Sunday, July 26, 2009

தியாகராஜ கிருதி - நீ த3யசே ராம - ராகம் யது3குல காம்போ4ஜி - Nee Dayache Rama - Raga Yadukula Kambhoji

பல்லவி
நீ த3யசே ராம நித்யானந்து3டை3தி

அனுபல்லவி
1நாத3 ப்3ரஹ்மானந்த3 ரஸாக்ரு2தி க3ல (நீ)

சரணம்
வர ம்ரு2து3 பா4ஷ ஸு-ஸ்வர மய பூ4
வர த்யாக3ராஜ வாக்3-சேலாவ்ரு2த (நீ)


பொருள் - சுருக்கம்
  • நாதப் பேரானந்தச் சாற்றின் வடிவுடைய இராமா!

  • உயரிய இன்சொல்லோனே! இனிய சுர மயமான அணிகலன்களோனே!

  • உயரிய தியாகராசனின் சொல்லெனும் உடையணிவோனே!


    • உனது தயையினால், அழிவற்ற ஆனந்த முடைத்தாகினேன்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ த3யசே/ ராம/ நித்ய/-ஆனந்து3டு3/-ஐதி/
உனது/ தயையினால்/ இராமா/ அழிவற்ற/ ஆனந்த முடைத்தோன்/ ஆகினேன்/


அனுபல்லவி
நாத3/ ப்3ரஹ்ம-ஆனந்த3/ ரஸ/-ஆக்ரு2தி/ க3ல/ (நீ)
நாத/ பேரானந்த/ சாற்றின்/ வடிவு/ உடைய/ உனது...


சரணம்
வர/ ம்ரு2து3/ பா4ஷ/ ஸு/-ஸ்வர/ மய/ பூ4ஷ/
உயரிய/ இன்/ சொல்லோனே/ இனிய/ சுர/ மயமான/ அணிகலன்களோனே/

வர/ த்யாக3ராஜ/ வாக்3/-சேல/-ஆவ்ரு2த/ (நீ)
உயரிய/ தியாகராசனின்/ சொல்லெனும்/ உடை/ அணிவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - நாத3 ப்3ரஹ்ம - திருமூலரின் 'திருமந்திரம்' - 'சிவானந்தக் கூத்து’ (செய்யுள் 2724 to 2803) நோக்கவும்

Top

விளக்கம்
நாதப் பேரானந்தச் சாற்றின் வடிவுடைய - 'நாத பிரமமெனும் ஆனந்த சாற்றின் வடிவுடைய' என்றோ 'நாத பிரமமே! ஆனந்தச் சாற்றின் வடிவுடைய' என்றோ பொருள் கொள்ளலாம்.

சுரம் - இசையின் ஏழு சுரங்கள்

உயரிய - இறைவனைக் குறிக்கும்

Top


Updated on 26 Jul 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
“நாதப் பேரானந்தச் சாற்றின் வடிவுடை இராமா!” – வடிவுடைய என்பது இன்னும் தெளிவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
“நாத/ பேரானந்த/ சாற்றின்/ வடிவு/ உடை/ உனது” - உடை என்பதை உடுப்பு என்று தவறாகச் சிலர் பெருள் கொள்ளக்கூடும்.
வணக்கம்
கோவிந்தஸ்வாமி

V Govindan said...

திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
தாங்கள் பரிந்துரைத்தபடியே மாற்றியெழுதிவிட்டேன்.
பரிந்துரைக்கு நன்றி,
வணக்கம்,
கோவிந்தன்.