Saturday, September 19, 2009

தியாகராஜ கிருதி - ரமா ரமண ராரா - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Ramaa Ramana Raaraa - Raga Sankarabharanam

பல்லவி
1ரமா ரமண ராரா ஓ (ரமா)

சரணம்
சரணம் 1
ஸமானமெவரு வினுமா நா மனவினி
2தமாஸு பொக33 தரமாஹி பதிகினி (ரமா)


சரணம் 2
பு3தா4த்3யவன த31ரதா2ர்ப43மனோ-
ரத2ம்பொ3ஸகு3
4ஸும ரதா2ர்ஹ ஸத்3கு3ண (ரமா)


சரணம் 3
5கலார்த2 பூ4ஷ ஸகலார்த2114
கலா த4ர நுத விகலார்தி 6ஸம்ஹார (ரமா)


சரணம் 4
ரணாதி4 ஸூ1ர ஸ1ரணாக3
7த்வச்சரணம்4வ தாரணம்பு3 சேஸுனு (ரமா)


சரணம் 5
முகா2ப்3ஜமுனு 81த முகா2ரி ஜூபு
ஸமுகா2ன கொலுது 9து3ர்முகா2ஸுர ஹரண (ரமா)


சரணம் 6
பி3ரான ப்3ரோவக3 ராதா3 ஸ்ரீமத33
ராஜ த4ர த்யாக3ராஜ ஸன்னுத (ரமா)


பொருள் - சுருக்கம்
 • ஓ இரமை மணாளா!

 • அறிஞர் ஆகியோரைக் காப்போனே! தசரதன் மைந்தா! விரும்பியதையளிக்கும் மலர்த் தேருக்குத் தக்கோனே! நற்குணத்தோனே!

 • கலை, செல்வம் அணிவோனே! அனைத்து உட்பொருளே! முயலுடையோன் பிறையணிவோனால் போற்றப் பெற்றோனே! அநாதைகள் துயர் களைவோனே!

 • களத்தில் சூராதிசூரனே!

 • பன்முகத்தோன் பகைவனே! அரக்கன் துர்முகனை வதைத்தோனே!

 • உயர் மலை அரசனைச் சுமந்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • நிகர் யார் (உனக்கு)?

  • தமது பெருமையைப் புகழத் தரமா அரவரசனுக்கும்?

  • சரணடைந்தோரை உமது திருவடிகள் பிறவிக்கடலைத் தாண்டுவிக்குமே;

  • வாராய்;

  • கேளாய் எனது விண்ணப்பத்தினை;

  • முகத் தாமரையினைக் காட்டுவாய்;

  • உனது சமுகத்தில் சேவை செய்வேன்;


  • விரைவில் காக்க லாகாதா?  பதம் பிரித்தல் - பொருள்
  பல்லவி
  ரமா/ ரமண/ ராரா/ ஓ/ (ரமா)
  இரமை/ மணாளா/ வாராய்/ ஓ/


  சரணம்
  சரணம் 1
  ஸமானமு/-எவரு/ வினுமா/ நா/ மனவினி/
  நிகர்/ யார் (உனக்கு)/ கேளாய்/ எனது/ விண்ணப்பத்தினை/

  தம/-ஆஸு/ பொக33/ தரமா/-அஹி/ பதிகினி/ (ரமா)
  தமது/ பெருமையை/ புகழ/ தரமா/ அரவு/ அரசனுக்கும்/


  சரணம் 2
  பு34/-ஆதி3/-அவன/ த31ரத2/-அர்ப4க/
  அறிஞர்/ ஆகியோரை/ காப்போனே/ தசரதன்/ மைந்தா/

  மனோரத2ம்பு3/-ஒஸகு3/ ஸும/ ரத2/-அர்ஹ/ ஸத்3-கு3ண/ (ரமா)
  விரும்பியதை/ அளிக்கும்/ மலர்/ தேருக்கு/ தக்கோனே/ நற்குணத்தோனே/


  சரணம் 3
  கலா/-அர்த2/ பூ4ஷ/ ஸகல/-அர்த2/ ஸ11/ த4ர/
  கலை/ செல்வம் (பொருட்கள்)/ அணிவோனே/ அனைத்து/ உட்பொருளே/ முயல்/ உடையோன்/

  கலா/ த4ர/ நுத/ விகல/-ஆர்தி/ ஸம்ஹார/ (ரமா)
  பிறை/ அணிவோனால்/ போற்றப் பெற்றோனே/ அநாதைகள்/ துயர்/ களைவோனே/


  சரணம் 4
  ரண/-அதி4 ஸூ1ர/ ஸ1ரண/-ஆக3த/ த்வத்/-
  களத்தில்/ சூராதிசூரனே/ சரண்/ அடைந்தோரை/ உமது/

  சரணம்/ ப4வ/ தாரணம்பு3 சேஸுனு/ (ரமா)
  திருவடிகள்/ பிறவிக்கடலை/ தாண்டுவிக்குமே/


  சரணம் 5
  முக2/-அப்3ஜமுனு/ ஸ1த/ முக2/-அரி/ ஜூபு/
  முக/ தாமரையினை/ பன் (நூறு)/ முகத்தோன்/ பகைவனே/ காட்டுவாய்/

  ஸமுகா2ன/ கொலுது/ து3ர்முக2/-அஸுர/ ஹரண/ (ரமா)
  உனது/ சமுகத்தில்/ சேவை செய்வேன்/ துர்முகன்/ அரக்கனை/ வதைத்தோனே/


  சரணம் 6
  பி3ரான/ ப்3ரோவக3 ராதா3/ ஸ்ரீமத்/-அக3/
  விரைவில்/ காக்க லாகாதா/ உயர்/ மலை/

  ராஜ/ த4ர/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ரமா)
  அரசனை/ சுமந்தோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


  குறிப்புக்கள் - (Notes)
  வேறுபாடுகள் - (Pathanthara)
  சில புத்தகங்களில் சரணங்கள் 3, 4 மற்றும் 5 - மாற்றி 4, 5 மற்றும் 3 என்று கொடுக்கப்பட்டுள்ளன.

  1 - ரமா ரமண ராரா ஓ - ரமா ரமண ராரா ஓ ரமா ரமண ராரா.

  2 - தமாஸு - தமாமு : 'தமாமு' என்ற சொல்லுக்கு இவ்விடத்தில் பொருளேதுமில்லை. 'தமாஸு' என்ற சொல்லைத் 'தம+ஆஸு' என்று பிரிக்கலாம். இச்சொல்லுக்கு, புத்தகங்களில் 'தமது பெருமை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கு சொல், 'அஸமு', ஸம்ஸ்கிருத சொல் 'யஸ1ஸ்' என்ற சொல்லின் திரிபாகும். இச்சொல்லுக்கு, 'புகழ்', 'பெருமை' என்று பொருள். ஆனால், அங்ஙனம் பொருள் கொள்ள, 'தம அஸமு' (தமாஸமு) என்றிருக்கவேண்டும். ஆனால், கொடுக்கப்பட்டிருப்பதோ 'தம ஆஸு' (தமாஸூ) என. 'தம அஸமு' என்ற சொல் 'தம ஆஸு' என்று திரியாது. எனவே இச்சொல் 'தமாஸமு' (தம அஸமு) என இருக்கலாம்.

  5 - கலார்த2 - கலார்த4 : 'கலார்த4' என்ற சொல்லுக்கு, இவ்விடத்தில் பொருளேதுமில்லை. 'கலார்த2' என்ற சொல்லினை 'கலா அர்த2' என்று பிரிக்கலாம். ஆயினும் இச்சொல்லின் சரியான பொருள் என்ன என்பது விளங்கவில்லை.

  6 - ஸம்ஹார - ஸம்ஹர.

  7 - த்வச்சரணம் - ஆத்ம சரணம். இவ்விடத்தில் த்வச்சரணம் சரியான சொல்லாகும்.

  Top

  மேற்கோள்கள்
  4 - ஸும ரதா2ர்ஹ - மலர்த் தேருக்குத் தக்கோன் - ராமாயணத்தின் உத்தர காண்டத்தினில் (அத்தியாயம் 41) குபேரன், இராமன் பொருட்டு, புட்பக விமானத்தினை அனுப்பி வைக்கின்றான். ஆனால், இராமன், அந்த விமானத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, 'தான் வேண்டும் போழ்து வந்தால் போதும்' என்று குபேரனுக்குத் திரும்ப அனுப்பிவிடுகின்றான்.

  9 - து3ர்முகா2ஸுர - இராவணன் படையில் ஒர் அரக்கன்.

  ராமன் 'மஹி ராவணன்' எனப்படும் 'மயில் ராவணனை' வதைத்த கதை.

  Top

  விளக்கம்
  3 - மனோ-ரத2ம்பொ3ஸகு3 - விரும்பியதை அளிக்கும் - இதனை 'புட்பக விமானத்தின்' அடைமொழியாகவோ, அல்லது இராமனின் அடைமொழியாகவோ கொள்ளலாம்.

  8 - 1த முகா2ரி - நூறு தலையனின் எதிரி. தியாகராஜர் தன்னுடைய 'தே3ஹி தவ பத3' என்ற ஸ1ஹான ராகப் பாடலில், சீதையினை, 'ஸ1த முக2 மத33மனே' என்று அழைக்கின்றார். இதற்கு, 'ராவணனின் செருக்கினை அழித்தவள்' என்று பொருளாகும். அதனைக் கருத்திற் கொண்டு, இங்கும், இச்சொல் 'இராவணன்' என்று மொழி பெயர்க்கப்பட்டது.

  சில புத்தகங்களில், 'ஸ1த முக2' என்ற சொல்லுக்கு 'மஹி ராவணன்' எனப்படும் நூறு தலையுடைய 'மயில் ராவணனை'க் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மயில் ராவணனையும் ராமனே கொன்றான்.

  Top

  இரமை - இலக்குமி
  அரவரசன் - சேடன்
  மலர்த் தேர் - புட்பக விமானம்.
  கலை, செல்வம் - 'கலைகளும் அதன் பொருட்களும்' என்றும் கொள்ளலாம்.
  முயலுடையோன் - மதி
  முயலுடையோன் பிறையணிவோன் - சிவன்
  பன்முகத்தோன் - இராவணன்
  மலையரசன் - மந்தர மலை

  Top


  Updated on 19 Sep 2009

  No comments: