Friday, October 24, 2008

மருகே3லரா - ராகம் ஜயந்த ஸ்ரீ - Marugelara - Raga Jayanta Sri

பல்லவி
1மருகே3லரா ஓ ராக4

அனுபல்லவி
மருகே3ல சராசர ரூப
பராத்பர ஸூர்ய ஸுதா4-கர லோசன (ம)

சரணம்
அன்னி நீவனுசு அந்தரங்க3முன
தின்னகா3 வெதகி3 தெலுஸுகொண்டினய்ய
நின்னே கா3னி மதி3னென்ன ஜாலனொருல
நன்னு ப்3ரோவவய்ய த்யாக3ராஜ நுத (ம)


பொருள் - சுருக்கம்
ஓ இராகவா! அசைவன மற்றும் அசையாதனவற்றின் உருவத்தோனே! பராபரனே!
பரிதி மதியை கண்களாயுடையோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

மறைவேனய்யா?
யாவும் நீயென (எனது) உள்ளத்தினில் சரிவரத் தேடி தெரிந்துகொண்டேனய்யா;
உன்னையன்றி மனதில் மற்றவரை எண்ணவியலேன்; என்னைக் காப்பாயய்யா.

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மருகு3/-ஏலரா/ ஓ/ ராக4வ/
மறைவு/ ஏனய்யா/ ஓ/ இராகவா/

அனுபல்லவி
மருகு3/-ஏல/ சர/-அசர/ ரூப/
மறைவு/ ஏன்/ அசைவன/ அசையாதன/ உருவத்தோனே/

பராத்பர/ ஸூர்ய/ ஸுதா4-கர/ லோசன/
பராபரனே/ பரிதி/ மதி/ கண்களோனே/

சரணம்
அன்னி/ நீவு/-அனுசு/ அந்தரங்க3முன/
யாவும்/ நீ/ என/ உள்ளத்தினில்/

தின்னகா3/ வெதகி3/ தெலுஸுகொண்டினி/-அய்ய/
சரிவர/ தேடி/ தெரிந்துகொண்டேன்/ அய்யா/

நின்னே/ கா3னி/ மதி3னி/-என்ன/ ஜாலனு/-ஒருல/
உன்னை/ அன்றி/ மனதில்/ எண்ண/ இயலேன்/ மற்றவரை/

நன்னு/ ப்3ரோவு/-அய்ய/ த்யாக3ராஜ/ நுத
என்னை/ காப்பாய்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1மருகே3லரா - மறைவு ஏனய்யா? - 'தெர தீயக3 ராதா3' எனும் கௌ3ளிபந்து கீர்த்தனையில் 'மதம்' (தற்பெருமை) மற்றும் 'பொறாமை' எனும் உட்திரைகளை (மறைவுகளை) ஏன் விலக்காயோ என்று தியாகராஜர் இறைவனை இறைஞ்சுகின்றார்.

விளக்கம்

பராபரன் - யாவற்றிற்கும் அப்பாற்பட்டவன்
Top






2 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
மறைவேனய்யா? – இதனை மறைவு ஏன் அய்யா என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். ஆனால் மறைவேன் அய்யா என்று எடுத்துக் கொண்டால் ‘நான் மறைவேன்’ என்று தவறான பொருள் தரும். இதனை பின் வரும் பகுதியில் ‘மறைவு ஏனய்யா’ என்று சரியாகக் கொடுத்துள்ளீர். மறைவு ஏன் அய்யா என்று பிரித்துக் கொடுப்பது விரும்பத் தக்கது.
வணக்கம்
கோவிந்தசாமி

Vedhavyasa. Sampathkumarabhattar said...

அருமை.