Thursday, September 18, 2008

ஸ்ரீ கணபதினி ஸேவிம்ப ராரே - ஸௌராஷ்ட்ரம்


பல்லவி
ஸ்ரீ க3ண பதினி 1ஸேவிம்ப ராரே ஸ்1ரித மானவுலாரா

அனுபல்லவி
2வாக3தி4பாதி3 ஸு-பூஜல சேகொனி பா33 நடிம்புசுனு வெட3லின (ஸ்ரீ)

சரணம்
பனஸ நாரிகேளாதி3 ஜம்பூ32லமுலாரகி3ஞ்சி
34ன தரம்பு33னு மஹிபை பத3முலு க4ல்லு க4ல்லனனுஞ்சி
அனயமு ஹரி சரண யுக3முலனு ஹ்ரு23யாம்பு3ஜமுனனுஞ்சி
வினயமுனனு த்யாக3ராஜ வினுதுடு3 விவித43துல
தி4த்தளாங்கு3மனி வெட3லின (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
கணபதியைச் சேவிக்க வாரீர், பற்றுகொண்ட மானிடரே!

நாமகள் கேள்வன் ஆகியோரின் வழிபாட்டினையேற்று, நன்கு நடமிட்டுக்கொண்டு, எழுந்தருளிய கணபதியைச் சேவிக்க வாரீர்!

பலா, தேங்காய், நாவல் முதலான பழங்களையருந்தி,மிக்கு அழுத்தமாக, புவியில், பதங்களினை கலீர்கலீரென வைத்து,எவ்வமயமும், அரியின் திருவடிகளை இதயக்
கமலத்தினிலிருத்தி,பலவித (தாள) நடைகளில், தித்தளாங்கென, எழுந்தருளிய, தியாகராஜனால் போற்றப்பெற்றோனாகிய கணபதியைப் பணிவுடன் சேவிக்க வாரீர்!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ க3ண பதினி/ ஸேவிம்ப/ ராரே /ஸ்1ரித/ மானவுலாரா/
கணபதியை/ சேவிக்க/வாரீர், /பற்றுகொண்ட/ மானிடரே!/



அனுபல்லவி
வாக்3-அதி4ப/ ஆதி3/ ஸு-பூஜல /சேகொனி /
நாமகள் கேள்வன்/ ஆகியோரின/ வழிபாட்டினை/ ஏற்று/

பா33/ நடிம்புசுனு/ வெட3லின/(ஸ்ரீ)
நன்கு/ நடமிட்டுக்கொண்டு,/ எழுந்தருளிய /
கணபதியைப் சேவிக்க வாரீர்,

சரணம்
பனஸ/நாரிகேள /ஆதி3 /ஜம்பூ3 /ப2லமுல /ஆரகி3ஞ்சி/
பலா,/ தேங்காய்,/ முதலான/ நாவல்/ பழங்களையருந்தி,/

4ன/ தரம்பு33னு/ மஹிபை/ பத3முலு/ க4ல்லு க4ல்லன/ உஞ்சி/
மிக்கு/ அழுத்தமாக,/ புவியில்,/ பதங்களினை/ கலீர் கலீரென/ வைத்து,/

அனயமு/ஹரி /சரண யுக3முலனு/ ஹ்ரு23ய/ அம்பு3ஜமுனனு/ உஞ்சி/
எவ்வமயமும்,/ அரியின்/ திருவடி இணையினை/ இதய/ கமலத்தினில்/ இருத்தி,/

வினயமுனனு/ த்யாக3ராஜ/ வினுதுடு3/
பணிவுடன்/ தியாகராஜனால்/ போற்றப்பெற்றோனாகிய/

விவித4/ க3துல/ தி4த்தளாங்கு3/ அனி/ வெட3லின/(ஸ்ரீ)
பலவித/ (தாள) நடைகளில்,/தித்தளாங்கு/ என,/ எழுந்தருளிய,/
கணபதியைப் சேவிக்க வாரீர்


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

1ஸேவிம்ப ராரே - ஸேவிம்பரே

2வாக3தி4பாதி3 - வாகா3தி3பதி - வாகா3தி3பாதி3 - இங்கு பிரமனைக் குறிப்பதனால், பிற்சொன்ன இரண்டு வேறுபாடுகளும் தவறாகும்

34ன தரம்பு33னு - க4ன தரம்பு3னனு
Top


மேற்கோள்கள்

புனித தல விருக்ஷங்களின் விவரங்களுக்கு -

Sacred Trees

விளக்கம்

நாமகள் கேள்வன் - பிரமன்

தியாகராஜனால் போற்றப்பெற்றோன் - கணபதியைக் குறிக்கும்

தித்தளாங்கென - (தில்லானா) தாளத்தினை சொல்லாக்கல்

இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாடகத்தின்
ஆரம்பத்தில் கணபதியின் வருகையை சித்தரிக்கின்றது

Top






No comments: