Saturday, February 7, 2009

தியாகராஜ கிருதி - கமலாப்த குல - ராகம் ப்3ரு2ந்தா3வன ஸாரங்க3 - Kamalaapta Kula - Raga Brndavana Saranga

பல்லவி
1கமலாப்த குல கலஸா1ப்3தி4 சந்த்3
காவவய்ய நன்னு கருணா ஸமுத்3

அனுபல்லவி
கமலா களத்ர கௌஸல்யா ஸுபுத்ர
கமனீய கா3த்ர காமாரி மித்ர (க)

சரணம்
முனு தா3ஸுல ப்3ரோசினதெ3ல்ல சால
வினி நீ சரணாஸ்1ரிதுடை3தினய்ய
கனிகரம்பு3நாகப4யமிவ்வுமய்ய2
வனஜ லோசன ஸ்ரீ த்யாக3ராஜ நுத (க)


பொருள் - சுருக்கம்
பரிதிக் குலமெனும் கலசக்கடலிலுதித்த மதியே! கருணைக் கடலே! கமலை மணாளா! கௌசலையின் நற்புதல்வா! இனிய மேனியனே! காமன் பகைவனின் நண்பனே! கமலக்கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • முன்பு தொண்டர்களைக் காத்ததெல்லாம் நிறைய செவிமடுத்து உனது திருவடிகளை நம்பினவனானேனய்யா.

  • கனிவுடன் எனக்கு அபய மளிப்பீரய்யா.

  • காப்பாயய்யா என்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கமல/-ஆப்த/ குல/ கலஸ1/-அப்3தி4/ சந்த்3ர/
கமல/ நண்பன் (பரிதி)/ குலமெனும்/ கலச/ கடலின்/ மதியே/

காவு/-அய்ய/ நன்னு/ கருணா/ ஸமுத்3ர/
காப்பாய்/ அய்யா/ என்னை/ கருணை/ கடலே/


அனுபல்லவி
கமலா/ களத்ர/ கௌஸல்யா/ ஸுபுத்ர/
கமலை/ மணாளா/ கௌசலையின்/ நற்புதல்வா/

கமனீய/ கா3த்ர/ காம/-அரி/ மித்ர/ (க)
இனிய/ மேனியனே/ காமன்/ பகைவனின்/ நண்பனே/


சரணம்
முனு/ தா3ஸுல/ ப்3ரோசினதி3/-எல்ல/ சால/
முன்பு/ தொண்டர்களை/ காத்தது/ எல்லாம்/ நிறைய/

வினி/ நீ/ சரண/-ஆஸ்1ரிதுடு3/-ஐதினி/-அய்ய/
செவிமடுத்து/ உனது/ திருவடிகளை/ நம்பினவன்/ ஆனேன்/ அய்யா!

கனிகரம்பு3ன/ நாகு/-அப4யமு/-இவ்வுமு/-அய்ய/
கனிவுடன்/ எனக்கு/ அபயம்/ அளிப்பீர்/ அய்யா/

வனஜ லோசன ஸ்ரீ த்யாக3ராஜ நுத (க)
கமலக்கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - அப4யமிவ்வுமய்ய - அப4யமிய்யவய்ய.

மேற்கோள்கள்

விளக்கம்
1 - கமலாப்த குல கலஸா1ப்3தி4 சந்த்3 - இது ஒரே அடைமொழியா அல்லது இரண்டா என விளங்கவில்லை. இதனை, இரண்டு அடைமொழிகளாகவும் பிரிக்கலாம் - 'கமல நண்பன் (பரிதி) குலத்தோனே!' என்றும் - 'கலசக்கடலின் மதியே' என்றும். அனைத்து புத்தகங்களிலும் 'பரிதி குலக் கடலின் மதி' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அப்படி, ஒரே அடைமொழியாகக் கொண்டால், 'கலசக்கடல்' என்ற சொல் பாற்கடலினைக் குறிப்பதனால் அதனை வெறும் 'கடல்' என மொழிபெயர்த்தல் கடினம். அன்றேல், இரண்டு அடைமொழிகளானால், இரண்டாவது அடைமொழியில், 'கலசக் கடலின் மதி' என விஷ்ணுவை வருணித்தல் பொருத்தமா எனவும் விளங்கவில்லை.

எனவே, பரம்பரையாக வழங்கும், புத்தகங்களில் மொழிபெயர்ப்பினையொட்டிய ஓரடைமொழியாகவே கொள்ளப்பட்டுள்ளது.

கலசக்கடல் - பாற்கடல்
கமலை - இலக்குமி
காமன் பகைவன் - சிவன்
Top


Updated on 07 Feb 2009

No comments: