Wednesday, August 12, 2009

தியாகராஜ கிருதி - ரமிஞ்சுவாரெவருரா - ராகம் ஸுபோஷிணி - Raminchuvaarevaruraa - Raga Suposhini

பல்லவி
ரமிஞ்சுவாரெவருரா ரகூ4த்தமா நினு வினா

அனுபல்லவி
11மாதி3 ஷட்3கு33ணா ஸகல பு4வன ஜனுலலோ (ரமி)

சரணம்
2ராமயனே ஸு-மர்மமு 3ரமயனே ஸ1ர்மமு
லஸத3மர வருலகப்3பெ3னோ த்யாக3ராஜ ஸன்னுத (ரமி)


பொருள் - சுருக்கம்
இரகு (குல) உத்தமா! சமம் முதலான அறு குணங்களோனே! தியாகராசனால் சிறக்க போற்றப் பெற்றோனே!
  • அனைத்துலக மக்களிலும் களிப்புறுபவர் எவரய்யா, நீயின்றி?

  • 'ராம'யெனும் (பெயரின்) உட்பொருளும், 'ரம'யெனும் களிப்பும், திகழும் வானுலகோருக்கும் அடையப்பெற்றதோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரமிஞ்சுவாரு/-எவருரா/ ரகு4/-உத்தமா/ நினு/ வினா/
களிப்புறுபவர்/ எவரய்யா/ இரகு (குல)/ உத்தமா/ நீ/ இன்றி/


அனுபல்லவி
1ம/-ஆதி3/ ஷட்3/-கு3ண க3ணா/ ஸகல/ பு4வன/ ஜனுலலோ/ (ரமி)
சமம்/ முதலான/ அறு/ குணங்களோனே/ அனைத்து/ உலக/ மக்களிலும்/ களிப்புறுபவர்...


சரணம்
ராம/-அனே/ ஸு-மர்மமு/ ரம/-அனே/ ஸ1ர்மமு/ லஸத்/-
'ராம'/ எனும் (பெயரின்)/ உட்பொருளும்/ 'ரம'/ எனும்/ களிப்பும்/ திகழும்/

அமர வருலகு/-அப்3பெ3னோ/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ரமி)
வானுலகோருக்கும்/ அடையப்பெற்றதோ/ தியாகராசனால்/ சிறக்க போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ராமயனே ஸு-மர்மமு ரமயனே ஸ1ர்மமு - ரம்யனே ஸ1ர்மமு ராமயனே ஸு-மர்மமு

Top

மேற்கோள்கள்
1 - 1மாதி3 ஷட்3கு3 - ஸ1ம முதலான அறு குணங்கள் - ஸ1ம, த3ம, திதிக்ஷ, சமாதா4ன, உபரதி, ஸ்1ரத்34 - ஆதி சங்கரரின் 'விவேக சூடாமணி'யில் (செய்யுள் 19) இவற்றினை 'ஸ1மாதி3 ஷட்க ஸம்பத்தி' என்று கூறப்பட்டுள்ளது.

வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 19 (செய்யுள் 20)-ல் ராமன் கைகேயியிடம் கூறுவது -

"தேவி! நான் இந்த உலகத்தில் பொருளாசைக்கு அடிமையாக வாழ விரும்பவில்லை; இருடிகளுக்குச் சமமாக தூய அறநெறி நிறபவன் என்பதை அறிவீராக."

2 - ராமயனே ஸு-மர்மமு - 'ராம' யெனும் பெயரின் உட்பொருள் - 'ரா' - 'ஓம் நமோ நாராயண' என்ற திருமந்திரத்தின் உயிராகும்; 'ம' - 'ஓம் நமச்சிவாய' என்ற திருமந்திரத்தின் உயிராகும்; சைவம் வைணவம் இரண்டினையும் இணைப்பது 'ராம'; இது குறித்து காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்கவும்.

Top

3 - ரமயனே ஸ1ர்மமு - 'ரம' எனும் வடசொல்லுக்குக் களிப்பென்று பொருள். 'ரம'யெனும் களிப்பு - 'ராம'யெனும் பெயரின் உட் பொருளினை அறிவதனாலான களிப்பு. பத்ம புராணத்தில் கூறப்படுவதாவது - எவனுடைய நினைவில் யோகியர் பரமானந்தத்தினில் திளைக்கின்றனரோ, அந்தப் பெயர்தான் 'ராம' - இது குறித்து காஞ்சி மாமுனிவரின் மேற்கூறிய விளக்கம் நோக்கவும்.

வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 17 (செய்யுள் 14)-ல் கூறப்படுவது -

"எவன் ராமனைக் காணவில்லையோ, எவனை ராமன் நோக்கவில்லையோ, அவன் அனைத்து மக்களின் நோக்கத்திலும் இழிந்தவனாவான்; தன்னுடைய ஆன்மாவே அவனை நிந்திக்கும்."

Top

விளக்கம்



Updated on 12 Aug 2009

1 comment:

S.Natarajan said...

dear sir,

I am very glad to have stumbled upon your blog. Great service to transliteration scheme
usage. Moreover the meaning as well as comments are highly valuable.
I wish everyone who puts in texts in Indian languages will first use a scheme and then give the text. Wish you long life to continue your service. Natarajan