Thursday, November 12, 2009

தியாகராஜ கிருதி - ஏ பாபமு - ராகம் அடா2ணா - Epaapamu - Raga Athana

பல்லவி
ஏ பாபமு ஜேஸிதிரா ராம
நீகே பாடைன த3ய ராது3 நே(னே)

அனுபல்லவி
நீ பாத3முலனு கன மொரலிடி3தே
நீ பாடுன வினி 1வினனட்டுண்டு3டகு நே(னே)

சரணம்
சரணம் 1
நாத3 ரூபுட3வனி வினி நே ஸ்ரீ
நாத2 நின்னு நம்மிதினி
2நாத3 புரமுனனுண்டி3யு
நன்னாத3ரிஞ்சக ஊரகுண்டு3டகு நே(னே)


சரணம் 2
கா3ரவிம்ப த3ய ராதா3 பாலு
காரு மோமு ஜூப ராதா3
ஊரகுண்டு3ட மரியாதா3 3நா
து3ரா
தெல்பு-வாரெவ்வரு லேரா (ஏ)


சரணம் 3
எந்து3கனுசு ஸைரிந்துரா ராம
முந்து3 வெனுக தோசது3ரா
முந்த3ர நிலிசி பலுகுரா
நாயந்து3 நீகு ஈவரகு மரபுரா (ஏ)


சரணம் 4
கன்ன வாரினி வேடி3தினா
நாயன்ன நின்னாடு3கொன்னானா
நின்னு நம்மின-வாட3னு கானா முனி
ஸன்னுத கபடமுலன்னி நாதோனா (ஏ)


சரணம் 5
வினவய்ய இன குல த4னமா ராம
நினு நம்மியிங்க து3ரிதமா
4பு4வனமுன நீகிதி34னமா நீ
மனஸிடுவண்டித3னுசுனு தெலுபுமா (ஏ)


சரணம் 6
ஸத3யுடை3 இங்க பராகா நா
ஹ்ரு23ய வாஸுடு3 நீவே கா3
இதி3 பு3த்3தி4யனுசு தெல்ப லேக நாடு3
மொத3லுகா3னு ஊரகுன்னாவு கா3க (ஏ)


சரணம் 7
ராஜ ஸே125ஸன்னுதாங்க3
த்யாக3ராஜ 6ஹ்ரு23ப்3 ஸு-ப்4ரு2ங்க3
ராஜித கருணாபாங்க3 ரதி
ராஜ ஜனக பாப த்4வாந்த பதங்க3 நே(னே)


பொருள் - சுருக்கம்
 • இராமா! இலக்குமி மணாளா! எனது தந்தையே! முனிவரால் போற்றப்பெற்றோனே! பரிதி குலச்செல்வமே!

 • பிறையணிவோனால் சிறக்கப் போற்றப் பெற்றோனே! தியாகராசனின் இதயக்கமலத்தின் வண்டே! ஒளிரும் கருணை பார்வையோனே! இரதி பதியினை ஈன்றோனே! பாவ இருளைப் போக்கும் பரிதியே!

  • நானென்ன பாவம் செய்தேனய்யா? உனக்கு எப்பாடாகிலும் தயை வாராது.

  • உனது திருவடிகளைக் காண முறையிட்டால், உன்பாட்டிற்கு, கேட்டும் கேளாதது போன்றிருப்பதற்கு, நான் என்ன பாவம் செய்தேனய்யா?

   • நாத உருவத்தினெனச் செவிமடுத்து நான், உன்னை நம்பினேன்; நாத புரத்தினில் இருந்தும், என்னை யாதரியாது சும்மாயிருப்பதற்கு, நான் என்ன பாவம் செய்தேனய்யா?

   • பரிவுகொள்ள, கருணை வாராதா? பால் வடியும் முகத்தைக் காட்டலாகாதா? சும்மாயிருத்தல் மரியாதையா? எனது துயரைத் தெரிவிப்போர் யாரும் இலரோ?

   • எதற்கெனப் பொறுப்பேனய்யா? முன்பின் தோன்றாதய்யா; முன்னால் நின்று பேசுவாயய்யா; என்னிடம் உனக்கு இதுவரை மறதியய்யா.

   • கண்டவர்களை வேண்டினேனா? உன்னைப் பழித்தேனா? உன்னை நம்பினவன் இல்லையா? வஞ்சனை யாவும் என்னிடமா?

   • கேளய்யா, உன்னை நம்பி இன்னும் துயரமா? புவியில் உனக்கிது பெருமையா? உனது உள்ளம் இத்தகையதென தெரிவிப்பாயய்யா.

   • கருணையுடைத்திருந்தும், இன்னமும் அசட்டையோ? எனது உள்ளத்தினில் குடியிருப்பவன் நீயேயாக இருந்தும், இஃது உகந்ததென தெரிவிக்காது, அன்று முதலாக சும்மாயிருக்கின்றாயன்றோ.  பதம் பிரித்தல் - பொருள்
  பல்லவி
  ஏ/ பாபமு/ ஜேஸிதிரா/ ராம/
  என்ன/ பாவம்/ செய்தேனய்யா/ இராமா/

  நீகு/-ஏ பாடைன/ த3ய/ ராது3/ நேனு/-(ஏ)
  உனக்கு/ எப்பாடாகிலும்/ தயை/ வாராது/ நான்/ என்ன...


  அனுபல்லவி
  நீ/ பாத3முலனு/ கன/ மொரலு/-இடி3தே/
  உனது/ திருவடிகளை/ காண/ முறை/ இட்டால்/

  நீ/ பாடுன/ வினி/ வினன/-அட்டு/-உண்டு3டகு/ நேனு/-(ஏ)
  உன்/ பாட்டிற்கு/ கேட்டும்/ கேளாதது/ போன்று/ இருப்பதற்கு/ நான்/ என்ன...


  சரணம்
  சரணம் 1
  நாத3/ ரூபுட3வு/-அனி/ வினி/ நே/ ஸ்ரீ/
  நாத/ உருவத்தினன்/ என/ செவிமடுத்து/ நான்/ இலக்குமி/

  நாத2/ நின்னு/ நம்மிதினி/
  மணாளா/ உன்னை/ நம்பினேன்/

  நாத3/ புரமுன/-உண்டி3யு/
  நாத/ புரத்தினில்/ இருந்தும்/

  நன்னு/-ஆத3ரிஞ்சக/ ஊரக/-உண்டு3டகு/ நேனு/-(ஏ)
  என்னை/ யாதரியாது/ சும்மா/ இருப்பதற்கு/ நான்/ என்ன...


  சரணம் 2
  கா3ரவிம்ப/ த3ய/ ராதா3/ பாலு/
  பரிவுகொள்ள/ கருணை/ வாராதா/ பால்/

  காரு/ மோமு/ ஜூப ராதா3/
  வடியும்/ முகத்தை/ காட்டலாகாதா/

  ஊரக/-உண்டு3ட/ மரியாதா3/ நா/
  சும்மா/ இருத்தல்/ மரியாதையா/ எனது/

  து3ரா/ தெல்பு-வாரு/-எவ்வரு/ லேரா/ (ஏ)
  துயரை/ தெரிவிப்போர்/ யாரும்/ இலரோ/


  சரணம் 3
  எந்து3கு/-அனுசு/ ஸைரிந்துரா/ ராம/
  எதற்கு/ என/ பொறுப்பேனய்யா/ இராமா/

  முந்து3/ வெனுக/ தோசது3ரா/
  முன்/ பின்/ தோன்றாதய்யா/

  முந்த3ர/ நிலிசி/ பலுகுரா/
  முன்னால்/ நின்று/ பேசுவாயய்யா/

  நாயந்து3/ நீகு/ ஈவரகு/ மரபுரா/ (ஏ)
  என்னிடம்/ உனக்கு/ இதுவரை/ மறதியய்யா/


  சரணம் 4
  கன்ன வாரினி/ வேடி3தினா/
  கண்டவர்களை/ வேண்டினேனா/

  நா/-அன்ன/ நின்னு/-ஆடு3கொன்னானா/
  எனது/ தந்தையே/ உன்னை/ பழித்தேனா/

  நின்னு/ நம்மின-வாட3னு/ கானா/ முனி/
  உன்னை/ நம்பினவன்/ இல்லையா/ முனிவரால்/

  ஸன்னுத/ கபடமுலு/-அன்னி/ நாதோனா/ (ஏ)
  போற்றப்பெற்றோனே/ வஞ்சனை/ யாவும்/ என்னிடமா/


  சரணம் 5
  வினுமு-அய்ய/ இன/ குல/ த4னமா/ ராம/
  கேளய்யா/ பரிதி/ குல/ செல்வமே/ இராமா/

  நினு/ நம்மி/-இங்க/ து3ரிதமா/
  உன்னை/ நம்பி/ இன்னும்/ துயரமா/

  பு4வனமுன/ நீகு/-இதி3/ க4னமா/ நீ/
  புவியில்/ உனக்கு/ இது/ பெருமையா/ உனது/

  மனஸு/-இடுவண்டிதி3/-அனுசுனு/ தெலுபுமா/ (ஏ)
  உள்ளம்/ இத்தகையது/ என/ தெரிவிப்பாயய்யா/


  சரணம் 6
  ஸத3யுடை3/ இங்க/ பராகா/ நா/
  கருணையுடைத்திருந்தும்/ இன்னமும்/ அசட்டையோ/ எனது/

  ஹ்ரு23ய/ வாஸுடு3/ நீவே/ கா3க/
  உள்ளத்தினில்/ குடியிருப்பவன்/ நீயேயாக/ இருந்தும்/

  இதி3/ பு3த்3தி4/-அனுசு/ தெல்ப லேக/ நாடு3/
  இஃது/ உகந்தது/ என/ தெரிவிக்காது/ அன்று/

  மொத3லுகா3னு/ ஊரக/-உன்னாவு/ கா3க/ (ஏ)
  முதலாக/ சும்மா/ இருக்கின்றாய்/ அன்றோ/


  சரணம் 7
  ராஜ/ ஸே12ர/ ஸன்னுத-அங்க3/
  பிறை/ அணிவோனால்/ சிறக்கப் போற்றப் பெற்றோனே/

  த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-அப்3ஜ/ ஸு-ப்4ரு2ங்க3/
  தியாகராசனின்/ இதய/ கமலத்தின்/ வண்டே/

  ராஜித/ கருணா/-அபாங்க3/ ரதி/
  ஒளிரும்/ கருணை/ பார்வையோனே/ இரதி/

  ராஜ/ ஜனக/ பாப/ த்4வாந்த/ பதங்க3/ நேனு/-(ஏ)
  பதியினை/ ஈன்றோனே/ பாவ/ இருளை/ (போக்கும்) பரிதியே/ நான்/ என்ன...


  குறிப்புக்கள் - (Notes)
  வேறுபாடுகள் - (Pathanthara)
  சில புத்தகங்களில் 'நேனு' என்ற சொல், பல்லவி, அனுபல்லவி மற்றும் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

  சில புத்தகங்களில் 2 மற்றும் 3-வது சரணங்கள் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டளன.

  1 - வினனட்டு - வினனட்லு.

  2 - நாத3 புரமுன - நா தா3புரமுன : 'நா தா3புரமுன' என்பது சரியானால் 'எனது மறைவினில் இருந்தும்' என்று மொழிபெயர்க்கப்படும். ஆனால் அத்தகைய பொருள் சரியல்ல என்று தோன்றுகின்றது.

  3 - நா து3ரா - நா தூ3ர - நா தூ3ரா : எல்லா புத்தகங்களிலும் 'எனது துயர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'தூ3ரா' என்ற சொல் அகராதியில் காணப்படவில்லை. 'தூ3ர' என்ற சொல்லுக்கு 'துயர்' என்ற பொருளில்லை. தெலுங்கு அகராதியின்படி, 'து3ரடில்லு' என்ற சொல்லலுக்கு 'துயருறுதல்' என்று பொருளாகும். எனவே 'து3ரடில்லு', 'து3ர' என்பதன் திரிபாக இருக்கலாம்.

  4 - பு4வனமுன - ப4வமுன.

  6 - ஹ்ரு23ப்3 - ஹ்ரு2தா3ப்3ஜ : 'ஹ்ரு2தா3ப்3ஜ' என்பது சரியல்ல என்று தோன்றுகின்றது.

  Top

  மேற்கோள்கள்

  விளக்கம்
  2 - நாத3 புரமுன : 'நாத3 புரம்' என்ற சொல்லின் பொருள் என்னவென சரிவர விளங்கவில்லை. திரு C ராமானுஜாசாரியாரின் 'The Spiritual Heritage of Tyagaraja' என்ற புத்தகத்தின் முன்னுரை (ஆராய்ச்சி நூலில்) டாக்டர் V ராகவன் அவர்கள், 'நாத3 புரம்' என்பதனை 'நத3 புரம்' (திருவையாறு) என்ற சொல்லின் சிலேடையாக தியாகராஜர் பயன்படுத்தியுள்ளார் என்று கூறுகின்றார். ஆனால் 'நத3 புரம்' என்ற சொல் இந்த கீர்த்தனையில் காணப்படவில்லை. திருவையாறுக்கு 'நாத3 புரம்' என்ற பெயர் உண்டா என்பது தெரியவில்லை. இங்கு 'திருவையாறு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  5 - ஸன்னுதாங்க3 - 'ஸன்னுத+அங்க3' : இவ்விடத்தில், 'அங்க3' என்ற சொல்லுக்குத் தனிப்பட்ட பொருள் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

  எப்பாடாகிலும் - எவ்விதமாகிலும்
  உன்பாட்டிற்கு - தனது பணியில் ஈடுபட்டு
  இரதி பதி - காமன்

  Top


  Updated on 12 Nov 2009

  No comments: