Saturday, November 14, 2009

தியாகராஜ கிருதி - ஏல நீ த3ய ராது3 - ராகம் அடா2ணா - Ela Nee Daya Raadu - Raga Athana

பல்லவி
ஏல நீ த3ய ராது3 பராகு
1ஜேஸேவேல ஸமயமு காது3

அனுபல்லவி
பா3ல கனக மய சேல ஸுஜன
பரிபால ஸ்ரீ ரமா லோல வித்4ரு2த ஸ1
ஜால ஸு143 கருணாலவால க4
நீல நவ்ய 2வன மாலிகா4ரண (ஏ)

சரணம்
சரணம் 1
ராரா தே3வாதி3 தே3வ ராரா மஹானுபா4
ராரா ராஜீவ நேத்ர ரகு4 வர புத்ர
ஸாரதர 3ஸுதா4 பூர ஹ்ரு23
பரிவார ஜலதி43ம்பீ4ர த3னுஜ
ஸம்ஹார 4மத3ன ஸுகுமார பு34 ஜன
விஹார ஸகல ஸ்1ருதி ஸார நாது3பை (ஏ)


சரணம் 2
ராஜாதி4 ராஜ 5முனி பூஜித பாத3 ரவி
ராஜ லோசன ஸ1ரண்ய அதி லாவண்ய
ராஜ த4ர நுத விராஜ துரக3 ஸுர
ராஜ வந்தி3த பதா3ஜ ஜனக தி3
ராஜ கோடி ஸம தேஜ த3னுஜ க3
ராஜ நிசய ம்ரு23 ராஜ ஜலஜ முக2 (ஏ)


சரணம் 3
யாக3 ரக்ஷண பரம பா43வதார்சித
யோகீ3ந்த்3ர ஸுஹ்ரு2த்3பா4விதாத்3யந்த ரஹித
நாக31யன வர நாக3 வரத3
6புன்னாக3 ஸும4ர ஸதா34 மோசன
ஸதா33திஜ த்4ரு27பதா33மாந்த சர
ராக3 ரஹித ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ஏ)


பொருள் - சுருக்கம்
  • இளைஞனே! பொன்மய ஆடைகளோனே! நல்லோரைப் பேணுவோனே! இலக்குமியிடம் திளைப்போனே! மிக்கு அம்புகளையேந்துவோனே! சீரருள்வோனே! கருணைக் கடலே! கார்முகில் நீலவண்ணா! (என்றும்) புதிய வன மாலையணிவோனே!

  • தேவருக்கும் ஆதி தேவா! பெருந்தகையே! கமலக்கண்ணா! உயர் இரகு குலத் தோன்றலே! மேன்மையானவனே! அமுதம் நிறை உள்ளமுடைச் சுற்றத்தோனே! கடல் நிகர் மாட்சிமையோனே! அரக்கரை யழித்தோனே! மதனன் நிகர் அழகிய இளைனே! அறிஞர்கள் உள்ளுறையே! அனைத்து மறைகளுக்கும் சாரமே! என் மீது

  • அரசர்க்கரசே! முனிவர் தொழும் திருவடியோனே! பரிதி மதி கண்களோனே! (யாவர்க்கும்) புகலே! மிக்கெழிலோனே! பிறையணிவோன் போற்றும், கருட வாகனனே! தேவர் தலைவன் வந்திக்கும் திருவடியோனே! பிரமனை யீன்றோனே! பகலவன் கோடி நிகரொளியோனே! அரக்கரெனும் கரி யரசர்களுக்கு மிருகபதியே! கமல வதனத்தோனே!

  • வேள்வி காப்போனே! பரம பாகவதரால் தொழப்பெற்றோனே! உயர் யோகியர் நல்லிதயங்களில் உணரப்படும் முதல் முடிவற்றோனே! அரவணையோனே! உயர் கரிக்கருள்வோனே! புன்னை மலரணிவோனே! என்றும் பாவங்களைக் களைவோனே! வாயு மைந்தன் பற்றும் திருவடியோனே! ஆகமங்களுள்ளுறையே! பற்றற்றோனே! தியாகராசன் போற்றும் மேலோனே!

    • ஏன் உனது தயை வாராது? அசட்டை செய்வதேன்? இது சமயமன்று.

    • வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏல/ நீ/ த3ய/ ராது3/ பராகு/
ஏன்/ உனது/ தயை/ வாராது/ அசட்டை/

ஜேஸேவு/-ஏல/ ஸமயமு/ காது3/
செய்வது/ ஏன்/ (இது) சமயம்/ அன்று/


அனுபல்லவி
பா3ல/ கனக/ மய/ சேல/ ஸுஜன/
இளைஞனே/ பொன்/ மய/ ஆடைகளோனே/ நல்லோரை/

பரிபால/ ஸ்ரீ ரமா/ லோல/ வித்4ரு2த/ ஸ1ர/
பேணுவோனே/ இலக்குமியிடம்/ திளைப்போனே/ ஏந்துவோனே/ அம்புகளை/

ஜால/ ஸு143/ கருணா/-ஆலவால/ க4ன/
மிக்கு/ சீரருள்வோனே/ கருணை/ கடலே/ கார்முகில்/

நீல/ நவ்ய/ வன/ மாலிகா/-ஆப4ரண/ (ஏ)
நீலவண்ணா/ (என்றும்) புதிய/ வன/ மாலை/ அணிவோனே/


சரணம்
சரணம் 1
ராரா/ தே3வ/-ஆதி3/ தே3வ/ ராரா/ மஹானுபா4வ/
வாராய்/ தேவருக்கும்/ ஆதி/ தேவா/ வாராய்/ பெருந்தகையே/

ராரா/ ராஜீவ/ நேத்ர/ ரகு4/ வர/ புத்ர/
வாராய்/ கமலக்கண்ணா/ இரகு (குல)/ உயர்/ தோன்றலே/

ஸாரதர/ ஸுதா4/ பூர/ ஹ்ரு23ய/
மேன்மையானவனே/ அமுதம்/ நிறை/ உள்ளமுடை/

பரிவார/ ஜலதி4/ க3ம்பீ4ர/ த3னுஜ/
சுற்றத்தோனே/ கடல் (நிகர்)/ மாட்சிமையோனே/ அரக்கரை/

ஸம்ஹார/ மத3ன/ ஸுகுமார/ பு34 ஜன/
யழித்தோனே/ மதனன் (நிகர்)/ அழகிய இளைனே/ அறிஞர்கள்/

விஹார/ ஸகல/ ஸ்1ருதி/ ஸார/ நாது3பை/ (ஏ)
உள்ளுறையே/ அனைத்து/ மறைகளுக்கும்/ சாரமே/ என் மீது/ ஏன்...


சரணம் 2
ராஜ/-அதி4 ராஜ/ முனி/ பூஜித/ பாத3/ ரவி/
அரசர்க்கு/ அரசே/ முனிவர்/ தொழும்/ திருவடியோனே/ பரிதி/

ராஜ/ லோசன/ ஸ1ரண்ய/ அதி/ லாவண்ய/
மதி/ கண்களோனே/ (யாவர்க்கும்) புகலே/ மிக்கு/ எழிலோனே/

ராஜ/ த4ர/ நுத/ விராஜ/ துரக3/ ஸுர/
பிறை/ அணிவோன்/ போற்றும்/ கருட/ வாகனனே/ தேவர்/

ராஜ/ வந்தி3த/ பத3/-அஜ/ ஜனக/
தலைவன்/ வந்திக்கும்/ திருவடியோனே/ பிரமனை/ யீன்றோனே/

தி3ன ராஜ/ கோடி/ ஸம/ தேஜ/ த3னுஜ/ க3ஜ/
பகலவன்/ கோடி/ நிகர்/ ஒளியோனே/ அரக்கர் (எனும்)/ கரி/

ராஜ நிசய/ ம்ரு23/ ராஜ/ ஜலஜ/ முக2/ (ஏ)
அரசர்களுக்கு/ மிருக/ பதியே/ கமல/ வதனத்தோனே/


சரணம் 3
யாக3/ ரக்ஷண/ பரம/ பா43வத/-அர்சித/
வேள்வி/ காப்போனே/ பரம/ பாகவதரால்/ தொழப்பெற்றோனே/

யோகி3/-இந்த்3ர/ ஸு-ஹ்ரு2த்3/-பா4வித/-ஆதி3/-அந்த/ ரஹித/
யோகியர்/ உயர்/ நல்லிதயங்களில்/ உணரப்படும்/ முதல்/ முடிவு/ அற்றோனே/

நாக3/ ஸ1யன/ வர/ நாக3/ வரத3/
அரவு/ அணையோனே/ உயர்/ கரிக்கு/ அருள்வோனே/

புன்னாக3/ ஸும/ த4ர/ ஸதா3/-அக4/ மோசன/
புன்னை/ மலர்/ அணிவோனே/ என்றும்/ பாவங்களை/ களைவோனே/

ஸதா33தி/ஜ/ த்4ரு2த/ பத3/-ஆக3ம/-அந்த சர/
வாயு/ மைந்தன்/ பற்றும்/ திருவடியோனே/ ஆகமங்கள்/ உள்ளுறையே/

ராக3/ ரஹித/ ஸ்ரீ/ த்யாக3ராஜ/ நுத/ (ஏ)
பற்று/ அற்றோனே/ மேலோனே/ தியாகராசன்/ போற்றும்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜேஸேவேல - ஜேஸெத3வேல.

3 - ஸுதா4 பூர ஹ்ரு23 - ஸுதா4 பூர்ண ஹ்ரு23ய.

4 - மத3ன ஸுகுமார - த31ரத2 குமார.

5 - முனி பூஜித பாத3 - முனி பூஜித பத3.

Top

மேற்கோள்கள்
2 - வன மாலிகா - வன மாலை - துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட விஷ்ணுவின் வைஜயந்தி மாலை. மாலைகளைப்பற்றி ஓர் கட்டுரை நோக்கவும்.

6 - புன்னாக3 ஸும - புன்னை மலர். பூஜைக்குரிய மலர்கள்.

Top

விளக்கம்
7 - ஆக3மாந்த சர (ஆக3ம+அந்த+சர) - ஆகமங்கள் உள்ளுறை - 'அந்த' என்ற சொல்லுக்கு 'உள்' என்று பொருளுண்டானாலும், இது 'ஆக3மாந்தஸ்1சர' என்றிருக்கவேண்டுமெனக் கருதுகின்றேன்.

தியாகராஜர், இராமன் இலக்குவனை, வேள்வி காப்பதற்காக, விசுவாமித்திரருடன் அடவிக்குச் செல்லும் காட்சியினைக் கண்டு, பரவசப்பட்டு, இந்த பாடல் இயற்றியதாக, ஹரிகதை சொற்பொழிவாளர் திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தனது 'தியாகராஜ சரித்திரம்' என்ற ஹரிகதையில் கூறுகின்றார்.

பிறையணிவோன் - சிவன்
மிருகபதி - சிங்கம்

Top


Updated on 14 Nov 2009

No comments: