Wednesday, June 10, 2009

தியாகராஜ கிருதி - கொனியாடே3 - ராகம் கோகில த்4வனி - Koniyaade - Raga Kokila Dhvani

பல்லவி
1கொனியாடே3 நாயெட3 23ய வெலகு-
கொனியாடே3வு
ஸுமீ ராம நினு (கொனி)

அனுபல்லவி
அனயமு நீ ஸொக3ஸுனு கனி பொங்கு3சு-
3னந்தரங்க3முனனதி ப்ரேமதோ நினு (கொனி)

சரணம்
விந்த விந்த 4மதமுலலோ ஜொரப3டி3
வெத ஜெந்த33 லேட3னு நீ மனஸுன-
கிந்த தெலிஸி த்யாக3ராஜ ஸன்னுத
ஏ வேளனு நீ ஸு14 சரிதமுனு (கொனி)


பொருள் - சுருக்கம்
இராமா தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • உன்னைப் போற்றும் என்னிடம் தயையினை விலைக்குப் பேசுகின்றாயன்றோ?

  • இடையறாது, உனது சிறப்பினைக் கண்டு, பெருமிதத்துடன், உள்ளத்தினில் மிக்கு காதலுடன், உன்னைப் போற்றும் என்னிடம் தயையினை விலைக்குப் பேசுகின்றாயன்றோ?

    • விந்தை விந்தையான கோட்பாடுகளில் ஈடுபட்டு துயரடைந்திலன்;

    • உனது மனதுக்கு இவ்வளவு தெரிந்தும்,

  • எவ்வேளையும் உனது மங்களமான சரிதத்தினைப் போற்றும் என்னிடம் தயையினை விலைக்குப் பேசுகின்றாயன்றோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கொனியாடே3/ நாயெட3/ த3ய/ வெலகு/-
போற்றும்/ என்னிடம்/ தயையினை/ விலைக்கு/

கொனியாடே3வு/ ஸுமீ/ ராம/ நினு/ (கொனி)
பேசுகின்றாய்/ அன்றோ/ இராமா/ உன்னை/


அனுபல்லவி
அனயமு/ நீ/ ஸொக3ஸுனு/ கனி/ பொங்கு3சுனு/-
இடையறாது/ உனது/ சிறப்பினை/ கண்டு/ பெருமிதத்துடன்/

அந்தரங்க3முனனு/-அதி/ ப்ரேமதோ/ நினு/ (கொனி)
உள்ளத்தினில்/ மிக்கு/ காதலுடன்/ உன்னை/ போற்றும்...


சரணம்
விந்த/ விந்த/ மதமுலலோ/ ஜொரப3டி3/
விந்தை/ விந்தையான/ கோட்பாடுகளில்/ ஈடுபட்டு/

வெத/ ஜெந்த33 லேட3னு/ நீ/ மனஸுனகு/-
துயர்/ அடைந்திலன்/ உனது/ மனதுக்கு/

இந்த/ தெலிஸி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/
இவ்வளவு/ தெரிந்தும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/

ஏ வேளனு/ நீ/ ஸு14/ சரிதமுனு/ (கொனி)
எவ்வேளையும்/ உனது/ மங்களமான/ சரிதத்தினை/ போற்றும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கொனியாடே3 - கொனியாடெ3டு3.

2 - வெலகு-கொனியாடே3வு - வெலகு-கொனியாடெ33வு.

3 - அந்தரங்க3முன - அந்தரமுன.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - 3ய வெலகு-கொனியாடே3வு - தயையினை விலைக்குப் பேசுகின்றாய் - இச்சொற்களினால், தியாகராஜர், என்ன சொல்லவிரும்புகின்றாரென சரிவரத் தெரியவில்லை. இப்பாடல் இயற்றப்பெற்ற சூழ்நிலை (context) தெரிந்தாலொழிய, இச்சொற்களுக்கு சரியான பொருள் கூறுதல் கடினம்.

4 - மதமுலலோ - பொதுவாக, தியாகராஜர், இச்சொல்லினால், சைவம், வைணவம், சாக்தம் (தேவி), கௌமாரம் (முருகன்), காணபத்யம் (விநாயகர்), ஸௌரம் (சூரியன்) ஆகிய ஆறு தெய்வ வழிபாட்டு முறைகளைக் குறிப்பதனைக் காணலாம். ஆனால், இதற்கு முன் வரும், 'விந்தை விந்தையான' மற்றும் பின் வரும் 'துயரடைந்திலன்' என்ற சொற்களினால், அவர், இந்த ஆறு மதங்களைக் குறிப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இவ்வாறு மதங்களுக்கும், பக்தி பொதுவானதாகும். எனவே, தியாகராஜர், பக்தியல்லாத மற்ற, இறைவனை அணுகு முறைகளைக் குறிக்கலாம். அனேகமாக, இவை, சாக்தத்தினில் உள்ள 'வாம' அல்லது 'கௌல மார்க்கம்' எனப்படும் வழிமுறைகளைக் குறிக்கலாம்

Top


Updated on 10 Jun 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
ஜெந்த3க3 லேட3னு நீ மனஸுன- கிந்த தெலிஸி என்பதற்கு ’துயரடைந்திலன்; உனது மனதுக்கு இவ்வளவு தெரிந்தும்’ என்று பொருள் தந்துள்ளீர்.
ஜெந்த3க3 லேட3னு என்பதற்கு துயரடைந்திலன் என்று என்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'லேட3னு' என்பதனை, நீங்கள் 'லேடு3'+'அனு' என்று பிரிப்பதாகத் தோன்றுகின்றது. 'அனு' என்பதற்கு 'எனும்' எனப் பொருளாகும். இவ்விடத்தில் 'அனி' (என) என்றிருந்தால்தான் பொருந்தும். எனவே 'லேட3னு' என்பதற்கு முழுச் சொல்லாகத்தான் பொருள் கொள்ள இயலும் என்று நான் கருதுகின்றேன்.

வணக்கம்,
கோவிந்தன்.