Saturday, November 7, 2009

தியாகராஜ கிருதி - அனுபம கு3ண - ராகம் அடா2ணா - Anupama Guna - Raga Athana

பல்லவி
அனுபம கு3ணாம்பு3தி4யனி நின்னு நெர நம்மி-
யனுஸரிஞ்சின வாட3னைதி

அனுபல்லவி
மனுபகயேயுன்னாவு 1மனு பதீ வ்ராஸி
மேமனுப மாகெவரு வினுமா த3ய ரானி (அ)

சரணம்
சரணம் 1
ஜனக ஜாமாதவை 2ஜனகஜா மாதவை
ஜனக ஜாலமு சாலு சாலுனு ஹரி (அ)


சரணம் 2
கனக பட த4ர நன்னு கன கபடமேல தனு
கனக பட2னமு ஸேது கானி 3பூனி (அ)


சரணம் 3
4கலலோன நீவே ஸகல லோக நாத2
5கோகலு லோகுவ கனிச்சி காசினதி3 வினி (அ)


சரணம் 4
ராஜ குல கலஸா1ப்3தி4 ராஜ ஸுர பால க3
ராஜ ரக்ஷக த்யாக3ராஜ வினுத (அ)


பொருள் - சுருக்கம்
 • மானவர் தலைவா! தந்தையே! அரியே! பொன்னாடையணிவோனே! பல்லுலகிற்கும் தலைவா!
 • அரச குலக் கடலில் தோன்றிய மதியே! வானோரைக் காப்போனே! கரியரசனைக் காத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • சனகனின் மருமகன் நீ! சானகியை யீன்றவள் (போலும்) நீ;

  • (துரோபதையின்) தலைகுனிவு கண்டு, சேலைகளளித்துக் காத்ததைச் செவிமடுத்து,உவமையற்ற பண்புக்கடலென உன்னை மிக்கு நம்பி, விரதமேற்று பின்பற்றியவனாகினேன்;

  • கனவிலும் நீயே;

  • கவனிக்காமலேயுள்ளாய்; எழுதி, யாம் அனுப்ப, எமக்கெவருளர்?
  • ஏய்த்தது போதும், போதும்;
  • என்னைக் காணக் கள்ளமேன்?
  • உன்னைக் காணாது, (உனது நாமத்தை) ஓதிக்கொண்டிருப்பேன்;

  • கேளாய்; தயை வரட்டும்.


  பதம் பிரித்தல் - பொருள்
  பல்லவி
  அனுபம/ கு3ண/-அம்பு3தி4/-அனி/ நின்னு/ நெர/ நம்மி/-
  உவமையற்ற/ பண்பு/ கடல்/ என/ உன்னை/ மிக்கு/ நம்பி/

  அனுஸரிஞ்சின வாட3னைதி/
  பின்பற்றியவனாகினேன்/


  அனுபல்லவி
  மனுபகயே/-உன்னாவு/ மனு/ பதீ/ வ்ராஸி/
  கவனிக்காமலே/ உள்ளாய்/ மானவர்/ தலைவா/ எழுதி/

  மேமு/-அனுப/ மாகு/-எவரு/ வினுமா/ த3ய/ ரானி/ (அ)
  யாம்/ அனுப்ப/ எமக்கு/ எவர் (உளர்)/ கேளாய்/ தயை/ வரட்டும்/


  சரணம்
  சரணம் 1
  ஜனக/ ஜாமாதவை/ ஜனகஜா/ மாதவை/
  சனகனின்/ மருமகன் நீ/ சானகியை/ யீன்றவள் (போலும்) நீ/

  ஜனக/ ஜாலமு/ சாலு/ சாலுனு/ ஹரி/ (அ)
  தந்தையே/ ஏய்த்தது/ போதும்/ போதும்/ அரியே/


  சரணம் 2
  கனக/ பட/ த4ர/ நன்னு/ கன/ கபடமு/-ஏல/ தனு/
  பொன்/ ஆடை/ அணிவோனே/ என்னை/ காண/ கள்ளம்/ ஏன்/ உன்னைக்

  கனக/ பட2னமு ஸேது/ கானி/ பூனி/ (அ)
  காணாது/ (உனது நாமத்தை) ஓதிக்கொண்டிருப்பேன்/ ஆயினும்/ விரதமேற்று/ உவமையற்ற...


  சரணம் 3
  கலலோன/ நீவே/ ஸகல லோக/ நாத2/
  கனவிலும்/ நீயே/ பல்லுலகிற்கும்/ தலைவா/

  கோகலு/ லோகுவ/ கனி/-இச்சி/ காசினதி3/ வினி/ (அ)
  சேலைகள்/ (துரோபதையின்) தலைகுனிவு/ கண்டு/ அளித்து/ காத்ததை/ செவிமடுத்து/ உவமையற்ற...


  சரணம் 4
  ராஜ/ குல/ கலஸ1-அப்3தி4/ ராஜ/ ஸுர/ பால/ க3ஜ/
  அரச/ குல/ (கலச) கடலில்/ (தோன்றிய) மதியே/ வானோரை/ காப்போனே/ கரி/

  ராஜ/ ரக்ஷக/ த்யாக3ராஜ/ வினுத/ (அ)
  அரசனை/ காத்தோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


  குறிப்புக்கள் - (Notes)
  வேறுபாடுகள் - (Pathanthara)
  1 - மனு பதீ - மனு பதி.

  4 - கலலோன - கலலோனு.

  5 - கோகலு - கோகல : இவ்விடத்தில் 'கோகலு' பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

  Top

  மேற்கோள்கள்

  விளக்கம்
  2 - ஜனகஜா மாதவை - சானகியை யீன்றவள் - பூதேவி : சானகியை யீன்றவள் போலும் நீ - பொறுமையில் பூமி நிகரென. இதனை, இருவிதமாகப் பொருள்கொள்ளலாம். (1) 'பூமி நிகர் பொறுமையானவன் நீ. எனவே, எனது பிழைகளை மன்னிப்பாய்' என்றும் (2) 'எவ்வளவு வேண்டினாலும் இரங்காது, பூமி நிகர் அசையாமல் (பொறுமையாக) உள்ளவன் என'. அனுபல்லவியில், 'என்னைக் கவனியாதுள்ளாய்' எனக் கூறியுள்ளதைக் கருதி, இரண்டாவது பொருள் பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

  3 - பூனி - விரதமேற்று : இச்சொல்லுக்கு, சரணத்துடன் பொருள் கொள்வதா, அல்லது பல்லவியுடன் இணைத்து பொருள் கொள்வதா, என்று விளங்கவில்லை. ஆயினும், இச்சொல்லுக்கு முன் வரும் 'கானி' சரணத்தினை நிறைவுறச் செய்வதனால், இச்சொல்லை (பூனி) பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டது.

  Top


  Updated on 07 Nov 2009

  4 comments:

  Govindaswamy said...

  திரு கோவிந்தன் அவர்களே
  இப்பாடலில் உள்ள இருசொல் அலங்காரத்தினை நீங்கள் குறிப்பிட்டுக் காட்டினால் பலரும் படித்து, ரசித்து மகிழ்வர். எதுகை, மோனை நயத்தை ரசிக்க சொற்களைப் பிரிக்க வேண்டியுள்ளது. இப்பாடலைப் படித்தபோது தியாகராஜர், கம்பர், அருணகிரிநாதர்களுக்கு இணையானவர் எனத் தோன்றுகிறது.
  ச1- ஜனக ஜாமாதவை 2ஜனகஜா மாதவை என்பது முழுவதும் விளங்கவில்லை.
  ‘வை’ எனும் சொல்லின் ஈறு ‘ஆகி’ அல்லவா?
  ‘மாதவை’ என்பது ‘தாயாகி’ என்று பொருள் தராதா? ’தந்தையே! ஜனகனின் மருமகனாகி ஜானகியின் தாயுமாகி ஏய்த்தது போதும்’ என்று பொருள் கொண்டேன். இது சரியா?
  - கோகலு - கோகல : இவ்விடத்தில் 'கோகலு' பொருந்தும் எனக் கருதுகின்றேன்- லோகுவ என்பது குறைபாடு (shortage). சேலைகளின் குறைபாடு என்று பொருள் தராதா.
  நன்றி
  கோவிந்தசாமி

  V Govindan said...

  திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

  அலங்காரங்களைப் பற்றி, மொழியினை நன்கு கற்றறிந்தவர்களே விமரிசிக்க இயலும். நான் தெலுங்கு மொழி கற்றவனல்ல. அது எனது தாயமொழி என்ற ஒரே காரணத்தினால்தான் தியாகராஜரின் பாடல்களுக்குப் பொருள் எழுதத் துணிந்தேன். எனவே, இதுபற்றி நான் ஏதும் கூறுவதற்கில்லை.

  'வை' என்ற விகுதி, நீங்கள் கூறியபடி 'ஆகியும்' என்ற பொருளிலும், அஃதன்றி, 'ஆவாய்' (assertion) என்ற பொருளிலும் வரலாம். இவ்விடத்தில், 'ஆவாய்' என்ற பொருள்படும்.

  லோகுவ - தெலுங்க அகராதி. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு, 'தலைகுனிவு' என்று பொருளாகும். 'குறைபாடு' என்ற பொருள் இச்சொல்லுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

  வணக்கம்
  கோவிந்தன்.

  Govindaswamy said...

  திரு கோவிந்தன் அவர்களே
  லோகுவ எனும் சொல்லுக்கு ஸ்1ப்3த3ரத்நாகரத்தில் அதீ4னமு, தக்குவ எனும் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  அதீ4னமு –ஆயத்தமு, அக்3க3மு
  அக்3க3மு-அதீ4னமு, கனப3டி3னதி3, த்3Rஷ்டமு
  கோகலு எனும் பொருள் பொருந்தும் என்று கூறியுள்ளீர். கோகலு என்றால் (துணிகள்) சேலைகள் என்றும் கோகல என்றால் சேலைகளின் என்றும் பொருளல்லவா?
  துச்சாத3னன் த்3ரௌபதியின் வஸ்த்ர அபஹரணம் செய்தபோது சேலைகளின் குறைபாடு (தக்குவ) தானே நிகழ்ந்தது
  நன்றி
  கோவிந்தசாமி

  V Govindan said...

  திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

  நீங்கள் கூறியபடியே பார்த்தாலும், 'அதீ4னம்' அல்லது 'தக்குவ' என்பது 'குறைபாடு' என்று பொருளாகாது. அதீ4னம் என்றாலும் தக்குவ என்றாலும் 'தாழ்மை' என்றும் பொருள்.

  'லோகுவ கனி கோகலு இச்சினதி3' என்று அதனை படிக்கவேண்டும்.

  வணக்கம்
  கோவிந்தன்