Sunday, August 16, 2009

தியாகராஜ கிருதி - நன்னு கன்ன தல்லி - ராகம் கேஸரி - ஸிந்து4 கன்னட3 - Nannu Kanna Talli - Raga Kesari - Sindhu Kannada

பல்லவி
1நன்னு கன்ன தல்லி நா பா4க்3யமா
நாராயணி 24ர்மாம்பி3கே

அனுபல்லவி
3கனகாங்கி3 ரமா பதி ஸோத3ரி
காவவே 4நனு 5காத்யாயனி (நன்னு)

சரணம்
காவு காவுமனி நே மொர பெட்டகா3
கமல லோசனி கரகு3சுண்ட3கா3
நீவு ப்3ரோவகுண்டே எவரு ப்3ரோதுரு
ஸதா3 வரம்பொ3ஸகு3 த்யாக3ராஜ நுதே (நன்னு)


பொருள் - சுருக்கம்
என்னையீன்ற தாயே, எனது பேறே, நாராயணி, அறம்வளர்த்த நாயகியே! பொன்னங்கத்தினள் இரமை மணாளனின் சோதரியே! காத்தியாயனியே! கமலக் கண்ணியே! என்றும் வரமருளும், தியாகராசனால் போற்றப் பெற்ற என்னையீன்ற தாயே!
  • காப்பாயம்மா என்னை;

  • காப்பாய், காப்பாயென நான் முறையிட, (நான்) உருகிக் கொண்டிருக்க, நீ காவாதிருந்தால், யார் காப்பரோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நன்னு/ கன்ன/ தல்லி/ நா/ பா4க்3யமா/
என்னை/ ஈன்ற/ தாயே/ எனது/ பேறே/

நாராயணி/ த4ர்மாம்பி3கே/
நாராயணி/ அறம்வளர்த்த நாயகியே/


அனுபல்லவி
கனக/-அங்கி3/ ரமா/ பதி/ ஸோத3ரி/
பொன்/ அங்கத்தினள்/ இரமை/ மணாளனின்/ சோதரியே/

காவவே/ நனு/ காத்யாயனி/ (நன்னு)
காப்பாயம்மா/ என்னை/ காத்தியாயனியே/


சரணம்
காவு/ காவுமு/-அனி/ நே/ மொர/ பெட்டகா3/
காப்பாய்/ காப்பாய்/ என/ நான்/ முறை/ இட,

கமல/ லோசனி/ கரகு3சு/-உண்ட3கா3/
கமல/ கண்ணியே/ (நான்) உருகிக் கொண்டு/ இருக்க/

நீவு/ ப்3ரோவக/-உண்டே/ எவரு/ ப்3ரோதுரு/
நீ/ காவாது/ இருந்தால்/ யார்/ காப்பரோ/

ஸதா3/ வரம்பு3/-ஒஸகு3/ த்யாக3ராஜ/ நுதே/ (நன்னு)
என்றும்/ வரம்/ அருளும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ என்னையீன்ற தாயே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'சிந்து கன்னட' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1 - நன்னு - நனு.

4 - நனு - நன்னு.

Top

மேற்கோள்கள்
5 - காத்யாயனி - லலிதா மஹா த்ரிபுர ஸுந்தரியின் பெயர்களிலொன்று - 'அனைத்து தேவதைகளின் ஒளியின் ஒருமித்த வடிவினள்' என இச்சொல்லுக்குப் பொருள். லலிதா ஸஹஸ்ர நாமம் (556) - ஸ்வாமி தபஸ்யானந்தாவின் மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.

Top

விளக்கம்
2 - 4ர்மாம்பி3கா - அறம்வளர்த்த நாயகி - திருவையாற்றில் பார்வதியின் பெயர்

3 - கனகாங்கி3 ரமா பதி ஸோத3ரி - பொன்னங்கத்தினள் இரமை மணாளனின் சோதரியே! - 'பொன்னங்கத்தினளே! இரமை மணாளனின் சோதரியே!' என்றும் கொள்ளலாம்.

இரமை மணாளன் - அரி

Top


Updateed on 16 Aug 2009

No comments: