Wednesday, November 25, 2009

தியாகராஜ கிருதி - இதே3 பா4க்3யமு - ராகம் கன்னட3 - Ide Bhagyamu - Raga Kannada

பல்லவி
இதே3 பா4க்3யமு கா3கயேமியுன்னதி3ரா ராம

அனுபல்லவி
ஸதா3 நீ பத3 பங்கஜமுலனு
ஸம்மதமுக3 1பூஜிஞ்சு வாரி(கிதே3)

சரணம்
சரணம் 1
ஸுந்த3ர த31ரத2 நந்த3
ஹ்ரு23யாரவிந்த3முன நின்னுஞ்சி 2தானே
ப்3ரஹ்மானந்த3மனுப4விஞ்சி
அதி3யு கா3
இந்து34ரு மொத3லந்த3ரினி ஸுர
ப்3ரு2ந்த3 பூ4-ஸுர ப்3ரு2ந்த3முல
தானெந்து3 3கனியானந்த3முன
நீயந்து3 பா4வன ஜெந்து3சுண்டு3 வாரி(கிதே3)


சரணம் 2
ஆஸ1 பாஸ1முல தெக3 கோஸியன்னியு 4மதி3
ரோஸி
5கர்மமு பா3ஸி நின்னு கருணா
வாராஸி1யனி பூஜ ஜேஸி து3ஸ்-ஸங்க3தி
ஜேஸி மேனு கா3ஸி ஜெந்த3
ஸ்ரீஸ1 தே3வாதீ41 நினு
காஸீ11 நுதுட3னி ஆஸ1 நீயெட3
கீஸ14க்தியு ஜேஸின வாரி(கிதே3)


சரணம் 3
போ4கி31யன நீவே க3தியனி பட்டி
6ராகா3து3ல தோட3 பூரித 74
ஸாக3ரமுனு தா3டி
ஸந்ததமுனு
யாக3 பாலன ஜாக3-ரூக
ஸதா33திஜ ஹித யோகி3 நுத
வேதா33மாது3ல வேக3 நுதினிடு3
பா43வதுட3கு3 த்யாக3ராஜுனி(கிதே3)


பொருள் - சுருக்கம்
இராமா! அழகிய, தசரதன் மகனே! மா மணாளா! தேவர் தலைவா! அரவணையோனே! வேள்வி காப்போனே! விழிப்புடனிருப்போனே! வாயு மைந்தனுக்கினியோனே! யோகியரால் போற்றப் பெற்றோனே!
  • இதுவே பேறல்லாது (வேறு) என்ன உள்ளதய்யா?

  • எவ்வமயமும், உனது திருவடித் தாமரையினை, முழு மனதுடன் தொழுவோருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?

    • இதயக் கமலத்தினில், உன்னையிருத்தி,
    • தானே பரமானந்தத்தினைத் துய்த்து, மேலும்
    • பிறையணிவோன் முதலாக, வானோர்கள், அந்தணர்கள் யாவரிலும், தன்னை எங்கும் கண்டு,

  • ஆனந்தமாக, உன்னிடம் உள்ளுணர்வு கொண்டிருப்போருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?

    • ஆசை, பாசங்களை அற வீழ்த்தி,
    • யாவும் மனத்தாலும் துறந்து,
    • கருமங்களை விடுத்து,
    • உன்னை கருணைக் கடலென தொழுது,
    • தீய நட்பு கொண்டு உடல் துயருறாது,
    • உன்னை, காசி ஈசனால் போற்றப் பெற்றோனென, உன்னிடம் காதலும்,

  • அனுமன் (போன்ற) பக்தியும் செய்வோருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?

    • நீயே புகலெனப் பற்றி,
    • இராகம் ஆகியவற்றின் துணையுடன், நிறை பிறவிக் கடலினைத் தாண்டி,

  • மறைகள், ஆகமங்கள் ஆகியவற்றின் ஊக்கத்துடன், எவ்வமயமும் போற்றி செய்யும், பாகவதனாகிய, தியாகராசனுக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இதே3/ பா4க்3யமு/ கா3க/-ஏமி-/உன்னதி3ரா/ ராம/
இதுவே/ பேறு/ அல்லாது/ (வேறு) என்ன/ உள்ளதய்யா/ இராமா/


அனுபல்லவி
ஸதா3/ நீ/ பத3/ பங்கஜமுலனு/
எவ்வமயமும்/ உனது/ திருவடி/ தாமரையினை/

ஸம்மதமுக3/ பூஜிஞ்சு வாரிகி/-(இதே3)
முழு மனதுடன்/ தொழுவோருக்கு/ இதுவே...


சரணம்
சரணம் 1
ஸுந்த3ர/ த31ரத2/ நந்த3ன/
அழகிய/ தசரதன்/ மகனே/

ஹ்ரு23ய/-அரவிந்த3முன/ நின்னு/-உஞ்சி/ தானே/
இதய/ கமலத்தினில்/ உன்னை/ இருத்தி/ தானே/

ப்3ரஹ்மானந்த3மு/-அனுப4விஞ்சி/ அதி3யு கா3க/
பரமானந்தத்தினை/ துய்த்து/ மேலும்/

இந்து3/ த4ரு/ மொத3லு/-அந்த3ரினி/
பிறை/ அணிவோன்/ முதலாக/ யாவரிலும்/

ஸுர ப்3ரு2ந்த3/ பூ4-ஸுர ப்3ரு2ந்த3முல/
வானோர்கள்/ அந்தணர்கள்/

தானு/-எந்து3/ கனி/-ஆனந்த3முன/
தன்னை/ எங்கும்/ கண்டு/ ஆனந்தமாக/

நீயந்து3/ பா4வன/ ஜெந்து3சு/-உண்டு3 வாரிகி/-(இதே3)
உன்னிடம்/ உள்ளுணர்வு/ கொண்டு/ இருப்போருக்கு/ இதுவே...


சரணம் 2
ஆஸ1/ பாஸ1முல/ தெக3/ கோஸி/-அன்னியு/ மதி3/
ஆசை/ பாசங்களை/ அற/ வீழ்த்தி/ யாவும்/ மனத்தாலும்/

ரோஸி/ கர்மமு/ பா3ஸி/ நின்னு/ கருணா/
துறந்து/ கருமங்களை/ விடுத்து/ உன்னை/ கருணை/

வாராஸி1/-அனி/ பூஜ ஜேஸி/ து3ஸ்/-ஸங்க3தி/
கடல்/ என/ தொழுது/ தீய/ நட்பு/

ஜேஸி/ மேனு/ கா3ஸி/ ஜெந்த3க/
கொண்டு/ உடல்/ துயர்/ உறாது/

ஸ்ரீ/-ஈஸ1/ தே3வ/-அதி4-ஈஸ1/ நினு/
மா/ மணாளா/ தேவர்/ தலைவா/ உன்னை/

காஸி1/-ஈஸ1/ நுதுடு3/-அனி/ ஆஸ1/ நீயெட3/
காசி/ ஈசனால்/ போற்றப் பெற்றோன்/ என/ காதல்/ உன்னிடம்/

கீஸ1/ ப4க்தியு/ ஜேஸின வாரிகி/-(இதே3)
அனுமன் (போன்ற)/ பக்தியும்/ செய்வோருக்கு/ இதுவே...


சரணம் 3
போ4கி3/ ஸ1யன/ நீவே/ க3தி/-அனி/ பட்டி/
அரவு/ அணையோனே/ நீயே/ புகல்/ என/ பற்றி/

ராக3/-ஆது3ல/ தோட3/ பூரித/ ப4வ/
இராகம்/ ஆகியவற்றின்/ துணையுடன்/ நிறை/ பிறவி/

ஸாக3ரமுனு/ தா3டி/ ஸந்ததமுனு/
கடலினை/ தாண்டி/ எவ்வமயமும்/

யாக3/ பாலன/ ஜாக3-ரூக/
வேள்வி/ காப்போனே/ விழிப்புடனிருப்போனே/

ஸதா33திஜ/ ஹித/ யோகி3/ நுத/
வாயு மைந்தனுக்கு/ இனியோனே/ யோகியரால்/ போற்றப் பெற்றோனே/

வேத3/-ஆக3ம/-ஆது3ல/ வேக3/ நுதினி/-இடு3/
மறைகள்/ ஆகமங்கள்/ ஆகியவற்றின்/ ஊக்கத்துடன்/ போற்றி/ செய்யும்/

பா43வதுட3கு3/ த்யாக3ராஜுனிகி/-(இதே3)
பாகவதனாகிய/ தியாகராசனுக்கு/ இதுவே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூஜிஞ்சு - ஸேவிஞ்சு.

3 - கனியானந்த3முன - கனியானந்த3முக.

6 - ராகா3து3ல தோட3 - ராகா3து3ல தோடி3 : இவ்விடத்தில் 'தோட3' என்பதே பொருந்தும். எனவே அங்ஙனமே ஏற்கப்பட்டது.

சரணங்கள் 1-ம், 2-ம், சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

Top

மேற்கோள்கள்
4 - மதி3 ரோஸி - மனத்தினாலும் துறந்து - கண்ணன் கீதையில் (2-வது அத்தியாயம், 59-வது செய்யுள்) கூறியது -

"விடயங்கள், விரதமிருப்போனிடமிருந்து விலகுகின்றன;
(அவற்றின்) அவா (சுவை) விலகுவதில்லை. அவாவும் (சுவையும்), பரம்பொருளினை யறிந்தபின் விலகுகின்றன." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்) (விடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்)

Top

5 - கர்மமு பா3ஸி - கர்மங்களைத் துறந்து - கண்ணன் கீதையில் (18-வது அத்தியாயம், 66-வது செய்யுள்) கூறுவது -

"அனைத்து தருமங்களையும் துறந்து, என் ஒருவனையே புகலடைவாயாக;
நான், உன்னை, அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

7 - 4வ ஸாக3ரமுனு தா3டி - பிறவிக் கடலைத் தாண்டி. இது குறித்து நாரத பக்தி சூத்திரம் (46 மற்றும் 50-வது செய்யுட்கள்) கூறுவது -

"எவன் கடக்கின்றான், எவன் கடக்கின்றான், மாயையினை? எவனொருவன் புலன் நாட்டங்களைத் துறக்கின்றானோ, சான்றோர்களுக்கு எவன் சேவை செய்கின்றானோ, எவன் அகந்தையற்றுள்ளானோ, அவனே கடக்கின்றான், அவனே கடக்கின்றான்; அவன் மற்றோரையும் கடத்துவிக்கின்றான்." (ஸ்வாமி தியாகீஸானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
2 - தானே ப்3ரஹ்மானந்த3மனுப4விஞ்சி, அந்த3ரினி தானெந்து3 3கனி, நீயந்து3 பா4வன ஜெந்து3சுண்டு3 - 'தானே பரமானந்தத்தினைத் துய்த்து', 'தன்னை எங்கும் கண்டு', 'உன்னிடம் உள்ளுணர்வு கொண்டு' - இச்சொற்கள் யாவும் அபரோக்ஷ - நேரடி - அனுபூதியினால் உணரப்படவேண்டியவை. அத்தகைய அனுபூதி பெற்றவர்களே இவற்றிற்கு உண்மையான விளக்கம் தரமுடியும். என்னைப்போன்று, வெறும் கல்வியறிவின் துணை கொண்டு, பொருள் கூறுவது இயலாததும், தவறானதும் கூட.

Top

தன்னை எங்கும் கண்டு - 'தன்னில் கண்டு' என்றும் கொள்ளலாம்.
கருமங்கள் - இச்சைகளுக்காக புரியும் பணிகள்.
காசி ஈசன் - சிவன்.
இராகம் ஆகிய - இசையினைக் குறிக்கும்.
விழிப்புடனிருப்போனே - தொண்டர்களைப் பேணுவதில்.
பாகவதன் - சிறந்த தொண்டன்.

Top


Updated on 26 Nov 2009

3 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
ஸுந்த3ர த3ஸ1ரத2 நந்த3ன – இதற்கு அழகிய தசரதன் மகனே என்று பொருள் கூறியுள்ளீர். தசரதன் அழகன் என்ற பொருள் தரும். தசரதனின் அழகிய மகனே என்பது தானே பொருள்.அழகனே! தசரதன் மகனே என்பது சரியா?
வணக்கம்

V Govindan said...
This comment has been removed by the author.
V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
உங்கள் ஐயத்திற்கிணங்க, 'அழகிய' என்ற சொல்லுக்குப்பின் comma சேர்த்துள்ளேன்.
வணக்கம்
கோவிந்தன்