Friday, February 20, 2009

தியாகராஜ கிருதி - ராம ஸமயமு - ராகம் மத்4யமாவதி - Rama Samayamu - Raga Madhyamavati

பல்லவி
ராம ஸமயமு ப்3ரோவரா நா பாலி தை3வமா

அனுபல்லவி
ராம த3னுஜ க3ண பீ4ம நவ க4
ஸ்1யாம ஸந்ததமு நாம கீர்தனமு
ஏமரகனு அதி நேமமு
ஜேஸே மஹாத்முலகு காமித ப2லத3 (ரா)

சரணம்
சரணம் 1
தா3ந்த 1ஸம்ரக்ஷணாக3மாந்த சர
பா43வதாந்தரங்க3 சர ஸ்ரீ
காந்த கமனீய 2கு3ணாந்தகாந்தக
ஹிதாந்த ரஹித முனி
சிந்தனீய வேதா3ந்த வேத்3
ஸாமந்த ராஜ நுத
3யாந்த பா4ந்த நிஸா1ந்த
ஸு-கருணா ஸ்வாந்த நீகிதி3 (ரா)


சரணம் 2
ப்3ரு2ந்தா3ரகாதி3 முனி ப்3ரு2ந்தா3ர்சித
4பாதா3ரவிந்த3 5ஸத்34க்த
ஜீவானந்த3 கர ஸூர்ய குல சந்த3னாரி ஹர
6நந்த3காயுத4
ஸனந்த3னாதி3 நுத குந்த3 ரத3ன வர
மந்த3ர த4
கோ3விந்த3 முகுந்த3 ஸந்தே3ஹமு
நீகெந்து3கு நாபை (ரா)


சரணம் 3
ஈ ஜக3தினி நீவவ்யாஜ கருணா மூர்திவனி
பூஜ ஜேஸிதி 73ஜ ராஜ ரக்ஷக த்யாக3-
ராஜ வந்தி3த இப4 ராஜ வந்த3ன ப2ணி
ராஜ ஸ1யன வினரா ஜக3த்பதீ
பூ4ஜா நாயக ராஜித மகுட
4ராஜ ஸன்னுத ஸு-ராஜயிபுடே3 (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! என் பங்கிற் தெய்வமே!
 • அரக்கர்களுக்கு அச்சமூட்டுவோனே! கார்முகில் நீல வண்ணா! எவ்வமயமும் (உனது) நாம கீர்த்தனத்தினை ஏமாறாது, மிக்கு நியமத்துடன் செய்யும் சான்றோர்களுக்கு, வேண்டிய பயனளிப்போனே!

 • இருடியரைக் காப்போனே! ஆகமங்களிலுறையே! நற்றொண்டருள்ளத்துறையே! மாமணாளா! கவரும் பண்பினனே! நமனுக்கு நமனின் நண்பனே! முடிவற்றோனே! முனிவரால் தியானிக்கப்படுவோனே! வேதாந்தத்தினை யறிந்தோனே! சிற்றரசரால் வணங்கப்பெற்றோனே! இராமனெனும் இருள் நீக்கியே! நற்கருணை இதயத்தோனே!

 • வானோர், முனிவர்கள் ஆகியோரால் தொழப்பெற்ற திருவடித் தாமரையோயோனே! நற்றொண்டரின் சீவனே! களிப்பருள்வோனே! சூரிய குலத் திலகமே! பகைவரை அழிப்போனே! நந்தகமெனும் வாளுடையோனே! சனந்தனர் முதலானோரால் துதிக்கப்பெற்றோனே! முல்லைப் பற்களோனே! உயர் மந்தரத்தினை சுமந்தோனே! கோவிந்தா! முகுந்தா!

 • கரியரசனைக் காத்தோனே! தியாகராசனால் தொழப்பெற்றோனே! கரியரசனால் வணங்கப்பெற்றோனே! அரவரசன் மேற்றுயில்வோனே! உலகத்தலைவா! புவிமகள் நாயகா! ஒளிரும் மகுடத்தை யணிவோனே! பிரமனால் போற்றப் பெற்றோனே! நல்லரசே!

  • கேளாய்;

  • இப்புவியில், நீ நோக்கமற்ற கருணாமூர்த்தியெனத் தொழுதேன்;

  • ஐயம் உனக்கேன் என்மீது?

  • உனக்கிது, இப்போழ்தே சமயம்; காப்பாயய்யாபதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸமயமு/ ப்3ரோவரா/ நா/ பாலி/ தை3வமா/
இராமா/ (இது) சமயம்/ காப்பாயய்யா/ என்/ பங்கிற்/ தெய்வமே/


அனுபல்லவி
ராம/ த3னுஜ க3ண/ பீ4ம/ நவ/ க4ன/
இராமா/ அரக்கர்களுக்கு/ அச்சமூட்டுவோனே/ புது/ கார்முகில்/

ஸ்1யாம/ ஸந்ததமு/ நாம/ கீர்தனமு/
நீல வண்ணா/ எவ்வமயமும்/ (உனது) நாம/ கீர்த்தனத்தினை/

ஏமரகனு/ அதி/ நேமமு/
ஏமாறாது/ மிக்கு/ நியமத்துடன்/

ஜேஸே/ மஹாத்முலகு/ காமித/ ப2லத3/ (ரா)
செய்யும்/ சான்றோர்களுக்கு/ வேண்டிய/ பயனளிப்போனே/


சரணம்
சரணம் 1
தா3ந்த/ ஸம்ரக்ஷண/-ஆக3ம-அந்த/ சர/
இருடியரை/ காப்போனே/ ஆகமங்களில்/ உறையே/

பா43வத/-அந்தரங்க3/ சர/
நற்றொண்டர்/ உள்ளத்துள்/ உறையே!

ஸ்ரீ/ காந்த/ கமனீய/ கு3ண/-அந்தக/-அந்தக/
மா/ மணாளா/ கவரும்/ பண்பினனே/ நமனுக்கு/ நமனின்/

ஹித/-அந்த/ ரஹித/ முனி/
நண்பனே/ முடிவு/ அற்றோனே/ முனிவரால்/

சிந்தனீய/ வேதா3ந்த/ வேத்3ய/
தியானிக்கப்படுவோனே/ வேதாந்தத்தினை/ யறிந்தோனே/

ஸாமந்த ராஜ/ நுத/
சிற்றரசரால்/ போற்றப்பெற்றோனே/

யாந்த/ பா4ந்த/ நிஸா1/-அந்த/
ரா/ ம/ (எனும்) இருள்/ நீக்கியே/

ஸு-கருணா/ ஸ்வாந்த/ நீகு/-இதி3/ (ரா)
நற்கருணை/ இதயத்தோனே/ உனக்கு/ இது/ இராமா....


சரணம் 2
ப்3ரு2ந்தா3ரக/-ஆதி3/ முனி ப்3ரு2ந்த3/-அர்சித/
வானோர்/ ஆகியோர்/ முனிவர்களால்/ தொழப்பெற்ற/

பாத3/-அரவிந்த3/ ஸத்3-ப4க்த/
திருவடி/ தாமரையோனே/ நற்றொண்டரின்/

ஜீவ/-ஆனந்த3/ கர/ ஸூர்ய/ குல/ சந்த3ன/-அரி/ ஹர/
சீவனே/ களிப்பு/ அருள்வோனே/ சூரிய/ குல/ திலகமே/ பகைவரை/ அழிப்போனே/

நந்த3க/-ஆயுத4/
நந்தகமெனும்/ வாளுடையோனே/

ஸனந்த3ன/-ஆதி3/ நுத/ குந்த3/ ரத3ன/ வர/
சனந்தனர்/ முதலானோரால்/ துதிக்கப்பெற்றோனே/ முல்லை/ பற்களோனே/ உயர்/

மந்த3ர/ த4ர/
மந்தரத்தினை/ சுமந்தோனே/

கோ3விந்த3/ முகுந்த3/ ஸந்தே3ஹமு/
கோவிந்தா/ முகுந்தா/ ஐயம்/

நீகு/-எந்து3கு/ நாபை/ (ரா)
உனக்கு/ ஏன்/ என்மீது/


சரணம் 3
ஈ/ ஜக3தினி/ நீவு/-அவ்யாஜ/ கருணா/ மூர்திவி/-அனி/
இந்த/ புவியில்/ நீ/ நோக்கமற்ற/ கருணா/ மூர்த்தி/ யென/

பூஜ ஜேஸிதி/ க3ஜ/ ராஜ/ ரக்ஷக/ த்யாக3ராஜ/
தொழுதேன்/ கரி/ யரசனை/ காத்தோனே/ தியாகராசனால்/

வந்தி3த/ இப4/ ராஜ/ வந்த3ன/
தொழப்பெற்றோனே/ கரி/ யரசனால்/ வணங்கப்பெற்றோனே/

2ணி/ ராஜ/ ஸ1யன/ வினரா/ ஜக3த்/ பதீ/
அரவு/ அரசன்/ (மேல்) துயில்வோனே/ கேளாய்/ உலக/ தலைவா/

பூ4ஜா/ நாயக/ ராஜித/ மகுட/
புவிமகள்/ நாயகா/ ஒளிரும்/ மகுடத்தை/

4ர/-அஜ/ ஸன்னுத/ ஸு-ராஜ/-இபுடே3/ (ரா)
அணிவோனே/ பிரமனால்/ போற்றப் பெற்றோனே/ நல்லரசே/ இப்போழ்தே/ இராமா....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - பாதா3ரவிந்த3 - பதா3ரவிந்த3

5 - ஸத்34க்த - ஸத்34க்தி : 'ஸத்34க்த' சரியாகும்.

Top

மேற்கோள்கள்
2 - அந்தகாந்தக - நமனுக்கு நமன் - மார்க்கண்டேயனைக் காக்க, யமனை காலால் சிவன் உதைத்த கதை - இச்சம்பவம் திருக்கடையூரில் நடந்ததாக அக்கோயில் தல வரலாறு கூறும் -

6 - நந்த3காயுத4 - திருப்பதி வெங்கடேசப் பெருமானின் தலை சிறந்த தொண்டராகிய 'அன்னமாச்சார்யா' இறைவனின் 'நந்தகம்' எனும் வாளின் அவதாரம் என்று கூறுவர்.

Top

விளக்கம்
1 - ஆக3மாந்த சர - இச்சொல்லுக்கு 'ஆகமங்களில் உள்ளுறைவோன்' என புத்தகங்களில் பொருள் கூறப்பட்டுள்ளது. அது சரியானால், இச்சொல் 'ஆகமாந்தஸ்1சர' என்றிருக்கவேண்டும். ஆயினும் 'அந்த' என்ற சொல்லுக்கு 'உள்ளே' என்று ஒரு பொருளும் உண்டு. எனவே 'ஆகம அந்த சர' சரியாகவும் இருக்கலாம்.

3 - யாந்த பா4ந்த நிஸா1ந்த - 'யாந்த' என்ற சொல் அகராதியில் கிடையாது. இந்த சொற்கள் (செங்கல்பட்டுக்கு அடுத்த) மதுராந்தகத்தில் உள்ள ராமர் கோயிலில் செதுக்கப்பட்டிருப்பதாகவும், நீண்ட நாள் இதற்கு பொருள் தெரியாமல் இருந்ததாகவும், பின்னர் காஞ்சி மாமுனிவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் கீழ்க்கண்டவாறு விடையளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி -

யாந்த - என்றால் ய-வுக்குப் பின்னர் வரும் 'ர' (ய ர ல வ ...);
பா4ந்த - என்றால் ப4-வுக்குப் பின்னர் வரும் 'ம' (ப ப234 ம);
இரண்டினைடும் சேர்த்து 'ராம' என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறினாராம்.
ஆக இவ்வடைமொழிக்கு 'ராம எனும் இருள் நீக்கி' என்று பொருளாகும்.

7 - 3ஜ ராஜ ரக்ஷக - இப4 ராஜ வந்த3 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு அடைமொழிகளும் கஜேந்திரனைக் குறிக்கும்.இவற்றிற்கு வேறு ஏதும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.

Top

சிற்றரசர் - அண்டையரசர் என்றும் கொள்ளலாம்
மந்தரம் - மந்தர மலை
அரவரசன் - சேடன்
புவிமகள் - சீதை

Top


Updated on 21 Feb 2009

No comments: