Monday, November 9, 2009

தியாகராஜ கிருதி - அம்ம த4ர்ம ஸம்வர்த4னி - ராகம் அடா2ணா - Amma Dharmasamvardhani - Raga Athana

பல்லவி
அம்ம த4ர்ம ஸம்வர்த4னியாது3கோவம்ம மா(யம்ம)

அனுபல்லவி
இம்மஹினி நீ ஸரியெவரம்ம ஸி1வுனி கொம்ம மா(யம்ம)

சரணம்
சரணம் 1
1தா4த்ரி4ர நாயக ப்ரிய புத்ரி மத3ன கோடி மஞ்ஜுள
கா3த்ரி அருண 2நீரஜ த3 நேத்ரி நிருபம ஸு14
கா3த்ரி 3பீட2 நிலயே வர ஹஸ்த த்4ரு2த வலயே பரம
பவித்ரி ப4க்த பாலன து4ரந்த4ரி 4வீர ஸ1க்தி நே நம்மினா(னம்ம)


சரணம் 2
அம்ப3 5கம்பு3 கண்டி2 சாரு 6கத3ம்ப33ஹன ஸஞ்சாரிணி
பி3ம்பா347தடித்கோடி நிபா44ரி த3யா வாரி நிதே4
81ம்ப3ராரி வைரி ஹ்ரு2ச்சங்கரி 9கௌமாரி ஸ்வர ஜித
தும்பு3ரு நாரத3 ஸங்கீ3த மாது4ர்யே து3ரித ஹாரிணி மா(யம்ம)


சரணம் 3
4ன்யே 10த்ரயம்ப3கே மூர்த4ன்யே பரம யோகி3 ஹ்ரு23
மான்யே த்யாக3ராஜ குல ஸ1ரண்யே பதித பாவனி
காருண்ய ஸாக3ரி ஸதா3 அபரோக்ஷமு காராதா3 ஸஹ்ய
கன்யா தீர வாஸினி பராத்பரி 11காத்யாயனி ராம ஸோத3ரி மா(யம்ம)


பொருள் - சுருக்கம்
  • எமது தாயே! அறம் வளர்த்த நாயகியே! சிவனின் இல்லாளே!


  • தாயே! மலையரசனின் செல்ல மகளே! மதனர் கோடி எழில் உடலினளே! இளஞ்சிவப்புத் தாமரையிதழ்க் கண்ணினளே! உவமையற்ற, மங்கள உருவினளே! (புனித) பீடங்களிலுறைபவளே! புனித கரங்களில் வளையல் அணிபவளே! முற்றிலும் புனிதமானவளே! தொண்டரைக் காக்கும் சுமையேற்றவளே! வீர சக்தியே!


  • அம்பையே! சங்குக் கழுத்தினளே! அழகிய கதம்ப வனத்தினில் உறைபவளே! கோவை யிதழ்களுடைய, மின்னல்கள் கோடி நிகர் ஒளியினளே! கருணைக் கடலே! காமன் பகைவனின் இதயத்திலுறை சங்கரியே! கௌமாரியே! தும்புரு மற்றும் நாரதரின் இசை இனிமையினை வெல்லும் குரல் உடையவளே! பாவங்களைக் களைபவளே!


  • மங்களமானவளே! முக்கண்ணினளே! தலைசிறந்தவளே! சிறந்த யோகியர் இதயத்தில் மதிக்கப்பெற்றவளே! தியாகராசனின் குலப் புகலே! வீழ்ந்தோரைப் புனிதமாக்குபவளே! கருணைக் கடலே! பொதிகைக் கன்னியின் கரையிலுறைபவளே! பராபரியே! காத்தியாயினியே! இராமனின் சோதரியே!


    • இப்புவியில் உனக்கீடெவரம்மா?

    • நான் (உன்னை) நம்பியுள்ளேனம்மா.

    • ஆதரிப்பாயம்மா.

    • எவ்வமயமும் (எனக்கு) புலப்படலாகாதா?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    அம்ம/ த4ர்ம/ ஸம்வர்த4னி/-ஆது3கோ/-அம்ம/ மா/-(அம்ம)
    தாயே/ அறம்/ வளர்த்த நாயகியே/ ஆதரிப்பாய்/ அம்மா/ எமது/


    அனுபல்லவி
    இம்-மஹினி/ நீ/ ஸரி/-எவரு/-அம்ம/ ஸி1வுனி/ கொம்ம/ மா/-(அம்ம)
    இப்புவியில்/ உனக்கு/ ஈடு/ எவர்/ அம்மா/ சிவனின்/ இல்லாளே/ எமது/ தாயே..


    சரணம்
    சரணம் 1
    தா4த்ரி/ த4ர/ நாயக/ ப்ரிய/ புத்ரி/ மத3ன/ கோடி/ மஞ்ஜுள/
    தாயே/ மலை/ அரசனின்/ செல்ல/ மகளே/ மதனர்/ கோடி/ எழில்/

    கா3த்ரி/ அருண/ நீரஜ/ த3ள/ நேத்ரி/ நிருபம/ ஸு14/
    உடலினளே/ இளஞ்சிவப்பு/ தாமரை/ இதழ்/ கண்ணினளே/ உவமையற்ற/ மங்கள/

    கா3த்ரி/ பீட2/ நிலயே/ வர/ ஹஸ்த/ த்4ரு2த/ வலயே/ பரம/
    உருவினளே/ (புனித) பீடங்களிலுறைபவளே/ புனித/ கரங்களில்/ அணிபவளே/ வளையல்/ முற்றிலும்/

    பவித்ரி/ ப4க்த/ பாலன/ து4ரந்த4ரி/ வீர/ ஸ1க்தி/ நே/ நம்மினானு/-(அம்ம)
    புனிதமானவளே/ தொண்டரை/ காக்கும்/ சுமையேற்றவளே/ வீர/ சக்தியே/ நான்/ (உன்னை) நம்பியுள்ளேன்/


    சரணம் 2
    அம்ப3/ கம்பு3/ கண்டி2/ சாரு/ கத3ம்ப3/ க3ஹன/ ஸஞ்சாரிணி/
    அம்பையே/ சங்கு/ கழுத்தினளே/ அழகிய/ கதம்ப/ வனத்தினில்/ உறைபவளே/

    பி3ம்ப3/-அத4ர/ தடித்/-கோடி/ நிப4/-ஆப4ரி/ த3யா/ வாரி நிதே4/
    கோவை/ இதழ்களுடைய/ மின்னல்கள்/ கோடி/ நிகர்/ ஒளியினளே/ கருணை/ கடலே/

    1ம்ப3ர-அரி/ வைரி/ ஹ்ரு2ச்/-சங்கரி/ கௌமாரி/ ஸ்வர/ ஜித/
    காமன்/ பகைவனின்/ இதயத்தில் (உறை)/ சங்கரியே/ கௌமாரியே/ குரல்/ வெல்லும்/

    தும்பு3ரு/ நாரத3/ ஸங்கீ3த/ மாது4ர்யே/ து3ரித/ ஹாரிணி/ மா/-(அம்ம)
    தும்புரு/ (மற்றும்) நாரதரின்/ இசை/ இனிமையினை/ பாவங்களை/ களைபவளே/ எமது/ தாயே...


    சரணம் 3
    4ன்யே/ த்ரயம்ப3கே/ மூர்த4ன்யே/ பரம/ யோகி3/ ஹ்ரு23ய/
    மங்களமானவளே/ முக்கண்ணினளே/ தலைசிறந்தவளே/ சிறந்த/ யோகியர்/ இதயத்தில்/

    மான்யே/ த்யாக3ராஜ/ குல/ ஸ1ரண்யே/ பதித/ பாவனி/
    மதிக்கப்பெற்றவளே/ தியாகராசனின்/ குல/ புகலே/ வீழ்ந்தோரை/ புனிதமாக்குபவளே/

    காருண்ய/ ஸாக3ரி/ ஸதா3/ அபரோக்ஷமு/ காராதா3/ ஸஹ்ய/
    கருணை/ கடலே/ எவ்வமயமும்/ (எனக்கு) புலப்படல்/ ஆகாதா/ பொதிகை/

    கன்யா/ தீர/ வாஸினி/ பராத்பரி/ காத்யாயனி/ ராம/ ஸோத3ரி/ மா/-(அம்ம)
    கன்னியின்/ கரையில்/ உறைபவளே/ பராபரியே/ காத்தியாயினியே/ இராமனின்/ சோதரியே/ எமது/ தாயே...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    2 - நீரஜ த3 - வாரஜ த3ள.

    Top

    மேற்கோள்கள்
    1 - தா4த்ரி - "பெயரும், உருவமுமான இவ்வுலகத்தின் அடிப்படையும், அனைத்து விதமான அனுபவங்களுக்கு ஆதாரமும், வெளியுலக அனுவங்கள் எனும் படத்திற்கு வெள்ளித்திரையுமான பரம்பொருள்." (தமிழாக்கம்) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (43) 'தா4தா'

    3 - பீட2 நிலயே - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (833) அம்மையின் பெயர் - 'பஞ்சா-ஸ1த்-பீட2 ரூபிணி' - 50 பீடங்களின் வடிவானவள் - இதையே, தீக்ஷிதர், தமது 'பஞ்சா-ஸ1த்-பீட2 ரூபிணி' என்ற கீர்த்தனையிலும் குறிப்பிடுகின்றார்.

    இந்த 50 1க்தி பீட2ங்கள் (1); 1க்தி பீட2ங்கள் (2) சிவனின் மனைவி ஸதியின் உடல் பாகங்களென்றும், மொழியின் 50 ஆதார ஒலி வடிவங்களென்றும் கூறப்படும்.

    Top

    4 - வீர ஸ1க்தி - 'கௌளம்' மற்றும் 'சாக்தம்' எனப்படும் 'சக்தி வழிபாட்டு முறை'யில், 'வீர சக்தி' என்பதற்குத் தனிப்பட்ட பொருளுண்டு. தியாகராஜர், 'வீர' என்ற சொல்லினைப் பொதுவாக பயன்படுத்தியுள்ளாரா அல்லது சாக்தத்தின் சிறப்புச் சொல்லாகவா என்பது விளங்கவில்லை. சக்தியும் சாக்தமும்

    4 - 1க்தி - எட்டு சக்திகள் - இந்திராணி, வைஷ்ணவி, சாந்தா, பிரம்மாணி, கௌமாரி, நாரஸிம்ஹி, வாராஹி, மாஹேஸ்வரி.

    6 - கத3ம்ப33ஹன ஸஞ்சாரிணி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர், 'கத3ம்ப3 வன வாஸினி' (60) - மதுரையம்பதி, கதம்ப வனம் எனப்படும். கதம்ப மரம் அங்கு தல விருக்கமாகும்.

    Top

    8 - 1ம்ப3ராரி வைரி - சிவன் - 'ஸம்பரன்' என்ற அரக்கனை, காமனின் மறு பிறப்பென கருதப்படும், கண்ணன் - ருக்மிணியின் மகனான, 'பிரத்யும்நன்' கொன்றான். எனவே காமன், ஸம்பரனின் எதிரியாகும். சிவன், காமனின் எதிரியாகும். பிரத்யும்நனின் கதையினை பாகவத புராணத்தில் (10-வது புத்தகம், 55-வது அத்தியாயம்) நோக்கவும்.

    9 - கௌமாரி - குமரனின் சக்திக்கு கௌமாரி என்று பெயராகும். மேற்கூறிய எட்டு சக்திகளில் ஒன்று.

    10 - த்ரயம்ப3கே - முக்கண்ணினள் - த்ரி லோசனி - லலிதா ஸஹஸ்ர நாமம் (477). சிவனுக்கும், விஷ்ணு அவதாரமான, நரசிங்கத்திற்கும் முக்கண்கள் உள்ளதனால் 'த்ரயம்பக' என்று அழைக்கப்படுவர். சிவனின் த்ரயம்பகேஸ்வர அம்பதி 'கோதாவரி' நதி பிறக்கும் 'நாஸிக்' என்ற இடத்தில் உள்ளது.

    11 - காத்யாயனி - லலிதா ஸஹஸ்ர நாமம் (556) - "அனைத்து தேவதைகளின் ஒருமித்த சுடரொளி" எனப்பொருளாகும். (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்).

    தேவி புராணத்தில் காத்யாயனி என்ற சொல்லின் விளக்கம் நோக்கவும்.

    Top

    விளக்கம்
    5 - கம்பு3 கண்டி2 - சங்குக் கழுத்தினள் - மூன்று வரிகளுள்ள கழுத்து

    7 - தடித் - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு 'மின்னல்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஸம்ஸ்கிருத அகராதியின்படி, மின்னலுக்கு, 'தடி3த்' என்பது சொல்லாகும். ஆனால், தெலுங்கு அகராதியின்படி, மின்னலுக்கு, 'தடித்' என்பதே ஸம்ஸ்கிருதச் சொல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'தடில்லதா ஸமருசி:' - 'மின்னற் கொடி போன்ற காந்தியுடையவள்' என்று பெயராகும்.

    அறம் வளர்த்த நாயகி - (த4ர்மஸம்வர்த4னி) - திருவையாற்றில் அம்மையின் பெயர்.

    பொதிகைக் கன்னி - காவிரி

    Top


    Updated on 09 Nov 2009

    No comments: