Saturday, April 25, 2009

தியாகராஜ கிருதி - ஸுஜன ஜீவன - ராகம் கமாஸ் - Sujana Jeevana - Raga Kamas

பல்லவி
ஸுஜன ஜீவன ராம ஸுகு31பூ4ஷண ராம

அனுபல்லவி
பு4ஜக3 பூ4ஷணார்சித பு34 2ஜனாவனாத்மஜ
வந்தி3
ஸ்1ரித 3சந்த3 431 துரங்க3 மாமவ (ஸுஜன)

சரணம்
5சாரு நேத்ர ஸ்ரீ களத்ர ஸ்ரீ ரம்ய கா3த்ர
தாரக நாம ஸு-சரித்ர த31ரத2 புத்ர
தாரகாதி4பானன 64ர்ம பாலக
தாரய ரகு4வர நிர்மல த்யாக3ராஜ ஸன்னுத (ஸுஜன)


பொருள் - சுருக்கம்
  • நல்லோரின் வாழ்வே, இராமா! நற்குணங்களையணிவோனே, இராமா!

  • அரவணிவோனால் தொழப்பெற்றோனே! அறிஞர்களைக் காப்போனே! தான்தோன்றியால் வந்திக்கப் பெற்றோனே! அண்டியோருக்கு வேண்டியதருள்வோனே! இக்குவாகு குலத்தோனே!

  • அழகிய கண்களோனே! மா மணாளா! இலக்குமி விரும்பும் உடலோனே! தாரக நாமத்தோனே! நன்னடைத்தையோனே! தசரதன் மைந்தா! மதி வதனத்தோனே! அறங்காப்போனே! இரகுவரா! களங்கமற்றோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • என்னைக் காப்பாய்.

    • (பிறவிக் கடலினைக்) கடத்துவிப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுஜன/ ஜீவன/ ராம/ ஸுகு3ண/ பூ4ஷண/ ராம/
நல்லோரின்/ வாழ்வே/ இராமா/ நற்குணங்களை/ யணிவோனே/ இராமா/


அனுபல்லவி
பு4ஜக3/ பூ4ஷண/-அர்சித/ பு34 ஜன/-அவன/-ஆத்மஜ/
அரவு/ அணிவோனால்/ தொழப்பெற்றோனே/ அறிஞர்களை/ காப்போனே/ தான்தோன்றியால்/

வந்தி3த/ ஸ்1ரித/ சந்த3ன/ த31 துரங்க3/ மாம்/-அவ/ (ஸுஜன)
வந்திக்கப் பெற்றோனே/ அண்டியோருக்கு/ வேண்டியதருள்வோனே/ இக்குவாகு குலத்தோனே/ என்னை/ காப்பாய்/


சரணம்
சாரு/ நேத்ர/ ஸ்ரீ/ களத்ர/ ஸ்ரீ/ ரம்ய/ கா3த்ர/
அழகிய/ கண்களோனே/ மா/ மணாளா/ இலக்குமி/ விரும்பும்/ உடலோனே/

தாரக/ நாம/ ஸு-சரித்ர/ த31ரத2/ புத்ர/
தாரக/ நாமத்தோனே/ நன்னடைத்தையோனே/ தசரதன்/ மைந்தா/

தாரக/-அதி4ப/-ஆனன/ த4ர்ம/ பாலக/
தாரைகளின்/ அதிபன் (மதி)/ வதனத்தோனே/ அறம்/ காப்போனே/

தாரய/ ரகு4வர/ நிர்மல/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஸுஜன)
கடத்துவிப்பாய்/ இரகுவரா/ களங்கமற்றோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூ4ஷண ராம - பூ4ஷண.

2 - ஆத்மஜ வந்தி3 - அஜ வந்தி3த : சில புத்தகங்களில், 'ஆத்மஜ' என்ற சொல்லுக்கு 'பிரமன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஆத்மஜ' தனியாக நிற்கையில், அதற்கு 'காமன்' என்று பொருளாகும். ஆனால், இவ்விடத்தில் 'காமன்' என்ற பொருள் பொருந்தாது. பிரமனுக்கு, 'ஆத்ம-பூ4' (தான்தோன்றி) என்று பெயராகும். எனவே 'ஆத்ம-பூ4' என்ற சொல்லை, தியாகராஜர் 'ஆத்மஜ' என்று மாற்றி பயன்படுத்தியிருக்கலாம்.

6 - 4ர்ம பாலக - த4ர்ம பாலன.

Top

மேற்கோள்கள்
6 - 4ர்ம பாலக - அறங்காப்போன். இராமன் இலக்குவனுக்குக் கூறுவது -

"அறமே இவ்வுலகத்தில், அனைத்தினும் உயர்ந்தது. மெய்ம்மை அறத்தினில் நிலைபெறும். என்னுடை தந்தையின் இந்த ஆணை உத்தமமானதாகும். ஏனெனில் அஃது அறத்தினைத் தழுவியதாகும். தந்தைக்கும், தாய்க்கும், அந்தணனுக்கும் 'செய்வேன்' என்று வாக்களித்தபின், அறநெறி நிற்பவன், அதனை பொய்யாக்கலாகாது."

வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 21 (செய்யுள் 40,41) நோக்கவும்.

Top

விளக்கம்
3 - சந்த3 - பொதுவாக, இச்சொல்லுக்கு 'சிறந்த' என்று பொருளாகும். ஆனால், இதற்குமுன் வரும் 'ஸ்1ரித' (அண்டியோர்) என்ற சொல்லுடன், இச்சொல்லுக்கு (சந்த3ன) 'வேண்டியதை அருளும் வானோர் தருவாகிய அரி சந்தனம்' என்று பொருளாகும். தியாகராஜர், பல கீர்த்தனைகளில், 'ஸ்1ரித மந்தார', 'ஸ்1ரித பாரிஜாத' என்ற சொற்களைப் பயன் படுத்துகின்றார். அதுபோன்று, இங்கும் பொருள் கொள்ளப்பட்டது. மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், கற்பகம், அரி சந்தனம் என விரும்பியதையருளும் ஐந்து வானோர் தருக்களாகும்.

4 - 31 துரங்க3 - சம்ஸ்கிருத அகராதியின்படி 'த31 அஸ்1வ' என்ற சொல்லுக்கு 'இக்ஷ்வாகு குலத்தோன்றல்' என்று பொருளாகும். 'துரங்க3' மற்றும் 'அஸ்1வ' என்ற சொற்களுக்கு, 'குதிரை' என்று பொருளாகும். எனவே, தியாகராஜர், 'அஸ்1வ' என்ற சொல்லினை 'துரங்க3' என்று மாற்றியிருக்கலாம். ராமன் இக்ஷ்வாகு குலத்துதித்தவன்.

சில புத்தகங்களில் இச்சொல்லுக்கு 'கருட வாகனன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தியாகராஜர், பல கீர்த்தனைகளில் 'க23 துரங்க3' என்ற சொல்லினை 'கருட வாகனன்' என்று பொருள்பட பயன்படுத்தியுள்ளார். ('க23' என்றால் 'பறவை' என்று பொருள்.) ஆனால், இங்கு, இதற்கு முன் வரும் 'த31' என்ற சொல்லுடன் இணைக்கையில், அத்தகைய பொருள் கொள்ள இயலாது.

5 - சாரு நேத்ர - அழகிய கண்களோனே. இதற்கு அடுத்துவரும், 'ஸ்ரீ களத்ர' (மா மணாளன்) என்ற சொல்லினால், 'சாரு நேத்ர' - இலக்குமியின் அடைமொழியாகவும் கொள்ளலாம். அதன்படி, 'அழகிய கண்களுடைத்த இலக்குமியின் மணாளன்' என்று பொருள் கொள்ளலாம்.

அரவணிவோன் - சிவன்
தான்தோன்றி - பிரமன்
தாரக நாமம் - 'இராமா' எனும் நாமம் பிறவிக் கடலைக் கடத்துவிப்பதனால்
கடத்துவிப்பாய் - பிறவிக் கடலினைக் கடத்துவிப்பாய்

Top


Updated on 25 Apr 2009

No comments: