா4ரமனியாடெ33வு
3தன்னு ப்3ரோவு தா3ஸ வரதா3யண்டே
த்3வைதுட3னெத3வு த்யாக3ராஜ நுத (ஏ தா3ரி)


பொருள் - சுருக்கம்
  • சீரருள்வோனே! முதல், நடு, முடிவற்றோனே! சீதை உடனுறையே! பண்புச் சுரங்கமே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • நான் எந்த நெறி செல்வேனய்யா இன்னும், சொல்லய்யா!
    • 'யாவும் தானே' யெனும் நெறியிற் சென்றால், 'என்னை' விடுதல் கடினமெனச் சொல்கின்றாய்;
    • 'தன்னைக் காப்பாய், தொண்டருக்கருள்வோனே' யென்றால், 'துவைதன்' என்கின்றாய்.

  • நான் எந்த நெறி செல்வேனய்யா இன்னும், சொல்லய்யா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ தா3ரி/ ஸஞ்சரிந்துரா/-இக/ பல்கரா/
எந்த/ நெறி/ செல்வேனய்யா/ இன்னும்/ சொல்லய்யா/


அனுபல்லவி
ஸ்ரீ/-த3/-ஆதி3/ மத்4ய/-அந்த/ ரஹித/
சீர்/ அருள்வோனே/ முதல்/ நடு/ முடிவு/ அற்றோனே/

ஸீதா/ ஸமேத/ கு3ண/-ஆகர/ நேனு/-(ஏ தா3ரி)
சீதை/ உடனுறையே/ பண்பு/ சுரங்கமே/ நான்/ எந்த நெறி...


சரணம்
அன்னி/ தானு/-அனு/ மார்க3முன/ சனக3/
'யாவும்/ தானே'/ யெனும்/ நெறியிற்/ சென்றால்/

நன்னு/ வீட3னு/ பா4ரமு/-அனி/-ஆடெ33வு/
'என்னை'/ விடுதல்/ கடினம்/ என/ சொல்கின்றாய்/

தன்னு/ ப்3ரோவு/ தா3ஸ/ வரதா3/-அண்டே/
'தன்னை/ காப்பாய்/ தொண்டருக்கு/ அருள்வோனே/ யென்றால்/

த்3வைதுடு3/-அனெத3வு/ த்யாக3ராஜ/ நுத/ (ஏ தா3ரி)
'துவைதன்'/ என்கின்றாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - தன்னு ப்3ரோவு - நன்னு ப்3ரோவு : சரணத்தின் முதல் அடியில், 'தானு' என்ற சொல் தன்னிலையில் பயன்படுத்தப்பட்டிருப்பதனால், இங்கும், 'தன்னு' என்பது தன்னிலையைக் குறிக்கும். ஆனாலும், 'நன்னு' என்ற சொல் இவ்விடத்தில் மிக்குப் பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
1 - அன்னி தானனு - யாவும் தானே - பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றேயெனும் அத்துவைத நெறி. இது குறித்து, அஷ்டாவக்ர கீதை - pdf (download) நோக்கவும்.

2 - நன்னு வீட3னு - 'என்னை' விடுதல் - 'நான்' எனும் அகந்தையை விடுதல் - இது குறித்து, கீதையில் (அத்தியாயம் 12, செய்யுள் 5) கண்ணன் கூறியது -

"அவ்யக்தத்தினில் நிலைப்புடையோருக்கு தொல்லைகள் அதிகம்;
உடலெடுத்தோருக்குக் கடினமாம் அவ்யக்த இலக்கினையடைதல்"

அவ்யக்தம் - வெளித்தோற்றத்திற்கு ஆதாரமான அருவமான பரம்பொருள்

Top

விளக்கம்
எந்த நெறி செல்வேன் இன்னும் - வேறு எந்த நெறி செல்வேன் என.
தன்னைக் காப்பாய் - என்னைக் காப்பாய் என.
துவைதன் - பரமான்மாவும் சீவான்மாவும் வேறெனல்.

Top


Updated on 14 May 2010

No comments: