Thursday, November 6, 2008

கனுலு தாகனி - ராகம் கல்யாண வசந்தம் - Kanulu Taakani - Raga Kalyana Vasanta

பல்லவி
கனுலு தாகனி பர காந்தல மனஸெடுலோ ராம

அனுபல்லவி
நன போ3ணுலபை நேரமன நோரேமி ராம (க)

சரணம் 1
1கோ4ர பூ4த பதினி ஜூசி தா3ருகாரண்ய ஸதுலு
மேர மீரி பு4வினியபதூ3ரு கல்க3 ஜேஸிரே (க)

சரணம் 2
மன மோஹனானந்த3 மத3 2சகோர நயன குந்த3
ரத3ன சந்த்3ர வத3ன ஸுந்த3ராங்க3 த்யாக3ராஜ வினுத (க)



பொருள் - சுருக்கம்

இராமா! மனம் கவர்வோனே! ஆனந்த மதம் கொண்ட சகோரத்தின் கண்களோனே! முல்லைப் பற்களோனே! மதி வதனத்தோனே! எழிலுடலோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

கண் படாத பிற பெண்டிரின் மனமெவ்விதமோ?
இளங்கன்னியரின் மீது தவறு காண வாயென்ன?
(பிச்சாடனர் வேடத்தில் வந்த) சிவனைக் கண்டு, தாருகா வனப் பெண்டிர் வரை மீறி, புவியில் அவதூறுண்டாகச் செய்தனரன்றோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கனுலு/ தாகனி/ பர/ காந்தல/ மனஸு/-எடுலோ/ ராம/
கண்கள்/ படாத/ பிற/ பெண்டிரின்/ மனம்/ எவ்விதமோ/ இராமா/



அனுபல்லவி
நன/ போ3ணுலபை/ நேரமு/-அன/ நோரு-ஏமி/ ராம/ (க)
இளம்/ கன்னியரின் மீது/ தவறு/ காண/ வாயென்ன/ இராமா/



சரணம் 1
கோ4ர/ பூ4த/ பதினி/ ஜூசி/ தா3ருகா/-அரண்ய/ ஸதுலு/
கோர/ பூத/ நாதனை/ கண்டு/ தாருகா/ வன/ பெண்டிர்/

மேர/ மீரி/ பு4வினி/-அபதூ3ரு/ கல்க3/ ஜேஸிரே/ (க)
வரை/ மீறி/ புவியில்/ அவதூறு/ உண்டாக/ செய்தனரே/



சரணம் 2
மன/ மோஹன/-ஆனந்த3/ மத3/ சகோர/ நயன/ குந்த3/
மனம்/ கவர்வோனே/ ஆனந்த/ மதம் கொண்ட/ சகோரத்தின்/ கண்களோனே/ முல்லை/

ரத3ன/ சந்த்3ர/ வத3ன/ ஸுந்த3ர/-அங்க3/ த்யாக3ராஜ/ வினுத/ (க)
பற்களோனே/ மதி/ வதனத்தோனே/ எழில்/ உடலோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/



குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - கோ4ர பூ4த பதி - சிவன் - தாருகா வன முனிவர்களின் தற்பெருமையினை அடக்குவதற்காக சிவன் பிக்ஷாடனர் வேடத்திலும் விஷ்ணு மோஹினி வேடத்திலும் அவணமாக வந்த சம்பவத்தினைக் குறிக்கும். சிவ வழிபாடு - ஆங்கிலம் - Download.

2 - சகோர - நிலாமுகப் புள் - நிலாக்கதிரைக் குடித்து மதம் கொள்வதாகச் சொல்லப்படும்
Top

விளக்கம்
இந்த கிருதி எந்த நோக்கத்தினில் பாடப்பெற்றதன்றோ, இதனால் தியாகராஜர் தெரிவிக்க விரும்புவது என்னவென்றோ விளங்கவில்லை.

1 - கோ4ர பூ4 - சிவனுடைய பரிவாரங்கள் பூத கணங்கள் என அழைக்கப்படும். காண்பதற்கு கோரமாக இருப்பதனால் அப்பெயர்

தாருகா வனப் பெண்டிர் - முனிவர்களின் மனைவியர்
Top



1 comment:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
’விளக்கம்’ பகுதியில் “எந்த நோக்கத்தினில் பாடப்பெற்றதன்றோ” என்பதில் ”எந்த நோக்கத்தினில் பாடப்பெற்றதென்றோ” என்று இருக்கவேண்டும்.
வணக்கம்
கோவிந்தசாமி