Showing posts with label Talli Tandrulu. Show all posts
Showing posts with label Talli Tandrulu. Show all posts

Saturday, June 20, 2009

தியாகராஜ கிருதி - தல்லி தண்ட்3ருலு - ராகம் ப3லஹம்ஸ - Talli Tandrulu - Raga Balahamsa

பல்லவி
1தல்லி தண்ட்3ருலு கல பேரு கானி
இல நீ ஸரி தை3வமுலெவரே

அனுபல்லவி
2இல்லு கலஸ1 ஸமுத்3ரமு கா3கனு நீ-
கில்லாலு 3விதே3ஹ தனய4ளி (தல்லி)

சரணம்
4கி3ரிஸா1தி3 5விதீ4ந்த்3ரார்க
61ஸா1ங்காமர கோடுலு வானருலை கொலுவ
73ர சக்ர ப2ணீந்த்3ருலு ஸோத3ருலை
தகி3 வேட33 8த்யாக3ராஜ நுத (தல்லி)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • தாய் தந்தையருடையவனெனப் பெயரே யன்றி, புவியில் உனக்கீடான தெய்வம் யாரே?

    • வீடோ கலசக் கடல்; மேலும், உனக்கு இல்லாளோ விதேகனின் மகள்; பலே!

    • மலையீசன் முதலாக, விதி, இந்திரன், பரிதி, மதி, கோடிக்கணக்கான அமரர்களும், வானரராகி சேவை செய்ய,

    • சங்கு, சக்கரம், அரவரசன் ஆகியோர் சோதரராகி தகுந்து வேண்ட,

  • புவியில் உனக்கீடான தெய்வம் யாரே?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தல்லி/ தண்ட்3ருலு/ கல/ பேரு/ கானி/
தாய்/ தந்தையர்/ உடையவனென/ பெயரே/ அன்றி/

இல/ நீ/ ஸரி/ தை3வமுலு/-எவரே/
புவியில்/ உனக்கு/ ஈடான/ தெய்வம் (தெய்வங்கள்)/ யாரே/


அனுபல்லவி
இல்லு/ கலஸ1/ ஸமுத்3ரமு/ கா3கனு/ நீகு/-
வீடோ/ கலச/ கடல்/ மேலும்/ உனக்கு/

இல்லாலு/ விதே3ஹ/ தனய/ ப4ளி/ (தல்லி)
இல்லாளோ/ விதேகனின்/ மகள்/ பலே/


சரணம்
கி3ரிஸ1/-ஆதி3/ விதி4/-இந்த்3ர/-அர்க/
மலையீசன்/ முதலாக/ விதி/ இந்திரன்/ பரிதி/

1ஸா1ங்க/-அமர/ கோடுலு/ வானருலை/ கொலுவ/
மதி/ அமரர்கள்/ கோடி/ வானரராகி/ சேவை செய்ய/

3ர/ சக்ர/ ப2ணி/-இந்த்3ருலு/ ஸோத3ருலை/
சங்கு/ சக்கரம்/ அரவு/ அரசன் ஆகியோர்/ சோதரராகி/

தகி3/ வேட33/ த்யாக3ராஜ/ நுத/ (தல்லி)
தகுந்து/ வேண்ட/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தல்லி தண்ட்3ருலு - தலி த3ண்ட்3ருலு : இரண்டு சொற்களுமே தெலுங்கு அகராதியின்படி சரியாகும்.

2 - இல்லு - இலு : இரண்டு சொற்களுக்குமே ஒரே பொருள்தான். ஆயினும் எதுகை, மோனையினையின்படி 'இல்லு' சரியாகும்.

4 - கி3ரிஸ1 - மலையீசன் - சிவன் : எல்லா புத்தகங்களிலும் 'கி3ரிஸ1' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றசொற்கள் யாவும் சம்ஸ்கிருதத்தினில் இருப்பதனால், இச்சொல்லும் 'கி3ரீஸ1' என்றிருக்கவேண்டும். ஆயினும், தெலுங்கு அகராதியின்படி, இரண்டு சொற்களுமே ('கி3ரிஸ1', 'கி3ரீஸ1') சரியாகும்.

8 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ விநுத

Top

மேற்கோள்கள்
3 - விதே3ஹ தனய - விதேகன் - ஜனகன் : மிதிலையை ஆண்ட அனைத்து அரசர்களுக்கமே 'விதே3ஹ' அல்லது 'ஜனக' என்ற பெயராகும். 'மிதிலை', 'விதே3ஹ' மற்றும் 'ஜனக' என்ற பெயர்கள் ஏன் ஏற்பட்டன என தேவி பாகவதம், புத்தகம் 6, அத்தியாயம் 14 மற்றும் 15 நோக்கவும்.

மேலும், சீதை ஜனகனுக்கு, பூமியைத் தோண்டுகையில், கிடைத்த பெண்ணாகும். சீதை, முற்பிறவியில் 'குஸ1த்4வஜ' என்ற முனிவரின் மகளாவாள். இது குறித்து, வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், அத்தியாயம் 17 நோக்கவும்.

4 - கி3ரிஸ1 - வால்மீகி ராமாயணத்தின்படி, அனுமன் வாயுவின் மகன். அவன், சிவனுடைய அம்சம் (பகுதி) என கூறப்படும். இதுகுறித்து, அனுமன் - சிவனின் அம்சம் -1; அனுமன் - சிவனின் அம்சம் -2 நோக்கவும்.

Top

5 - விதீ4ந்த்3ரார்க - பிரமன், இந்திரன் மற்றும் சூரியன் : இவர்களின் புதல்வர்கள் முறையே, ஜாம்பவான், வாலி மற்றும் சுக்கிரீவன்.

7 - 3ர சக்ர ப2ணீந்த்3ருலு - சங்கு, சக்கரம், சேடன் - இவர்கள் முறையே பரதன், சத்துருக்கினன் மற்றும் இலக்குவனாத் தோன்றினர். இது குறித்து, காஞ்சி மாமுனிவரின் உரையினை நோக்கவும்.

Top

விளக்கம்
6 - 1ஸா1ங்க - மதி - வால்மீகி ராமாயணத்தினிலோ அல்லது வேறு எங்கோ சந்திரனுக்கு மகனாக எந்த வானரன் தோன்றினான் என்று காணப்படவில்லை.

கலசக் கடல் - பாற்கடல்

விதி - பிரமன்

அரவரசன் - சேடன்

Top


Updated on 20 Jun 2009