Monday, April 27, 2009

தியாகராஜ கிருதி - கலி நருலகு - ராகம் குந்தள வராளி - Kali Narulaku - Raga Kuntala Varaali

பல்லவி
கலி நருலகு மஹிமலு
தெலிபியேமி ப2லமன லேதா3

அனுபல்லவி
இலனு வெலயு வர 1வ்ரு2ஷபா4து3கடுகுல2
ருசி
தெலியு 3சந்த3முகா3 நீ (கலி)

சரணம்
தா3ர ஸுதுலகை த4னமுலகை ஊரு
பேருலகை ப3ஹு பெத்33 தனமுகை
ஸாரெகு ப4க்த வேஸமு கொனு வாரிகி
தாரக நாம ஸ்ரீ த்யாக3ராஜார்சித (கலி)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • கலி மனிதருக்கு (உனது) வல்லமைகளைத் தெரிவிப்பதனா லென்ன பயனெனவில்லையா?

  • புவியில் விளங்கும் உயர் எருது ஆகியவற்றிற்கு, அவலின் சுவை தெரிதல் போலும், இக்கலி மனிதருக்கு உனது வல்லமைகளைத் தெரிவிப்பதனா லென்ன பயனெனவில்லையா?

  • மனைவி, மக்களுக்காக, செல்வத்திற்காக, ஊர், பெயருக்காக, மிக்கு பெரியதனத்திற்காக, எவ்வமயமும் தொண்டர் வேடம் பூணுவோருக்கு, தாரக நாமத்தின் வல்லமைகளைத் தெரிவிப்பதனா லென்ன பயனெனவில்லையா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கலி/ நருலகு/ மஹிமலு/
கலி/ மனிதருக்கு/ (உனது) வல்லமைகளை/

தெலிபி/-ஏமி/ ப2லமு/-அன லேதா3/
தெரிவிப்பதனால்/ என்ன/ பயன்/ எனவில்லையா?


அனுபல்லவி
இலனு/ வெலயு/ வர/ வ்ரு2ஷப4/-ஆது3லகு/-அடுகுல/
புவியில்/ விளங்கும்/ உயர்/ எருது/ ஆகியவற்றிற்கு/ அவலின்/

ருசி/ தெலியு/ சந்த3முகா3/ நீ/ (கலி)
சுவை/ தெரிதல்/ போலும்/ உனது/ வல்லமைகளை ...


சரணம்
தா3ர/ ஸுதுலகை/ த4னமுலகை/ ஊரு/
மனைவி/ மக்களுக்காக/ செல்வத்திற்காக/ ஊர்/

பேருலகை/ ப3ஹு/ பெத்33 தனமுகை/
பெயருக்காக/ மிக்கு/ பெரியதனத்திற்காக/

ஸாரெகு/ ப4க்த/ வேஸமு/ கொனு வாரிகி/
எவ்வமயமும்/ தொண்டர்/ வேடம்/ பூணுவோருக்கு/

தாரக/ நாம/ ஸ்ரீ த்யாக3ராஜ/-அர்சித/ (கலி)
தாரக/ நாமத்தின்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ வல்லமைகளை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வ்ரு2ஷபா4து3 - வ்ரு2ஷ ராஜுல

3 - சந்த3முகா3 நீ - சந்த3மு கா3னி : 'சந்த3முகா3 நீ' சரியென்றால், 'நீ' என்ற சொல்லினை பல்லவியுடன் இணைத்து 'நீ மஹிமலு' என்று கொள்ளலாம். அல்லது 'சந்த3மு கா3னீ' என்பதனை 'சந்த3மு 'கா3னி'+'ஈ' என்று பிரித்து, 'ஈ' என்ற சொல்லினை பல்லவியுடன் 'ஈ கலி நருலகு' என இணைக்கலாம். அன்றி, 'சந்த3மு கா3னி' சரியென்றால், 'கா3னி' என்ற சொல்லினை பல்லவியுடன் இணைக்கலாம்.

சரணத்தில் 'தாரக நாம' என்ற சொற்களை 'தாரக நாம மஹிமலு' என்று பல்லவியுடன் இணைத்தல் போன்று, அனுபல்லவி 'நீ' என்ற சொல்லினை, இங்கு, பல்லவியுடன் 'நீ மஹிமலு' என்று இணைக்கப்பெற்றுள்ளது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - அடுகுல ருசி - பாகவத புராணத்தில் (புத்தகம் 10, அத்தியாயம் 81, செய்யுள் 9) (சுதாமா எனப்படும் குசேலரின் சரிதம்) கண்ணன் குசேலரிடம் கூறவது -

"நீ எனக்கு மிகவும் பிடித்தமானதொன்றைக் கொணர்ந்துள்ளாய். இந்த அவல், என்னை மட்டுமல்ல, இவ்வுலகம் முழுவதினையும் நிறைவு செய்யும்."

அவலின் சுவை தெரிதல் போலும் - அவலின் சுவை தெரியாதென
பெரியதனம் - அதிகாரம்
தாரக நாமம் - 'இராமா' எனும் நாமம் - பிறவிக் கடலைக் கடத்துவிக்க

Top


Updated on 28 Apr 2009

No comments: